2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

‘வீதியைப் புனரமைக்கவும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் புதுமாத்தளன் வீதி இதுவரை புனரமைக்கப்படாமையால் இவ்வீதியை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள்  பொதுமக்கள் அன்றாடம் துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஏ-35 வீதியின் இரட்டைவாய்க்கால் சந்தியிலிருந்து அம்பலவன்பொக்கணை வலைஞர் மடம் புதுமாத்தளன் ஊடாக சாலை வரைக்குமான சுமார் 13 கிலோமீற்றர் வீதி இதுவரை புனரமைக்கப்படவில்லை என்றும் இதனால் தாங்கள் போக்குவரத்துகளில் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளமையால், வீதியில் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதாகவும் இதனால் மேலும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .