2025 ஜூலை 02, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (01.01.2012 - 07.01.2012)

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (01.01.2012 - 07.01.2012)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் புதிய வழிகள் உருவாகும். நீண்டநாள் தாமதமான காரியங்கள் விரைவில் நற்பலனை தரும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறவினர்களுடன் வெளிப் பிரயாணங்கள் சென்று வருவீர்கள். மனதுக்கு நிறைவு தரும் நல்ல செய்திகள் கிடைக்கும். முயற்சியுடன் செய்யும் பணிகளில் அதிக லாபம் ஏற்படும். வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடி வருவதுடன் மேல் அதிகாரிகளின் அனுசரணை பக்கபலமாக அமையும். இக்காலகட்டங்களில் நன்மையான செயல்களினால் மனதுக்கு திருப்தியும் அமைதியும் கிடைக்கும். 

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: பிரம்மா
அதிர்ஷ்ட தெய்வம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களிடையே  அன்யோன்யம் கூடுதலாக காணப்படும், இதனால் மகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். இடையிடயே வீண் அலைச்சல், மன குழப்பம் ஏற்படும். காரியங்கள்; அனைத்தும் தடைப்படும். பெண்களுடன் பேசும்போது வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். வரவுக்கு மீறிய செலவுகளினால் பணப் பிரச்சினைகள் ஏற்படும், பிறருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலைகள் உருவாகலாம்.

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உடலில் காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் நிலை உருவாகலாம். சாப்பாட்டில் வெறுப்பு காணப்படும், இதனால் உடல் நலம் பாதிப்படையும். மனதளவில் கஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை நிலவும் இதனால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். தனலாபம் உண்டாகும். பிறரின் பேச்சைக் கேட்டு தேவையற்ற பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதுடன் பல வாய்ப்புக்கள் பின்தள்ளப்படும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உருவாகும். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வி; அடையும். பெண்களினால் மகிழ்ச்சி உண்டாகும். பண பிரச்சினை உண்டாகும். தலைவலி, மன பயம் காணப்படும். வாகன சாரதிகளுக்கு தூர பிரயாணங்களின் மூலம் அதிக லாபம் ஏற்படும். வீண் செலவுகள் உண்டாகும். சாப்பாட்டில் வெறுப்பு தோன்றும், இதனால் உடல் நலம் பாதிப்படையும். மனதில் சோர்வுகள் தோன்றும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும். இக்காலகட்டங்களில் எந்த காரியத்தையும் தனித்து நின்று செயல்படுவதனால் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு மகான்களுடைய தரிசனங்கள் கிடைக்கப்பெறும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும்பொழுது கவனமாக இருத்தல் அவசியம். தூர தேசத்தில் இருந்து  வெற்றியான செய்திகள் கிடைக்கும். பெண்களுடன் விவாதங்களில் ஈடுபட நேரிடும். மற்றவர்களினால் பிரச்சினை உண்டாகும். வேண்டாத செலவுகளால் வேதனையடைய நேரிடும்;. மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடைய  வருகையினால் மகிழ்ச்சி நிலவும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் தோல்விகளை புத்திசாலித்தனமாக வெற்றிகொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




உத்திரம் 2, 3, 4, அஸ்தம் சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பலவகையில் சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் கஷ்டம் தோன்றும். உயர் அதிகாரிகளுடன் கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளில் நிதானம் தேவை. இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும். வியாபாரத்தில் பல அரிய நுட்பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். இதனால் பணவரவுகள் அதிகரிக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்க கூடும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கும். இக்காலகட்டங்களில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடுவது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
ஜனவரி 02ஆம் திகதி மாலை 3.23 மணியிலிருந்து ஜனவரி 04ஆம் திகதி காலை 4.04 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடிச்சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு மனதில் பயங்கள், குழப்பங்கள் வந்து நீங்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் தடைப்படக்கூடும். பணப் பிரச்சினை ஏற்படும். தலைவலி, காய்ச்சல் மற்றும்  மனதுக்கு பயம் போன்றவை உண்டாகும். தீயவர்களுடைய நட்பினால் நஷ்டங்கள் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் காணப்படும். குடும்பத்தில் பெண்களுடன் விட்டுக்கொடுத்து செயல்படவும். வெண்மையான ஆடைகளை அணியலாம். நமது வாழ்க்கையில் முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும். இவ்வார இறுதியில் எந்த விடயத்தையும் பலமுறை சிந்தனை செய்து பின்னர் முடிவெடுப்பது சிறந்ததாகும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
ஜனவரி 04ஆம் திகதி காலை 4.04 மணியிலிருந்து ஜனவரி 07ஆம் திகதி மாலை 2.57 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு செயல்களில் தவறுகள் உண்டாகும். மனதில் சில சஞ்சலங்கள், அலைச்சல்கள் காணப்படும். சாதனைகள் அனைத்தும் வெற்றியடையும், பிறர் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். பணப் பிரச்சினைகள் அலைச்சலையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஆகவே பணம் சேமிப்பதில் கடின உழைப்பு அவசியம். மேல் அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீணான பிரச்சினைகள் தோன்றி மறையும். வேண்டாத உணவினால் பிரச்சினைகள் உண்டாகும். சில இடமாறுதல்கள் லாபகரமாக அமையும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. இவ்வார இறுதியில் உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் முயற்சியுடன் செய்யும் காரியங்களில் நற்பலனை அடைவீர்கள். குடும்பத்தில் பெண்களின் அக்கறை அதிகரிக்கக்கூடும். நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும், இதனால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தனலாபம் கிட்டும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் உல்லாச பயணங்கள் சென்று வரலாம். புதிய நண்பர்கள் தேடி வருதல். குடும்பத்தில் சகோதர சகோதரர்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும், முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும், மகிழ்ச்சியான வாரம் இது.

அதிர்ஷ்ட திகதி: 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




உத்திராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும். மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். காரியங்கள் அனைத்தும் தடைப்படும். வியாபாரத்தில் புதிய பிரச்சினைகள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு சற்று காலதாமதத்திற்கு பின் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையினால் பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளுக்கு செலவிடும் சூழ்நிலை உருவாகலாம். பெண்களுடன் விவாதங்கள் தோன்றும். ஒவ்வாத உணவினால் அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். நலனில் அதிக கவனம் தேவை. மற்றவர்களினால் பிரச்சினைகள் காணப்படும். இதனால்  துன்பமடைய நேரிடும். இக்காலகட்டங்களில் புதிய வேலைத்திட்டங்களை தவிர்ப்பது நன்மையை தரும்.

அதிர்ஷ்ட திகதி: 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் புதிய வழி கிடைக்கும், இதனால் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு அழகிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கையினால் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சி செய்தால் அனைத்திலும் வெற்றியடையலாம். முயற்சியுடன் செய்யும் பணிகளில் அதிக லாபம் ஏற்படும். வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடி வருவதுடன் மேல் அதிகாரிகளின் அனுசரணை பக்கபலமாக அமையும். இக்காலகட்டங்களில் நன்மையான செயல்களினால் மனதுக்கு திருப்தியும் அமைதியும் கிடைக்கும். இக்காலகட்டங்களில் தியானங்கள் வழிபாடுகள் மனதுக்கும் உடலுக்கு உற்சாகத்தை தரும்.

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: பிரம்மா
அதிர்ஷ்ட தெய்வம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே...!

இந்தவாரம் உங்களுக்கு சகோதர சகோதரிகளின் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் உண்டாகும். நன்மையான காரியங்களில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். நண்பர்களுடன் ஒன்றிணைந்து புதிய வியாபார தொடர்பான திட்டங்களை மேம்படுத்தல். வெண்மையான ஆடைகளை அணியலாம். அறுசுவையான உணவுகள் கிடைக்கும். பெண்களுடன் தேவையற்ற பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதை தவிர்க்கவும். பணப் பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தக்கூடும். பணம் சேமிப்பதில்; அதிக கண்ணோட்டம் தேவை. இக்காலகட்டங்களில் ஆன்மீக சிந்தனைகள் தியானங்களில் அதிக அக்கறை செலுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .