2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன், எஸ்.என் நிபோஜன் 

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சிப் பகுதியில் பெண்கள் மூவர் உட்பட நால்வர், இன்று (03)  கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

35, 62, 67 வயதுப் பெண்கள் மூவரும் 29 வயது இளைஞன் இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இயக்கச்சி, பனிக்கையடி எனும் கிராமத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், வெடிப்பொருட்கள் சில இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வாளர்களால் அவ்வீடு சுற்றி வளைக்கப்பட்டு, அங்கிருந்த மேற்படி நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பல மணிநேரத் தேடுதலில் பின்னனே வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட வெடிபொருட்கள், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X