Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
பூநகரி பிரதேச வைத்தியசாலையில் நீர் நெருக்கடி எதிர்கொள்ளப்படுவதாக, நோயாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
பூநகரியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக, நீர் மூலகங்களில் நீர் வற்றியதன் காரணமாக, தூர இடங்களில் இருந்து பூநகரி நகரத்துக்கு நீரை கொண்டு வரப்பட்டு அரச அலுவலகங்கள் உட்பட அனைத்து இடங்களுக்கும் நீர் விநியோகிக்கப்படும்.
இந்நிலையில், பூநகரி பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நீர் நெருக்கடி காரணமாக, உள் நோயாளர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுவரும் நிலைமை காணப்படுகின்றது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிமனையால் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு நீர் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக நீர் நெருக்கடி அதிகரித்துள்ளது.
இதேவேளை பூநகரியின் பல கிராமங்களில் அதிகரித்துள்ள வரட்சி காரணமாக, குடிநீர்த் தேவைகளும் கூடுதலாகக் காணப்படுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
1 hours ago
5 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago
27 Aug 2025