2025 மே 21, புதன்கிழமை

’வைத்திய அதிகாரிகள் இன்மை பாரிய பிரச்சினை’

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கான மகப்பேற்று வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளபோதும் போதிய வைத்திய அதிகாரிகள் இன்மை பாரிய பிரச்சினையாகயுள்ளதாக, மாவட்;ட பொது வைத்தியசாலைத் தகவல்களில் தெரிவிக்கின்றன.

யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீள்குடியேறி பத்து வருடங்கள் கடந்துள்ள போதும், அந்த மக்களுக்கான மருத்துவ தேவைகள் என்பது பாரிய பிரச்சனையாகவே உள்ளது என்று பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கான மகப்பேற்று வைத்திய நிபுணர் வெற்றிடம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நிரப்பப்படாத நிலையில் காணப்பட்டது.

குறித்த வெற்றிடத்தை நிரப்புமாறு ஒரு வருடத்துக்கு மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் இருந்து தினமும் 5க்கும்  மேற்பட்ட கர்ப்பவதிகள் பிரசவத்துக்கும் ஏனைய சிகிச்சைகளுக்கும் கிளிநொச்சி வவுனியா யாழப்பாணம் என வெளிமாவட்ட வைத்திய சாலைகளுக்கு அனுப்பி அதற்கான சிகிச்கைளை பெற்றுக்கொண்டனர்.

ஒரு வருடகாலத்துக்கு பின்னர்  முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கான மகப்பேற்று வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருந்தாலும் மகப்பேற்று வைத்திய அதிகாரிகள் பற்றாக்குறை பாரிய சவாலாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X