Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, பழையமுறிகண்டிக் கிராமத்திலிருந்து அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டிய குளம் ஆகிய கிராமங்களுக்கான வீதியினைப் புனரமைக்குமாறு கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழையமுறிகண்டிக் கிராமத்தில் 40 குடும்பங்களும் அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டியக்குளம் கிராமங்களில் 200 குடும்பங்களும் வாழ்கின்றன. விவசாயத்தினை நம்பி வாழ்கின்ற இக்கிராமங்களில், வீதிகள் புனரமைக்கப்படாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் நெருக்கடியினை எதிர்கொள்வதுடன், விவசாய உற்பத்திப் பொருட்களை வயல் நிலங்களிலிருந்து வீடுகளுக்கும் சந்தைகளுக்கும் எடுத்துச் செல்வதில் வீதி நெருக்கடி காணப்படுகின்றது.
இவற்றை விட ஐயன்கன்குளம் மருத்துவமனைக்குச் செல்லும் மக்கள், குறித்த வீதியினால் பயணிப்பதில் பாரிய இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மாணவர்களும் மழை காலங்களில் பாதணிகளை கைகளில் கொண்டு செல்கின்ற நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது. குறித்த இந்த 5 கிலோமீற்றர் வீதியினைப் புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago