2024 மே 07, செவ்வாய்க்கிழமை

இந்தவார பலன்கள் (02.01.2011 - 08.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (02.01.2011 - 08.01.2011)
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

மனதில் வஞ்சகமின்றி எதிலும் குழந்தையாக செயல்படும் குணமும் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் அதிக செலவுகளை மேற்கொள்வதனால் பணப்பிரச்சினைகள் ஏற்படும். கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம். குடும்பத்தாருடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதால் மனஅமைதி கிடைக்கும். வெண்மையான உடைகளை அணியலாம், புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் தொடங்கலாம். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், நலனை பாதுகாக்கவும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. பெண்களின் அனுசரிப்புக்கள் மகிழ்ச்சியை தரக்கூடும். நீண்டநாள் எதிர்பார்த்த நண்பர்களின் நட்புக்கள் கிடைக்கும். வார இறுதியில் இறைவனை முழு மனதோடு பிரார்த்திப்பதால் நன்மைகள் வந்து சேரும்.  

அதிர்ஷ்ட திகதி : 08
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல், நீலம்
வழிபாடு : நவகிரகம்




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தற்பெருமை இன்றி தனிதிறனால் எதையும் சாதிக்கும் ஆற்றலும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் அரச ஊழியர்களின் மூலம் சில சேவைகள், உதவிகள் கிடைக்கக்கூடும். குடும்ப உறவினர்களுடன் உல்லாச பிரயாணங்களை உற்சாகத்துடன் மேற்கொள்வீர்கள். சுவையான உணவுகளை உண்ணலாம். திட்டமிட்டு செயல்படுவதனால் முன்னேற்றம் அடையலாம். பகைவர்களின் பிரச்சினைகளின்போது நண்பர்களின் ஆதரவு பயனுள்ளதாக அமையும். அரசாங்க வேலை வாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். பெண்களுடன் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதால் மனசஞ்சலங்கள் ஏற்படும். அழகிய ஆடை, உபகரணங்கள் பரிசாக கிடைக்கும். வார இறுதியில் அன்றாட பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி : 03
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு : குருபகவான்

சந்திராஷ்டமம்:
ஜனவரி 02ஆம் திகதி காலை 01.54 மணியிலிருந்து ஜனவரி 05ஆம் திகதி காலை 9.54 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு : இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

புத்தியை ஆயுதமாக கொண்டு காரியங்களை சாதித்து வெற்றி நடைபோடும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் குடும்பத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சில சுபகாரியங்கள் நடைபெறும். வியாபார உத்தியோகத்தர்கள் தமது வேலைத்திட்டங்களை சுறுசுறுப்புடன் செயல்படுத்தலாம். திடீர் பயணங்கள் செல்வதன் மூலம் புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம். பெண்களின் ஆதரவு அதிகரிக்க கூடும். உழைப்புக்கேற்ற ஊதியங்களை உடனுக்குடன் பெறுவீர்கள். விசித்திரமான பொருட்களை காணக்கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நவீன சாதனைகளை வெளிக்காட்டி உயர்வடைவார்கள். இயற்கையான உணவு, உயர்வான உடல் நிலைக்கு பலன் தரும். வார இறுதியில் பெரியார்களின் புத்திமதிகள் வாழ்க்கையில் நன்மையான பாதைக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 05
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
வழிபாடு : சிவன் (சந்திரன்)

சந்திராஷ்டமம்:
ஜனவரி 05ஆம் திகதி காலை 09.54 மணியிலிருந்து ஜனவரி 07ஆம் திகதி மாலை 08.16 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு : இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

எதிலும் வெளிப்படையாக பேசாத தன்மையும் பிறர் பிரச்சினைகளை பேச விரும்பாத மாறுபட்ட குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் நீண்டநாள் எதிர்பார்த்த நண்பர்களின் சந்திப்புக்கள் கிடைக்கும். அழகிய ஆடை, உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகத்துடன் பணிகளை செய்யலாம். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். அரச உத்தியோகஸ்தரால் சில வேலைவாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும். நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை தவிர்க்கவும். வெளிதேசங்களிருந்து இன்பகரமான செய்தி வாழ்க்கை புதிய வழியை காட்ட உதவும். வார இறுதியில் நவீன சாதனைகளை கொண்டு தொழிலை மேலும் விரிவுபடுத்துவதனால் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி : 07
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
வழிபாடு : பார்வதி

சந்திராஷ்டமம்:
ஜனவரி 07ஆம் திகதி மாலை 8.16 மணியிலிருந்து ஜனவரி 10ஆம் திகதி காலை 8.30 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு : இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


 

மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பிறருக்கு நல்வழிகாட்டியாக இருக்கும் உறவினர்கள்மேல் அதிக அன்பும் ஆதரவும் வெளிப்படுத்தி தன்வசப்படுத்திக்கொள்ளும் கம்பீரமான சிம்மம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் கடினமான வேலைத்திட்டங்களை முடிப்பதற்கு அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள். உயரதிகாரிகளினால் அனாவசிய பிரச்சினைகள் தேடிவரக்கூடும், பொறுமையுடன் செயல்படவும். சுற்றத்தின் நண்பர்கள், உறவினர்கள் வருகையினால் குதூகலம் ஏற்படும், மேலும் சுகமான உணவுகள் இனிதாக கிடைக்கும். குடும்பத்தில் அக்கறை அதிகரிக்கக்கூடும். அரசாங்க ஊழியர்களின் சேவை, உதவிகள் தேடிவர வாய்ப்புண்டு தூய்மையான உடைகளை அணியலாம். புதிய செய்திகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும், வார இறுதியில் மனதில் உள்ள கவலைகள் மறைந்து இறைவன் அருளால் வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி : 02
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு : சிவன் (சந்திரன்)



 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மென்மையான உணர்வுகளும் தோற்றத்தை கண்டு எடைபோட முடியாத சாந்தமான குணமும் பெற்ற கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் புதிய தொழில் திட்டங்களை செயல்படுத்தும்போது சில இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் இன்ப துன்பங்களில் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து செயல்படுவார்கள். தூரத்திலிருந்து வரும் செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு ஒவ்வாத உணவினால் அஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படுவதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். வார இறுதியில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த செலவுகளை தவிர்த்து சேமிப்புக்களை அதிகரிப்பது நல்லது.  

அதிர்ஷ்ட திகதி : 07
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு : பிரம்மா




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

செயல்களில் வித்தியாசமாக இருக்க நினைக்கும் சாதாரண விடயத்தைக்கூட ஆழமாக சிந்திக்கும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் நவீன சாதனைகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். இசையில் ஈர்ப்பு அதிகரிக்கக்கூடும். வியாபார உத்தியோகஸ்தர்கள் தமது கடமையை சரிவர செயல்படுத்துவதன் மூலம் உரிய லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். குடும்பத்தில் உறவினர்களின் செல்வாக்கு அதிகரிக்கக்கூடும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்புக்கள் திறமைக்கேற்ப அமையும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். வெளிபிரயாணங்கள் பயணிப்பதால் நெருங்கிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பெரிய மனிதர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற சந்தர்ப்பம் கிடைக்கும். வார இறுதியில் இறைவனை நம்பிக்கையோடு தரிசித்து செயல்படுவதனால் மனதில் உற்சாகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 02
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு : சிவன் (சந்திரன்)





விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கடமைகளை செய்தாலே கடவுளுக்கு செய்வது போன்றது என எண்ணும் சமுதாயத்துக்கு கட்டுப்பட்டு செயல்படும் விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் மனதில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியோடு உல்லாச பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். வியாபார வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரச உதவிகள் கிடைக்கக்கூடும். குடும்ப உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். புதிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். விடாமுயற்சியுடன் செயல்படுவதனால் அதிக பணவரவு ஏற்படும். பெண்களுடன் தேவையற்ற பேச்சுக்களினால் மனஸ்தாபம் ஏற்படும். வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். வார இறுதியில் சிந்தித்து செயல்படுவதால் நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

அதிர்ஷ்ட திகதி : 01
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு : சிவன் (சூரியன்)




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வேற்றுமையில்லாது நட்பாக பழகி பிறரை கவரும் நல்ல உள்ளம் கொண்ட தனசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் செய்யும் சில காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும். பெண்கள் குடும்ப பணிகளை அக்கறையுடன் மேற்கொள்வார்கள். கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம். உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும். பணவரவுகளுக்காக அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள் செலவுகள் சற்று அதிகரிக்கக்கூடும். நீண்டநாள் எதிர்பார்த்த தகவல்கள் நண்பர்கள் மூலம் வந்து சேரும். விசித்திர பொருள் காணக்கிடைத்தல். தூய்மையான ஆடைகளை அணியலாம். நிம்மதியான தூக்கம் உடலுக்கு புத்துணர்ச்சி தரும். வார இறுதியில் மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 02
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
வழிபாடு : பார்வதி




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை கண்டு துவளாமல் புன்னகையுடன் செயல்படும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நல்ல காரியங்கள் செய்வதனால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும். ஆன்மீக தியானங்கள், யாத்திரைகள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். சில பொருள் திருட்டுக்களினால் மனதில் பயம் உணர்வு ஏற்படும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். தொழிலில் புதிய சாதனங்களை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். நண்பர்கள் மூலம் அழகிய ஆடை, அணிகலங்கள் பரிசாக கிடைக்கும். மனதால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகையினால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும். வார இறுதியில் எதிர்பாராத புதிய செய்திகள் மனஆறுதலை தரும்.

அதிர்ஷ்ட திகதி : 03
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு : குருபகவான்



 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

சொல்லிலும் செயலிலும் பக்குவமாக நடந்துகொள்ளும் திறனும் எதையாவது செய்து கொண்டே இருக்கவேண்டும் என்ற மனநிலையும் உள்ள கும்பராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் போட்டிகள் விலகி நவீன தொடர்புகள் தேடிவரக்கூடும். இதனால் அதிக பணவரவு ஏற்படும். அறுசுவையான உணவுகள் கிடைக்கும். இசையில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள். விநோத விளையாட்டுக்களில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கக்கூடும். பெண்களின் அன்பும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கும். வார இறுதியில் உடலை, மனதை அக்கறையுடன் பேணிப் பாதுகாப்பதால் வாழ்வில் துயரங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திகதி : 07
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு : பிரம்மா




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

ஒரு கை செய்த உதவி மறு கை அறியாத வண்ணம் சுதந்திரமாக செயல்படும் மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகத்தோடு நன்மையான செயல்களில் ஈடுபடலாம்;. பொருள் வரவு ஏற்படக்கூடும். வியாபார முன்னேற்றத்திற்காக அரச ஊழியர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும். சில இடமாற்றங்களின்போது  பிறரின் உதவிகள் பக்கபலமாக இருக்கும். புதுமையான பொருள் காணக் கிடைத்தல். வார இறுதியில் உறவினர்களுடன் வெளிப் பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 06
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு : பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X