2025 ஜூலை 05, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (03.10.2010 – 09.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (03.10.2010 – 09.10.2010)
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சொல் - செயல்களில் தெளிவும் சஞ்சல மனம் பிறகு தெளிவு உடையவர்களான மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் நவீன திட்டங்கள் நடைமுறைப்படுத்த வாய்ப்புக்கள் தேடி வருவதுடன் அதன் மூலம் பணவரவு கூடும். குடும்பத்தில் நலன்விரும்பிகளின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். அனாவசிய பிரச்சினைகளில் தலையிடுவதால் அது நமக்கே கவலை ஏற்படுத்தும். அறிமுகமற்ற நட்புக்கள் துன்பங்களை ஏற்படுத்தலாம், இதனால் மனதளர்வு ஏற்படும். உடலுக்கு ஒவ்வாத உணவால் உடல் உபாதைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவது நல்லது. நீண்ட தூர செய்திகள் மன அமைதியை தர கூடும். கடின உழைப்பினால் தகுந்த பலனை காண்பீர்கள். சாதுக்கள், மகான்களை தரிசித்து ஆசிர்வாதம் பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா


 


கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் நீங்கள் புதிதாக செயல்படுத்த உள்ள திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். வெளிபிரயாணங்களில் ஈடுபடும்போது பிறர் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் பிணைப்பு வலிமைபெறும். தொழிலை மாற்றி விரிவுபடுத்த சிலரின் ஆலோசனை லாபகரமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புண்டு. குடும்பத்தில் பெண்களின் அன்பும் பாசமும் நம்பிக்கை தரும். மேலதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீண் சகவாசங்களை தவிர்க்கவும். தேவையற்ற வாக்குவாதங்கள் மனசங்கடங்களை உருவாக்க கூடும். ஆகவே வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். இந்தவார இறுதியில் பெரியமனிதர்களின் அன்பும் ஆசிர்வாதமும் வாழ்க்கைக்கு முன்மாதியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி


 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தீவிரமோ தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு பணவரவுகளில் தாமத்தை ஏற்படுத்த கூடும். எனவே பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் எடுப்பது நல்லது. உயர் அதிகாரிகளின் மறைமுக செயல்களினால் வியாபார முன்னேற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு, அவதானத்துடன் செயற்படவும். குடும்பத்தில் பெண்களின் எதிர்பாராத ஆதாயம் அதே சமயம் எடுக்கும் முடிவுகள் திருப்திகரமாக இருக்கும். வெளிதேசங்களிருந்து வரும் செய்திகள் மனநிறைவை தரக்கூடும். ஆரோக்கியமற்ற உணவால் தேக சுகத்தில் பாதிப்பு ஏற்படும், ஆகவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். நீண்ட நாட்களின் பின் தொலைந்த பொருள் கிடைக்க வாய்ப்புண்டு. குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதால் நீண்ட ஆயுளை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்  
வழிபாடு: பெருமாள்

 
 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பும் கொண்ட கடகராசி  அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு புதிய திட்டங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். தொழிலை விரிவுபடுத்தி அதன் மூலம் தனலாபத்தை அடைவீர்கள். அரசாங்கத்தினால் எதிர்பாராத சலுகைகள் உற்சாகத்தை தரக்கூடும். கொடுத்த வாக்கை காப்பற்ற அதிக அலைச்சலை மேற்கொள்ளவேண்டியிருக்கும். குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சிக்கு தடையில்லை. இனிமையான நித்திரை கிடைக்கும். பொழுது போக்குகளுக்காக அதிக செலவிடுவதை தவிர்க்கவும். தீயவர்களினாலும் பகைவர்களினாலும் அனாவசிய கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும், நாவடக்கம் அவசியம். இறைவனோடு வலிமையான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதனால் வாழ்க்கை மென்மேலும் சிறப்புறும்.

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி  
வழிபாடு: குருபகவான்

 

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சிந்தனை சக்தியும் சீர்திருத்த எண்ணங்களும் உடைய நீங்கள் பிறரை கண்டு பொறாமை கொள்ளாத சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் திடீர் பயணங்கள் ஏற்பட்டு அதன் மூலம் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புண்டு. பொழுதுபோக்குகளில் ஈடுபடும்பொழுது அவதானத்துடன் செயற்படவும். நீண்ட நாட்களின் பின் மகிழ்ச்சியான செய்திகள் மனஆறுதலை தரும். வியாபார வளர்ச்சிக்காக அதிக அலைச்சல்களை மேற்கொள்வதனால் தகுந்த லாபத்தை பெற்றுகொள்லாம். இசைதுறையில் அதிக ஈடுபாடு செலுத்திவீர்கள். ஆரோக்கியமான உணவு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை புதிய அனுபவத்தை பெற்று தரும். சுய சிந்தனையுடன் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்த கூடும். வழிபாடுகள், பூஜைகளில் ஈடுபடுவதனால் மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்  
வழிபாடு: பெருமாள்


 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

காலத்திற்கேற்ப ஆடை அணிகலங்களை மாற்றிக் கொள்ளும் நீங்கள், பழைய கலாசாரத்தை மறக்காத கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் நினைத்த காரியத்தை சாதித்து வெற்றி அடையலாம். தொழிலை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறும் சலுகை பக்கபலமாக இருக்கும்.  குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகையினால் புத்துணர்ச்சி ஏற்படும். புதிய திட்டங்களை மேற்கொள்ளும்போது இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். தேடிவரும் நட்புக்கள் நம்பிக்கை ஏற்படுத்தலாம். வேண்டாத வாக்குவாதங்கள் மனசங்கடங்ளை உருவாக்கும். வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். தூய ஆடை அணிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அயல் தேசங்களிருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும். மகான்களின் தரிசனம் வாழ்வில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)


 

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

துயரங்கள் துரத்தினாலும் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் உற்சாகமாக பேசும் துலா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் அறிமுகமற்ற நட்புகளினால் சிலவிதமான சிக்கல் உருவாக கூடும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. பெண்களுடன் எதிர்பாராதவிதமாக ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனஅமைதியை கெடுக்கும், ஆகவே வார்த்தைகளை பொறுமையுடன் பிரயோகிக்கவும். புதிய திட்டங்கள் தடைகளை ஏற்படுத்தலாம். இதனால் பணநெருக்கடி ஏற்படும். ஆனால் கடின உழைப்பினால் காய்களை நகர்த்தலாம். தூரபயணங்களை மேற்கொள்வதால் வாழ்வில் புதிய அனுபவத்தை பெற்று தரக்கூடும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளினால் உடல் உபாதைகள் வந்து நீங்கும். உடலுக்கு ஊட்டமற்ற உணவை தவிர்ப்பது நல்லது. பெரியோர் ஆலோசனைகள் வாழ்க்கைக்கு பக்கபலமாக இருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா


 


விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட, எளிமையை விரும்பும் விருச்சிக ராசி நேயர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை முன்னெடுப்பதற்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களினால் ஆதாயம் கிடைக்க கூடும். விசேட பிரார்த்தனைகள், பூஜைகள் செய்ய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணம் பற்றாகுறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கலாம். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். அயல் தேசத்திலிருந்து வரும் செய்திகள் எதிர்பாராத திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடும். அயராத உழைப்பினால் வெற்றி காண்பீர்கள். புதிய நட்புக்கள் நம்பிக்கை தரும். சில சலுகை கிடைக்கும் காலம் இது, சிறப்பான பாதை தெரியும் வாரம் இது.

அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி



 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தலைகுனிவு ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும் பொது நலனில் அக்கறை கொண்டவர்களுமான தனசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் நீங்கள் விநோதங்களுக்காக அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும், எனவே சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வெளிதேசத்திலிருந்து இன்பகரமான தகவல் கிடைக்கக் கூடும். உண்ணும் உணவின் மூலம் உடலுக்கு அவ்வப்போது உடல் நலிவு ஏற்பட்டு நீங்கும், தேக சுகத்தை பாதுகாக்கவும். தீயவர்களின் நட்புகள் சில சிரமங்களை ஏற்படுத்த கூடும். கடின உழைப்பினால் எதிர்பாராத அளவுக்கு தனபெருக்கத்தை அடையலாம். புதுமையான பொருட்கள் கண்களுக்கு தென்பட வாய்ப்புண்டு. பெண்களுடன் ஏற்படும் கடினமான பேச்சுவார்த்தைகள் மனகஷ்டங்களை ஏற்படுத்தும், நாவடக்கம் அவசியம். குலதெய்வ வழிபாடுகள் குடும்ப சூழலை மாற்றும்.

அதிர்ஷ்ட திகதி: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 02ஆம் திகதி மாலை 01.22 மணியிலிருந்து ஒக்டோபர் 04ஆம் திகதி மாலை 03.34 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி, அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யாத, மனதில் பட்டதை பளிச்சென பேசும்  பழக்கமுடைய மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் குடும்பத்தில் விட்டுபோன உறவுகள் மீண்டும் சேர்வதனால் இன்பம், இதனால் உற்சாகம் ஏற்படும். கண்களுக்கு நிம்மதியான நித்திரை கிடைக்கும். இசைதுறையில் அதிக ஆர்வம் செலுத்திவீர்கள், இதனால் மனஅமைதி கிடைக்கக்கூடும். அதிகாரிகளின் எதிர்பாராத தாக்கங்கள் அதிர்ப்தியை ஏற்படுத்தும். அறுசுவையான உணவு உடலுக்கும் மனதுக்கும் ஆறுதலை தரும். புதிய முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அதிக அலைச்சல்களை மேற்கொள்ளவேண்டிருக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள், இதனாலே அதிர்ஷ்டம் ஏற்படலாம். அரசாங்கத்தினால் எதிர்பாராத சலுகை கிடைக்கக்கூடும். மாகன்களின் ஆசிர்வாதம் மனநிறைவை தரும்.

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 04ஆம் திகதி மாலை 03.34 மணியிலிருந்து ஒக்டோபர் 06ஆம் திகதி மாலை 03.39 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை, வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மாறுபட்ட குணங்களை கொண்டவர்களிடமும் யதார்தமாக பேசி பிறர் மனதை அடக்கி ஆளும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் நீண்ட தூர செய்திகள் மகிழ்ச்சியையும் மனஅமைதியையும் தரும். குடும்பத்தில் பெண்களின் சலுகை வாழ்வில் புரிந்துணர்வை ஏற்படுத்தும். பொழுதுபோக்குகளில் அதிக நேரத்தை செலவிடும்போது மிக அவதானத்துடன் இருக்கவும். அனாவசிய பிரச்சினைகள் ஏற்படுத்திகொள்வதால் மனசங்கடங்கல் உருவாகும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவுக்கு சில தடைகள் ஏற்படக்கூடும், நிதானத்துடன் வேலைகளை முன்னெடுக்கவும். சில சமயம் பணவரவுகளில் தாமதங்கள் ஏற்படலாம், ஆகவே பணம் சம்பாதிப்பதில் அதிக கண்ணோட்டம் தேவை. இந்த வாரம் பெரியவர்களின் வழிகாட்டல்களினால் வாழ்வில் புதுமாற்றத்தை பெறலாம்.

அதிர்ஷ்ட திகதி: 8
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
வழிபாடு: நவகிரகம்

சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 06ஆம் திகதி மாலை 03.39 மணியிலிருந்து ஒக்டோபர் 08ஆம் திகதி மாலை 03.27 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி, அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம் விட்டுப்பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் நெருங்கிய சொந்தங்களின் தொடர்புகள் பலம் பெறும். பெண்களின் மூலம் உதவி கிடைக்கும், அதனால் மகிழ்ச்சி ஏற்படும். புண்ணிய தலங்கள் சென்று, வழிபாடுகளில் ஈடுபட வாய்ப்புக்கள் கிடைக்கும். சில மனகஷ்டங்கள், கவலைகள் வந்து நீங்கும். எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆடை, அணிகலங்கள் பரிசாக கிடைக்கக் கூடும். விடாமுயற்சியால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தருவதுடன் அதிக பணவரவையும் ஏற்படுத்தும். பிறரிடம் எதிர்பார்க்கும் உதவி சங்கடங்களை உருவாக்காத வண்ணம் செயல்படவும். எதிரிகளினாலும் பகைவர்களினாலும் அனாவசிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். தெளிவான தெய்வ சிந்தனைகள் வாழ்க்கைக்கு முன்மாதிரியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 8
அதிர்ஷ்ட நிறம்: சாம்பால், நீலம்
வழிபாடு: நவகிரகம்

சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 08ஆம் திகதி மாலை 03.27 மணியிலிருந்து ஒக்டோபர் 10ஆம் திகதி மாலை 05.06 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி, அர்ச்சனை செய்ய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .