2024 மே 08, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (01.05.2011 - 07.05.2011)

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (01.05.2011 - 07.05.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் பெற்ற, எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பான முயற்சிகளுக்கு அரசாங்க உத்தியோகத்தர்களின் உதவிகள் சாதகமாக அமையும். நிம்மதியான உறக்கம் நிறைவாக கிடைக்கும். நீண்டநாள் பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் ஒன்று சேரக்கூடும். தேவையற்ற பிரச்சினைகள் தேடிவந்தாலும் அதிலிருந்து விலகி நிற்கவும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் அன்பும் அக்கரையும் மகிழ்ச்சி தரக்கூடும். பணகஷ்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், ஆகவே வரவுக்கேற்ற செலவுகளை மேற்கொள்ளவும். இக்காலகட்டங்களில் இறைவாழிபாடுகள், பிரார்த்தனைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவதால் துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 06
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

முன்கோபம் அதிகம் கொண்ட மற்றவர்களை எளிதில் நம்பாத இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய காரியங்களில் சிறு தடைகள், தோல்விகள் வந்து நீங்கும், சிந்தித்து செயல்படவும். வேண்டாத பிரச்சினைகளில் முன்னிற்பதால் அது நமக்கே பகையை ஏற்படுத்தும். நண்பர், உறவினர்களுடன் பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபார உத்தியோகத்தர்கள் தமது வேலைகளை பொறுப்புடன் மேற்கொள்வார்கள், எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இக்காலகட்டங்களில் தீயவர்களை கண்டு பயம் கொள்ளாது துணிந்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பிறரின் துன்ப நேரங்களில் கருணை உள்ளத்தோடு கரம் கொடுக்கும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி பல புதிய வாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். பெண்களுக்கு அழகிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கும். தொலைதூர பயணங்களின்போது உறவினர் அல்லது நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். உடலால் சில சிரமங்கள் ஏற்படும், சாப்பாட்டில் விருப்பமின்மை தோன்றும், நலனை பாதுகாக்கவும். குடும்பத்தில் சொந்த பந்தங்களின் ஒற்றுமை பலப்படும். விநோத விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் எச்சந்தப்பத்திலும் நல்ல குறிக்கோள்களுடன் செயல்படுவது அவசியம் ஆகும்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

சிறிய விடயத்தையும் பெரிய அளவில் கற்பனை செய்யும் சுபாவும் அமைதியாக செயல்படும் கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களினால் சிலவிதமான சிக்கல்கள் ஏற்படும். பெண்களுடன் மனகசப்புக்கள் தோன்றி மறையும், வார்த்தைகளில் நிதானம் தேவை. தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களுடனும் மற்றும் அதிகாரிகளுடனும் பகை ஏற்படக்கூடும். இசையில் அதிக நாட்டம் காட்டுதல். அரசாங்க வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் பெரியார்களின் உபதேசங்கள் நல்வழியை ஏற்படுத்தும். தூய்மையான ஆடைகளை அணியலாம். இக்காலகட்டங்களில் நமது வாழ்க்கையில் பல துன்பங்கள் மத்தியில் பிறரின் உதவிகள் பக்கபலமாக இருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பாராட்டுக்களை அதிகம் விரும்பாத எதிலும் தனித்து செயல்பட வேண்டுமென்ற கொள்கை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு உற்சாகத்துடன் நல்ல காரியங்களை தொடங்கலாம், மனக் கவலைகள் நீங்கி நிம்மதியான தூக்கம் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுடன் பேசும்பொழுது பொறுமையுடன் வார்த்தைகளை பிரயோகிக்கவும். புதிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ள அரசாங்க  உழியர்களின் நட்புறவுகள் அனுகூலத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். புதுமையான பொருள் காணக் கிடைத்தல். புதிய நண்பர்களின் நட்புக்கள் கிடைக்கும். இக்காலகட்டங்களில் நாம் செய்யும் செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் தளர்வின்றி முயற்சி செய்யவும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

யாரிடமும் எளிதில் பழகாத, பழகியவர்களை எச்சந்தர்ப்பத்திலும் மறவாத உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...!

இந்தவாரம் உங்களுக்கு குடும்ப உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். எக்காரணம் கொண்டும் பிறரின் பிரச்சினைகளை பேசுவதை தவிர்க்கவும். பெண்களுடன் அனுசரித்து செயல்படுவதால் நன்மதிப்பை பெறுவீர்கள். அறுசுவையான உணவு உண்ணலாம். நண்பர்களுடன் உல்லாச பயணங்கள் செல்லும்போது மிக கவனம் தேவை. காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். நன்மையான காரியங்களை செய்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைப்பதுடன் இதனால் மனஅமைதி ஏற்படும். இக்காலகட்டங்களில் வாழ்க்கை தரத்திற்கேற்ப செலவு மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சந்திராஷ்டமம்
மே 01ஆம் திகதி மாலை 11.15 மணியிலிருந்து மே 04ஆம் திகதி காலை 10.44 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

வாழ்க்கையில் யாருக்கும் இடையூறின்றி சுற்றி திரியும் பறவைகளை போல் சுதந்திரமாக வாழ விரும்பும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நீண்டதூர பயணங்கள் செல்வதால் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக் கூடும். உயர் அதிகாரிகளின் அனுசரணை புதிய வாய்ப்புக்களுக்கு வழிவகுக்கும். எதிர்பார்த்த தனலாபம் கிட்டும். பொழுதுபோக்குக்காக அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் பல நவீன சாதனங்களை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். வீடு அல்லது புதிய வேலை சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களுடன் இணைந்து புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பொருள் சேர்க்கை ஏற்படும். இக்காலகட்டங்களில் பல புதிய காரியங்களை தொடங்கக் கூடியதாயிருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்

மே 04ஆம் திகதி காலை 10.44 மணியிலிருந்து மே 06ஆம் திகதி மாலை 08.31 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

எப்பொழுதும் வெகுளியாக பேசும் குணமும் யாரிடமும் எதையும் எதிர்பாராத தன்மையும் கொண்ட விருட்சிக ராசி அன்பர்கள்..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபார முன்னேற்றத்தில் போட்டிகளும் சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புண்டு, நவீன வேலைப் பணிகள் பண நஷ்டத்தை ஏற்படுத்தும். உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியத்தில் பரிபூரண கவனம் செலுத்தவும். தீய நண்பர்களுடன் அனாவசிய பேச்சுவார்த்தைகள் பகை ஏற்படுத்தக்கூடும். குடும்ப உறவினர்களின் மூலம் நல்ல செய்திகளை கேள்விப்படுவீர்கள். அறிமுகமற்ற நபர்களின் உதவிகளை நாடுவதனால் அது சங்கடத்தை ஏற்படுத்தும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் பல தவறுகள் ஏற்பட்டாலும் அவற்றை சரிசெய்து நல்ல உள்ளத்தோடு செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


சந்திராஷ்டமம்
மே 06ஆம் திகதி மாலை 8.31 மணியிலிருந்து மே 08ஆம் திகதி காலை 04.05 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எல்லோரிடமும் பண்பாக பேசும் குணமும் பிறரை அனுசரித்து நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பல திறமையான சாதனைகளினால் வாழ்க்கை மென்மேலும் முன்னேற்றம் அடையலாம். பெரியார்களின் அறிவுரைகள் நம்பிக்கை தரும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். நண்பர்களுடன் இணைந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெண்மையான ஆடைகளை அணியலாம். எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமின்றி வந்து சேரும். குடும்பத்தில் பெண்கள் உற்சாகத்துடன் தமது வேலைகளை செய்துமுடிப்பார்கள். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். இக்காலகட்டங்களில் இறைவன் அருளால் வாழ்க்கையில் பல வழிகளில் நன்மைகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கவலைகளை மறந்து களிப்புமிகு முகத்துடன் கனிவாகப் பேசும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பெண்களுடன் தேவையற்ற மனகசப்புக்கள் ஏற்படும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும். எதிர்பாராத புதிய செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்தக்கூடும். இறை தியானங்கள் பிரார்த்தனைகளில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். நிம்மதியான உறக்கம் இனிதே கிடைக்கும். புதிய வேலை அல்லது தொழில் மாற்றத்திற்கு வழியுண்டு. மேல் அதிகாரிகளுடன் அனாவசிய பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். இக்காலகட்டங்களில் கடின முயற்சிகளினால் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற்றம் அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஊறுமிக்க எண்ணங்களும் கம்பீரமான தோற்றமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தூரத்திலிருந்து நெருங்கிய நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். கூட்டுத்தொழிலை விரிவுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். பெண்களுக்கு அழகிய ஆடை அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். பொழுதுபோக்குகளுக்கு வேண்டாத செலவுகளை மேற்கொள்ளுதல். ஆன்மீக யாத்திரைகள் பயணங்களின் போது மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறவினர்களின் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து நலனை பாதுகாக்கவும், இக்காலகட்டங்களில் பிறரின் தவறுகளை நாம் மன்னித்து வாழ்வதனால் நன்மை உண்டாகும்.  

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

எதிலும் கலை நுணுக்கத்துடன் காரியங்களை செய்யும் மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படுதல், இதனால் உடலால் சில சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். புதிய வேலை முயற்சிகள் அலைச்சலை ஏற்படுத்தக் கூடும். சிலர் தமது பணிகளில் ஈடுபடும்போது தடுமாற்றங்களும் தடைகளும் ஏற்படும். தீய நண்பர்களுடன் சேர்ந்து வீண் பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நன்று. பணவரவு சிறிது தாமதத்தை ஏற்படுத்தக் கூடும். வியாபார திட்டங்கள் மந்த நிலையை ஏற்படுத்தும். மனசஞ்சலங்கள் கவலைகள் தோன்றி மறையும். தூய்மையான ஆடைகளை அணியலாம். இக்காலகட்டங்களில் எந்த காரியத்தையும் முன்னெடுக்கும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X