Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வைத்தியர்களின் தொழிச்சங்க போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, மௌலவி ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில், இன்று (23) ஈடுபட்டார்.
குறித்த மௌலவி, தனது மகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது பணி்பகிஸ்கரிப்பு முடிவடைந்த பின்னரே, அந்தச் சிகிச்சையை வழங்க முடியும் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த அவர், வைத்தியசாலை வளாகத்தில், தனிநபராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வைத்தியர்களின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பால், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர் என்றார்.
குறிப்பாக மாதாந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் பல்வேறு நோயாளர்கள் தூரப்பிரதேசத்தில் இருந்துவருகைதந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் எனவும், அவர் சாடினார்.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் இந்தப் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது எனத் தெரிவித்த அவர், இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் கூலித்தொழில் செய்தே வாழ்க்கை நடத்துகின்றனர் எனவும் ஒரு நாள்தொழிலுக்கு செல்லாவிடில் அவர்களது குடும்பம் தெருவிலே வந்துவிடும் எனவும் கூறினார்.
வைத்தியர்கள் தங்களது உரிமையின் அடிப்படையில் இதனை செய்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர் ஆனால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு யார் பதில் சொல்வது எனவும் வினவினார்.
"மூன்று நாளாக வேலைநிறுத்தம் செய்கிறோம். நோயாளர்களே வைத்தியசாலைகளுக்கு வரவேண்டாம்" என்று அறிக்கையாவது போடுகின்றீர்களா? அப்படிச் சொல்லுங்கள் நோயாளிகள் வீடுகளிலேயே சாகட்டும் எனவும், மௌலவி தெரிவித்தார்.
"இந்த நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியே பதில் சொல்ல வேண்டும். மூன்று நாள்களுக்குள்ஒரு தீர்வை எட்டமுடியாதா? இந்தச் சந்தர்ப்பத்தில் யாராவது மரணத்தை சந்தித்தால் நீங்கள் மனிதர்களிடத்தில் தப்பலாம். இறைவனிடத்தில் தப்ப முடியாது.
"எனவே, மனிதர்களின் உயிரோடு தொடர்புடைய சுகாதாரத்துறையினரின் பிரச்சினைகளை தீர்த்து, ஏழைமக்களின் பிரச்சினையில் கவனம் எடுக்குமாறு இந்த அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago