2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தவார பலன்கள் (04.03.2012 - 10.03.2012)

A.P.Mathan   / 2012 மார்ச் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (04.03.2012 - 10.03.2012)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொழில் சம்மந்தமாக பிரயாணங்களில் ஈடுபடுவீர்கள். வெளியிடங்களில் நல்ல சுவையான உணவுகளை உண்பீர்கள். புதிய ஆடைகளை அணிவதன் மூலம் உற்சாகமான சூழ்நிலை உண்டாகும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் காணப்படும். இந்தவாரம் இடையில் பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளுடன் தொழில் சம்மந்தமாக போட்டிகள் நிலவும். அதில் வெற்றியும் காண்பீர்கள். வாரத்தின் இறுதியில் பெண்களுடன் வீண் விவாதங்கள் உண்டாகும். மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும். மற்றும் திருடர்களினால் பயம் ஏற்பட்டு மயக்கம் மற்றும் பயங்கள் உண்டாகும். வீண் சிரமங்கள், அலைச்சல்கள் காணப்படும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். 

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் வியாபாரத்தில் சில பிரச்சினைகள் காணப்படும். சில வேண்டாத பேச்சுக்களால் பகை உண்டாகும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். விளையாட்டுக்களில் ஈடுபடும்பொழுது கவனம் தேவை. மற்றும் உடலில் உஷ்ணம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும். செய்யும் செயல்களில் சில தவறுகள் ஏற்படும். எனவே இந்தவாரம் உங்களுக்கு தீமையான பலன்கள் உள்ளதால் எந்த ஒரு விடயத்திலும் கவனமாக இருத்தல் அவசியம். ஆனால் வார இறுதியில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் ஏற்படும். நல்லவர்களின் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் பணத் தட்டுப்பாடுகள் காணப்படும். இருந்த போதிலும் பணம் சம்பாதிப்பதில் ஆர்வத்துடன் காணப்படுவீர்;கள். நீங்கள் எதிர்பார்த்து இருந்த ஏதாவது ஒரு செய்தி வந்து சேரும். இல்லத்தில் உறவினர்களின் வருகையினால் செலவுகள் அதிகமாகும். தீயவர்களுடைய நட்பினால் தொழிலில் நஷ்டம் உண்டாகி பாதிக்கப்படுவீர்கள். மருத்துவ செலவுகள் உண்டாகும். உணவு விடயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வார இறுதியில் புதிய உடைகள் அணியும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.  நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும், மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். சில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருவீர்கள். அரசாங்கத்தினர் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். இதனால் பல புதிய வழிமுறைகளை தொழிலில் கையாண்டு வெற்றி காண்பீர்கள். லாபங்கள் அதிக அளவில் கிடைக்கப்பெறுவீர்கள். இருந்த போதிலும் இந்த வார இறுதியில் பெண்களுடன்; தேவையில்லாத வாய் வார்த்தைகளால் வீண் பிரச்சினைகள் உருவாகும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். இல்லையெனில் அவதிப்பட வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பல புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் சம்மந்தமாக தொலை தூரப் பயணம் மேற்கொள்வீர்கள். மேலும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள், அப்பொழுது கவனம் தேவை. உங்களிடம் இருந்து நீண்ட நாள் காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். மற்றும் உடன் பிறந்தவர்களினுடைய வருகை மனதில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும். மற்றும் ஆலயங்களுக்கு சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். இந்தவார இறுதியில் தீயவர்களுடைய நட்பினால் தொழிலில் நஷ்டம் அடைவீர்கள். சிலவிதமான சிக்கல்கள், வேண்டாத பேச்சால் மனக்கஷ்டம்  ஆகியவை உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் உங்களுக்கு தொழிலில் ஆர்வம் அதிக அளவில் காணப்பட்டு லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பார்த்து இருந்த செய்திகள் வந்து சேரும். தொழிலில் உயர் அதிகாரிகளுடன் ஆரோக்கியமான போட்டி நிலை காணப்படும். காரியத்தில் வெற்றியடைவீர்கள். மற்றும் பொழுதுபோக்கு, கலைத்துறைகளில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். ஆலயங்களுக்கு சென்று மனதை ஒரு நிலைப்படுத்துவீர்கள். பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். ஆனால் இந்த வார இறுதியில் உடலில் உபாதைகள் ஏற்பட்டு மனதில் தேவையில்லாத பயம் தோன்றும். மருத்;துவத்திற்காக வெளியூர் சென்று மருத்துவம் பார்க்கும் சூழ்நிலைகள் உருவாகலாம். எனவே உடல் ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திகதி: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடிச் சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சில தவிர்க்க முடியாத செலவுகள் காணப்படும். பிறரி;ன் உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகவே மன சங்கடங்கள் உண்டாகலாம். மனம் தளராமல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வேண்டாத பேச்சுக்களால் சிலவிதமான சிக்கல்கள் மற்றும்  மனஸ்தாபம் உண்டாகும். செய்யும் செயல்களில் தவறுகள் ஆகியவை காணப்படும். அனாவசிய   பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பிரச்சினைகள் உருவாகலாம். அனாவசியமான பயணங்களை தவிர்ப்பது நல்லது. இந்தவார இறுதியில் இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனால் உடன் பிறந்தவர்களின் வருகை உண்;டாகும். வெளியூர்களுக்கு செல்லும் சூழ்நிலைகள் உருவாகலாம்.

அதிர்ஷ்ட திகதி: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கம் உங்களுக்கு மிகவும் நன்மையாகவே அமையும். ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருவீர்கள். நண்பர்களுடன்; வெளியில் சுற்றுலா சென்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மற்றும் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி மனதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். நல்ல சுவையான சாப்பாடு பெண்களால் உதவியும் இன்பமும் கிடைக்கப்பெறுவீர்கள். முயற்சி செய்தால் காரியங்களில் வெற்றியடையலாம். எனவே முயற்சி செய்வது அவசியம். ஆனால் இந்த வார இறுதியில் பிரச்சினையான சூழ்நிலை உருவாகும். வேண்டாத பேச்சுகளால் வீண் பிரச்சினைகள் உருவாகும். தீயவர்;களின் நட்பினால் நஷ்டமடைதல், சிலவிதமான சிக்கல்கள் உண்டாகும். இதனால் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு இடமாற்றம் மனதில் மகிழ்ச்சியை தரும். வெளியிடங்களுக்கு சென்று உணவு உண்பீர்கள். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். பண விடயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வார இறுதியில் மனதளவில் பயம் தோன்றி மறையும். வீண் அலைச்சல் உண்டாகும். கடினமான பேச்சுவார்த்தைகள் ஏற்பட்டு மற்றவர்களினால் பிரச்சினை உண்டாகலாம். எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம். எனவே எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சந்திராஷ்டமம்
மார்ச் 04ஆம் திகதி மாலை 05.44 மணியிலிருந்து மார்ச் 06ஆம் திகதி மாலை 10.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் சந்திப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வழிகள் கிடைக்கும். பொன், பொருள் மற்றும் ஆபரண சேர்க்கைகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். பொழுது போக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும்பொழுது கவனம் தேவை. கைவிட்டுப்போன பொருள் மீண்டும் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். மனதளவில் அலைச்சல் ஏற்படும். வார இறுதியில் பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளுடன் பிரச்சனை, உடல் நிலை பாதிப்பு, சில விதமான சிக்கல்கள், மனக்கஷ்டம் ஆகியவை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்


சந்திராஷ்டமம்
மார்ச் 06ஆம் திகதி மாலை 10.37 மணியிலிருந்து மார்ச் 08ஆம் திகதி காலை 12.26 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் அரசினரால் ஆதாயங்கள் மற்றும் அனுகூலங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வீட்டில் உள்ள மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறும். ஆலயத்திற்கு சென்று மன மகிழ்வுகள் கொள்வீர்கள். வியாபாரம் விருத்தி ஏற்பட்டு தனலாபம் உண்டாகும். தொழிலில் அதிக லாபங்கள் கிடைக்கும். காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வார இறுதியில் முயற்ச்சிகள் தோல்வியையே தழுவும். வீண் அலைச்சல் மற்றும் காரிய தடைகள் காணப்படும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். 

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
மார்ச் 08ஆம் திகதி காலை 12.26 மணியிலிருந்து மார்ச் 11ஆம் திகதி காலை 01.01 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பெண்களினால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல சுவையான சாப்பாட்டின் மூலம் மகிழ்ச்சியடைவீர்கள். புண்ணிய நதிகளில் நீராடி புதிய ஆடைகளை அணிவீர்கள். இதனால் மனதில் உற்சாகம் பிறக்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். வார இறுதியில் முயற்சியில் தோல்வி, செயல்களில் தவறுகள், வீட்டில் திருட்டு பயம் ஆகியவை காணப்படும். வேண்டாத பேச்சுக்களால் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். எனவே நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். துக்கமான சூழ்நிலைகள்; நிலவும். இறைவழிபாடு செய்வதன் மூலம் மனதில் அமைதியை நிலை நிறுத்தலாம்.

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .