2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’வீதியின் இரு புறமும் துப்புரவு செய்யப்பட்டுள்ளது’

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு - நட்டாங்கண்டலில் இருந்து மன்னாரின் பாலம்பிட்டி வரையான வீதியின் இரு புறமும் துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.

இறுதியாக நடைபெற்ற மாந்தை கிழக்கின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாந்தை கிழக்கில் இருந்து பாலம் பிட்டி வழியாக மடு செல்லும் பக்தர்கள் நட்டாங்கண்டலுக்கும் பாலம்பிட்டிக்கும் இடையிலான இருபது கிலோ மீற்றர் தூர வீதி பற்றைகள் மூடி இருப்பதன் காரணமாக பக்தர்கள் செல்ல முடியாது இருப்பதாகத் தெரிவித்த நிலையில் மீள் குடியேற்ற அமைச்சரிடம் இருந்து பத்து இலட்சம் ரூபாய் பெறப்பட்டு மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக குறித்த வீதியின் இரு புறமும் இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது குறித்த வீதி வழியாக பக்தர்கள் மாந்தை கிழக்கு வழியாக மடு செல்வதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X