2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வெடுக்குநாறி கோவில் அபிவிருத்திக்கு ’பொலிஸார் முட்டுக்கட்டை’

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரர் கோவில் அபிவிருத்திப் பணிகளுக்கு, நெடுங்கேணி பொலிஸார் இடையூறு விளைவிப்பதாக, வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் வெடுக்குநாறி ஆதி இலிங்கேசுவரர் கோவில் செயலாளருமான து.தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மலை உச்சியில் இருக்கின்ற ஆதி இலிங்கேஸ்வரரை, மலையேறிச் சென்றே மக்கள் வழிபட்டு வருவதால், மக்கள் அந்த மலையை ஏறுவதற்கான ஏணியொன்றை மலையுடன் இணைப்பதற்கு, பொலிஸார் தடை விதித்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆலயத்தின் நீர்த் தேவைக்கான குழாய்க் கிணறு ஒன்று அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும், நெடுங்கேணி பொலிஸாரால் தடுக்கப்பட்டதாகவும் இவ்வாறு, தொடர்ச்சியாக ஆலயத்தின் ஒவ்வொரு அபிவிருத்தி வேலைகளிலும், நெடுங்கேணி பொலிஸாரின் தலையீடு காணப்படுவதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த கோவில் அபிவிருத்திக்காக, அரச நிறுவனங்கள் ஊடாக பல இலட்சம் நிதி வந்திருக்கும் நிலையில், பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக, அந்நிதிகள் திரும்பி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .