2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வெறும் கதிரைகளுடன் நடைபெற்ற கலாசார நிகழ்வு

Editorial   / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா மாவட்டக் கலாசார நிகழ்வு, நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (04) நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொள்ளாமையால், அதிகளவிலான கதிரைகள் வெறுமையாகவே காணப்பட்டன.  

 வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் கீழ், வவுனியா மாவட்டச் செயலகமும் பிரதேச செயலகமும் இணைந்து, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. 

 இருப்பினும், முறையான ஒழுங்குபடுத்தல் மற்றும் சரியான முறையில் அழைப்புகள் வழங்கப்படாததன் காரணத்தால், மாவட்டத்தின் பல கலைஞர்களும் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், பாடசாலை மாணவர்களுடனும் விருந்தினர்களுடனும் நிகழ்வு நடைபெற்றது. 

 மாவட்ட அரசாங்க அதிபர் சோமரட்ண விதானபத்திரண தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, ம.ஜெயதிலக, வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளர் முத்து முகமது உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .