2024 மே 08, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (05.06.2011 - 11.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (05.06.2011 - 11.06.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும், மனோபலம் அதிக கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய தொழில் அல்லது இடமாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெண்களினால் சுபகாரியங்கள் நடைபெறக்கூடும். நண்பர்களுடன் தூர பிரயாணங்கள் சென்று வருவீர்கள். மனதுக்கு பயத்தை ஏற்படுத்தும் சில விதமான சிக்கல்கள் தேடி வரக்கூடும். அரசாங்க உத்தியோகத்தர்களினால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சக ஊழியர்களுடன் ஒன்றிணைந்து புதிய நுட்பங்களை மேம்படுத்தலாம். பெண்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். இசையில் ஆர்வம் அதிகரிக்கும், இதனால் மனஅமைதி கிடைக்கும். இக்காலகட்டங்களில் எந்த காரியத்தில் ஈடுபடும்போதும் பெரியார்களின் ஆலோசனை கேட்டு செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: (சூரியன்)   




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

விசித்திரமான ரசனைகளையும் எதையும் நுணுக்கமாக செய்திடும் ஆற்றலும் கொண்ட இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு மனதில் குழப்பங்கள், கவலைகள் நீங்குவதுடன் புதிய முயற்சிகளில் உற்சாகத்துடன் ஈடுபடலாம். குடும்பத்தில் பெண்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும், இதனால் மகிழ்ச்சி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்குவதற்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கக்கூடும். சுவையான உணவுகளை உண்ணலாம். பொழுதுபோக்குகளுக்கு தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். அழகிய ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டாகும். வெளிதேச வேலை வாய்ப்புக்களுக்காக தூர பயணங்கள் செல்ல நேரிடும். நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும். இக்காலகட்டங்களில் நன்மையான காரியங்களில் அதிக அக்கறை செலுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 06
அதிர்ஷ்ட நிறம்: சாம்பால், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் நல்ல காரியங்களின் போது உற்றார், உறவினர்கள் முன்னின்று செயல்படுவார். பணப் பிரச்சினைகள் சங்கடத்தையும் அலைச்சலையும் தரும், ஆகவே கடின ஊக்கத்துடன் உழைப்பது நல்லது. எதிர்பாராத நல்ல செய்திகளை கேள்விப்படுவீர்கள். தொலைதூர பயணங்கள் செல்வதனால் அனுகூலம். பெண்களுடன் பேசும்போது பொறுமை தேவை, இல்லாவிட்டால் அது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். புதிய வேலை அல்லது வியாபார சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். இக்காலகட்டங்களில் நம்மை இறைவன் சோதிப்பது இன்பத்தை தருவதற்கே, அதை புரிந்து கொண்டால் துன்பம் இல்லை.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

தனது தனித் திறனால் தன்னை சுற்றி இருப்பவர்களை கவர்ந்திடும் நற்குணங்களை கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு எல்லா காரியங்களையும் புத்திசாலித்தனமாக செய்து முடிக்கலாம். நண்பர்களின் உதவியுடன் புதிய வேலை முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். அனாவசிய பிரச்சினைகளை வாதிடுவதனால் மனஸ்தாபம் ஏற்படும். வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளின் வருகையினால் இன்பம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். அதிக செலவுகளை மேற்கொள்ளுதல். இக்காலகட்டங்களில் நமது வாழ்க்கையில் உள்ளத்தில் பணிவும் எண்ணத்தில் ஏற்றமும் இருந்தால் தோல்விகள் சாதாரணமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 06
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)




மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தோற்றத்துக்கேற்ற இயல்பும் அதிக கர்வமும் சிந்தனையாற்றல் அதிகம் உள்ள சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல புதிய சாதனைகளை கையாண்டு வெற்றி அடையலாம். விநோத விளையாட்டுக்களுக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் பெண்களின் அக்கறையும் அனுசரிப்பும் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி நன்னிலை தோன்றும். சிறு பணக் கஷ்டங்கள் ஏற்படக்கூடும். கடின உழைப்பே வாழ்க்கையில் ஊன்றுகோல். தூய்மையான ஆடைகளை அணியலாம். அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் நல்ல வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். மனதில் சில சலனங்கள் தோன்றி மறையும். இக்காலகட்டங்களில் எல்லோரிடமும் பணிவாக செயல்பட்டால் மனதில் என்றும் பயம் இருக்காது.

அதிர்ஷ்ட திகதி: 06
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வாழ்க்கையில் பல குறிக்கோள்களுடன் வாழ விரும்பும் கண்ணிய உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் சில புதிய வேலைத் திட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். நீண்ட நாள் முயற்சி செய்த காரியத்தின் பயனை அடைவீர்கள். திருடர்களினால் மனதில் பயமும் செயல்களில் பதற்றமும் ஏற்படக்கூடும். புதுமையான பொருள் காணக்கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். பெண்களுடன் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். பிரிந்து சென்ற நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தாருடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரலாம். இக்காலகட்டங்களில் எந்த ஆதாயமும் இன்றி பிறருக்கு நாம் செய்யும்; உதவியே ஆண்டவன் விரும்பும் பூஜையாகும்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

மாறுபட்ட குணங்கள் உள்ளவர்களை ஆறுதல் பேச்சால் அடக்கியாளும் திறன் கொண்ட துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு ஆன்மீக தியானங்கள் பிரார்த்தனைகளில் நாட்டம் அதிகரிக்கும். இசையில் ஆர்வம் காட்டுதல். காணாமல்போன பொருள் கிடைக்கக்கூடும். பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படக்கூடும். சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல். சிலர் தமது கடின உழைப்பினால் லாபம் அடைவார்கள். குடும்பத்தில் பெரியார்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். பெண்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது பிறரின் உதவிகள் கிடைக்கக்கூடும். சிக்கனமற்ற செலவுகளினால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும், இக்காலகட்டங்களில் சிக்கனமான சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இருகருவிகள்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் அதிக தன்னம்பிக்கை உடைய விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பல புதிய சாதனைகளை பயன்படுத்தி வெற்றி அடையக் கூடியதாயிருக்கும். குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களுடன் தூர பயணங்கள் செல்ல நேரிடும். பெண்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கக்கூடும். காலதாமதமான வேலைகளை விரைவாக செய்து முடிக்கலாம். வியாபார வளர்ச்சியை மேம்மேலும் உயர்த்த அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள், இதனால் பணவரவுகள் அதிகரிக்க கூடும். பெண்களுடன் பொறுமையின்றி பேசுவதால் அது சங்கடத்தை ஏற்படுத்தும். வார்த்தைகளை அவதானத்துடன் பிரயோகிக்கவும். இக்காலகட்டங்களில் உற்சாகத்துடன் இருப்பதால் நோயற்ற வாழ்க்கை வாழலாம்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். விநோத விளையாட்டுகளுக்கு அதிக செலவு செய்ய நேரிடும். புதிய வேலை பணிகளுக்காக தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சதோதர, சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். நண்பர்களுடன் சேர்ந்து தேவையற்ற பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். முயற்சி செய்த காரியங்களில் சிறு தோல்விகள் ஏற்படும். இக்காலகட்டங்களில் நாம் செய்யும் புண்ணிய சேர்க்கும் காரியங்கங்கள் நமது வாழ்க்கையில் நல் கண்ணிய நடத்தை காட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 06
அதிர்ஷ்ட நிறம்: சாம்பள், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)


சந்திராஷ்டமம்
ஜூன் 05ஆம் திகதி காலை 09.38 மணியிலிருந்து ஜூன் 07ஆம் திகதி மாலை 02.30 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து பல சாதனைகள் படைக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு எந்த காரியத்தையும் அதிக ஊக்கத்துடன் செய்வது அவசியம். குடும்பத்தாருடன் சில பயணங்கள் செல்ல நேரிடும். புதிய வியாபார முயற்சிகளை விரிவுபடுத்தி சிறப்பான நிலையை அடையலாம். தாமதமான பணவரவுகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்தல். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். புதுமையான, ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும். இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். அழகிய ஆடை, அணிகலன்கள் கிடைக்கக்கூடும். அதிகாரிகளுடன் அனாவசிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இக்காலகட்டங்களில் அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதானம்.

அதிர்ஷ்ட திகதி: 06
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)


சந்திராஷ்டமம்
ஜூன் 07ஆம் திகதி மாலை 02.30 மணியிலிருந்து ஜூன் 09ஆம் திகதி மாலை 05.45 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு மனதுக்கு அமைதி தரும் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசாங்க உத்தியோகத்தர்களின் உதவியுடன் புதிய வேலை பணிகளை மேற்கொள்ளலாம். சிறு பணத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டாலும் கடின உழைப்பினால் உயர்வு அடையலாம். நாவுக்கு அறுசுவையான உணவுகளை உண்ணலாம். தூய்மையான ஆடைகளை அணிதல். எதிர்பாராத நல்ல செய்திகள் மனதில் சோர்வுகளை நீக்கி உற்சாகம் தரும். குடும்பத்தில் பெரியார்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம். இக்காலகட்டங்களில் நாம் இறைவனிடம் பணிவுடன் இருந்தால் மனதில் என்றும் பயம் இருக்காது.

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
ஜூன் 09ஆம் திகதி மாலை 05.45 மணியிலிருந்து ஜூன் 11ஆம் திகதி மாலை 07.54 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

தனது கடமைகளை சரியாக செய்து நற்பெயரை பெற்றுக்கொள்ளும் மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு எந்த காரியத்திலும் பதற்றமும் தடுமாற்றங்களும் ஏற்படக்கூடும், நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுப விசேஷங்களின் போது சொந்த பந்தங்களின் வருகை இன்பம் தரும். வியாபாரத்தில் அதிகாரிகளின் போட்டிகளினால் புதிய வாய்ப்புக்கள் பின்தள்ளப்படக்கூடும். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படும். நலனை பாதுகாக்கவும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடும். தேவையற்ற செலவுகள் உண்டாகும். அரசாங்க வேலை வாய்ப்புக்களுக்கு அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள். இக்காலகட்டங்களில் பிறருடன் அர்த்தமில்லாத பேச்சுக்கள் ஆபத்தை தரக்கூடும், வார்த்தைகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X