Freelancer / 2021 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - கரைதுறைபற்று வீதியில் வெடி பொருட்களின் அபாயம் உள்ளதாக கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் இ.ஹஜீதரன் தெரிவித்தார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்னர் வீதிக்கு விறகு சேகரிப்பதற்கு சென்ற நபரொருபர் வெடி பொருளில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின் அப்பகுதியில் வெடி பொருட்களின் அச்சம் உணரப்பட்டுள்ளது.
மக்கள் நடமாடுகின்ற பகுதிகளில் வெடி பொருட்களின் அபாயம் இருப்பது மக்களுக்கு உயிராபத்துகளை விளைவிக்கும் என தெரிவித்தார்.
வீதி பகுதியில் உள்ள வெடி பொருட்களை அகற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலகத்திற்கு உண்டு.
வெடி பொருட்களின் அச்சுறுத்தல், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட ஏனைய சுய தொழில் முயற்சிகளுக்கு பாதிப்புகளை உருவாக்கி உள்ளது எனவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார். R
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago