2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வெடியில் சிக்கி தஞ்சமடைந்த யானை உயிரிழப்பு: தந்தங்களும் வெட்டியெடுப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - மதவாளசிங்கன் குளப்பகுதியில் வெங்காய வெடியில் சிக்கிய காட்டு யானை, நேற்று (11) உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர், இவ்வாறு உயிரிழந்த யானையின் தந்தங்களும் வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

அத்துடன், தந்தங்கள் வெட்டப்பட்டமை தொடர்பில், முள்ளியவளை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும், அதிகாரிகள் மேலும் கூறினர்.

குறித்த யானை, திங்கட்கிழமையன்று, (09)  வெங்காய வெடியில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், விவசாயியின் காணியொன்றுக்குள் தஞ்சமடைந்தது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக, குறித்த யானையை மீட்பதற்கோ அதனை பார்வையிடவோ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்வராத நிலையில், அந்த யானை, நேற்று (11) உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X