எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 மார்ச் 28 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}


மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (27) மாலையும், இன்றும் (28) மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழப்படுகின்ற மண் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் மன்னார் எமில் நகர் கிராமத்தைச் சேர்ந்த வீடு ஒன்றுக்கு விற்கப்பட்ட மண்ணில் சந்தேகிக்கப்படும் மனித எலும்புத் துண்டுகள் பல காணப்பட்டன.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) மாலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், குறித்த வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார், குறித்த விடயம் தொடர்பில் நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை (27) மாலை குறித்த வீட்டில் கொட்டப்பட்ட மண்ணில் உள்ள சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபனர் ஆகியோர் முன்னிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் அகழ்வு செய்யப்பட்டது.
இதன்போது, மேலும் மனிதனுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் மற்றும் பற்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரவு 7.45 மணியளவில் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டு, புதன்கிழமை (28) காலை 2 ஆவது நாளாக குறித்த அகழ்வுகள் இடம் பெற்றது. இதன்போதும் மனிதனுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புத் துண்டுகள், பற்கள், மண்டையோட்டு துண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
3 minute ago
21 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
21 minute ago
39 minute ago
1 hours ago