Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் பிரச்சனையில் நடந்திருப்பது தவறு. அது யார் செய்திருந்தாலும் தவறு. மீண்டும் வெடுக்குநாறி ஆதி சிவன் கோவிலில் சிலை நிறுவப்படும். அதற்கு ஆளுநருடையதோ பிரதமருடைய அனுமதியோ பெறவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்திய வீதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற கட்சி காரியாலய திறப்பு விழாவில் கட்சி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா காரியாலயத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளை தனிப்பட்ட முறையில் அழைத்த போது, ஒரு கட்சியை தவிர ஏனைய எதிர்கட்சிகள் தேர்தல் வேண்டாம் என கோரிக்கை முன்வைத்துள்ளனர். தேர்தலுக்கு எதிராக யாரும் செயற்படமாட்டர்கள்.
1990 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை புலிகள் எதிர்த்தனர். ஆனால் நாங்கள் இதன் ஊடாக பிரச்சனையை தீர்க்க முடியும் என தெரிவித்தோம். அதனை மறுத்து துரோகத்தனம் என்றனர். இன்று என்ன நடந்தது தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும் என்ற மாதிரி நடந்திருக்கின்றது.
நானும் 30 வருடமாக பாராளுமன்றத்தில் இருந்துவருவதால் எனக்கும் அங்கிருக்க கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளும் புறமும் தெரியும். எனவே பொருத்தமான நிலையில் தேர்தல் வரும். உரிய நேரத்தில் தேர்தல் நடாத்தப்படும்.
அதேவேளை உலகத்திலே எல்லா நாடுகளும் தங்களுடைய நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் இருக்கின்றது. ஆனால் பெயர்கள் வித்தியாசப்படலாம். இலங்கையில் தமிழ் பேசும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று அந்த நிலமை இல்லை. ஆனால் நாட்டை நிர்வகிப்பதற்கு சட்டம் தேவை.
எனவே இது புதிதானதல்ல. ஆளும் கட்சிகள் எதாவது ஒன்றை செய்யும் போது எதிர்க்கட்சிகள் எதிர்பதுதான் இங்குள்ள யதார்த்தம். அந்த வகையில் எதிர்கட்சிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனரே தவிர இந்த சட்டத்தில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் இந்த பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் தொடர்பாக நாங்கள் கட்சி என்ற வகையில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் நாடாளுமன்றம் வரும்போது எங்கள் கருத்துக்களை தெரிவிப்போம். நாட்டிற்கு சட்டங்கள் தேவை.
அதேவேளை நீண்டகாலமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தச்சட்டமூலமான மாகாண சபை முறைமை ஊடாகத்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என நீண்டகாலமாக நான் சொல்லி வருகின்றேன்.
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் றோலர் படகுகளில் அத்துமீறி புகுந்து மீன்படிக்க அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெளிவாக எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்கு புறம்பாக செயற்படாது என தெரிவித்துள்ளார்.
ஆகவே வீதிசட்டம் இருக்கின்றது. அதனை மீறி நடக்கின்ற விடயங்களை கட்டுப்படுத்தப்படும் போது அது நெறிப்படுத்தப்படுகின்றது. சட்டங்களை மீறி நடக்கும் போது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025
01 May 2025