2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வெளிமாவட்டத்தோரால் வவுனியாவுக்கு மீண்டும் ஆபத்து

Niroshini   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-. அகரன்

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில், வெளிமாவட்டத்தில் இருந்து வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், கொரோனா விதிமுறைகளை அனைத்தும் மீறப்பட்டு வருகின்றன. இதனால், இங்கு தொற்றுகள் அதிகரிக்கும் நிலைமைகள் மீண்டும் உருவாகியுள்ளன.

இந்த நிலையில், இந்நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்தி, மீண்டும் அதிகரிக்கும் தொற்றுக்களைத் தடுத்து நிறுத்துவதற்குரிய ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை. 

நகரசபையின் கனவத்துக்கு கொண்டு செல்லப்பட்டும், எவ்விதமான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வவுனியாவுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வரும் வர்த்தகர்கள்,தமது வர்த்தக நடவடிக்கைகளை ரயில் நிலையம், இலுப்பையடி போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 

வவுனியாவை தளமாகக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வர்த்தகர்கள் நகர சபையினருக்கு வரி உட்பட வர்த்தக நிலையங்கள், ஊழியர்களுக்கு பெரும் தொகைப் பணங்களை செலவிட்டு, வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 

அத்துடன், வெளிமாவட்டத்திலிருந்து வருபவர்களினால் மீண்டும் தொற்றுக்கள் அதிகரிக்கும் நிலைமைகளும் மீள உருவாகியுள்ளது . இதனால், நகரில் மீண்டும் ஒரு முடக்கம் ஏற்படும் நிலைமைகளும் காணப்படுகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .