Niroshini / 2021 ஜூலை 20 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
மாந்தை கிழக்கு பிரதேச எல்லைக்குள் எல்லைகளுக்குள் இருக்கும் கிராமங்களில் தொடர்ந்து ஓரிருவருக்கோ அல்லது வெளி நபர்களுக்கோ குத்தகைக்கு காணி வழங்குவதை நிறுத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம் (20), தவிசாளர் ம.தயானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, பிரதேச சபையால் கட்டப்படும் முன்பள்ளி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை மாந்தை கிழக்கு பிரதேசத்தினுள் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.
இதில் அண்மைக் காலங்களில் பிரதேச எல்லைகளுக்குள் இருக்கும் கிராமங்களில் தொடர்ந்து ஓரிருவருக்கோ அல்லது வெளிநபர்களுக்கோ குத்தகைக்கு காணிவழங்குவதை நிறுத்தி, பிரதேச கிராமங்களில் உள்ள வயற்காணி அற்ற விவசாயிகளை இலக்காக கொண்டு அவர்களுக்கு காணி வழங்க ஆவண செய்யவேண்டும் எனவும், அதன் பிற்பாடே ஏனையவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago