2024 மே 08, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (05.12.2010 – 11.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள்  (05.12.2010 – 11.12.2010)  


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

செயல்களில் சுறுசுறுப்பு கொண்ட மற்றவர்களுக்கு முன் உதாரணம் இருக்கும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் சகோதரர்களின் மூலம் இன்பகரமான செய்திகள் வருதல். வியாபாரத்தை மேம்படுத்த நண்பர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கக்கூடும். பணவரவுகளில் சற்று தாமதத்தை ஏற்படுத்தும், அதனால் பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை. சுற்றுலா பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். அரச ஊழியர்கள் மூலம் வேலைவாய்ப்புக்கள் தேடி வரவாய்ப்புண்டு. தூய ஆடைகளை அணியலாம். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். பெண்களுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, நாவடக்கத்துடன் செயல்படவும். இக்காலகட்டங்களில் நன்மையான காரியங்களில் ஈடுபடுவதனால் மனதில் கவலைகள் மறைந்து உற்சாகம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 04ஆம் திகதி மாலை 12.54 மணியிலிருந்து டிசெம்பர் 06ஆம் திகி மாலை 05.40 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

உங்கள் தனிதிறனால் மற்றவர்களை கவரும் வல்லமை பெற்றவராக பிறரின் நலனில் அக்கறை கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் தூரபிரயாணங்கள் பயணிப்பதால் புதிய அனுபவத்தை பெற்றுகொள்ளலாம். புதிய வேலைப்பணிகளை நடைமுறைபடுத்த பிறரின் உதவிகள் கிடைக்கக்கூடும். வியாபார வளர்ச்சிக்காக அதிக அலைச்சல்களை மேற்கொள்ளவேண்டிருக்கும், இதனால் அதிக பணவரவு ஏற்படக்கூடும். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் அழகிய ஆடை, உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. நல்ல நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரகூடும். இக்காலகட்டங்களில் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் சிந்தித்து செயல்படுவதால் வெற்றிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 06ஆம் திகதி மாலை 05.40 மணியிலிருந்து டிசெம்பர் 08ஆம் திகதி காலை 01.16 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

மனிதநேயம் அதிகமுடைய நீங்கள் கடின உழைப்பால் எதையும் சாதித்து காட்டும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் புதிய முயற்சிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் திறமையான நுட்பங்களை கையாளுவதனால் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். சில மேல் அதிகாரிகளின் மறைமுக செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும், நிதானமாக செயல்படவும். விசித்திரமான பொருள் காணக்கிடைக்கும். குடும்பத்தில் சுபவிசேடங்கள் நடைபெறும். மேலும் பெண்களின் அனுசரணைகள் அதிகரிக்கக்கூடும். நண்பர்கள் மூலம் புதிய மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இசையில் அதிக ஆர்வம் செலுத்துவதால் மனஅமைதி ஏற்படும். இக்காலகட்டங்களில் இறைவன் மீது அதிக அக்கறை கொள்ளவதனால் வாழ்வு மேன்மைபெறும்.    

அதிர்ஷ்ட திகதி: 06
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 08ஆம் திகதி காலை 01.16 மணியிலிருந்து டிசெம்பர் 11ஆம் திகதி காலை 11.55 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

முடிவுகளை பற்றி கவலைப்படாமல் நியாயத்துக்கு குரல் கொடுக்கும் எளிமையாக நடந்து கொள்ளும் கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கக்கூடும். சில இடமாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு;. குடும்பத்தாருடன் வெளிபிரயாணங்கள் செல்வதனால் மனதில் உற்சாகம் கிடைக்கும். பணவரவுகளில் சற்று தாமதத்தை ஏற்படுத்தும், பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் செலுத்தவும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும், ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். நவீன திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்க உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. நிம்மதியான உறக்கம் கிடைக்கும், இக்காலகட்டங்களில் மகான்களை தரிசித்து நன்மைகள் பெற வாய்ப்பு கிடைக்கும்.  

அதிர்ஷ்ட தேதி :
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 11ஆம் திகதி காலை 11.55 மணியிலிருந்து டிசெம்பர் 13ஆம் திகதி காலை 12.23 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தப்பு செய்தவர்களை தட்டி கேட்கும் நீங்கள் உறவினர் காட்டிலும் நண்பர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் புண்ணிய தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். நினைத்த காரியங்களை உற்சாகத்துடன் தொடங்கலாம். பகைவர்களின் அதிக பேச்சுக்கள் மனதில் பயம் உணர்வுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் நண்பர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். பெண்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை தரக்கூடும். ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும், விடாமுயற்சியுடன் வேலைகளை முன்னெடுப்பதன் மூலம் அதிக லாபத்தை பெற்றுகொள்ளலாம். நீண்ட தூரத்திலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். இக்காலகட்டங்களில் பெரியோர்களின் வழித்துணையுடன் நற்பண்புகளை பெற்று வாழலாம்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தொட்ட காரியத்தை துலக்கும் ஆற்றல் கொண்ட கவர்ச்சியான குணமுடைய கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் விசித்திரமான பொருட்களை காணக்கிடைக்கும். தூய ஆடை அணியலாம், விநோத விளையாட்டுகளின்போது அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். இசையில் அதிக ஆர்வம் காட்டுதல். உல்லாச பிரயாணங்களின்போது நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்க வாய்ப்புண்டு. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். புதிய வேலைதிட்டங்களை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். மேல் அதிகாரிகளுடன் அனாவசிய கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும், இல்லாவிடின் மனசங்கடங்களை எதிர்நோக்கநேரிடும். இக்காலகட்டங்களில் சொல்லிலும் செயலிலும் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)

 

 

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

துயரங்கள் துரத்தினாலும் புன்னகையுடன் பேசி பிறர் மனதை புரிந்து செயல்படும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம். புதிய வேலைதிட்டங்களை நடைமுறைபடுத்த நண்பர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. எதிர்பாராத நல்ல செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும். வியாபாரத்தில் பணநெருக்கடி ஏற்படக்கூடும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தவும். உயர் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் பெண்களுடன் அதிக பேச்சுகள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். வார்த்தை நிதானமாக பிரயோகிக்கவும். இக்காலகட்டங்களில் தூரபிரயாணங்கள் செல்வதன் மூலம் மனதில் சோர்வுகள் நீங்குவதுடன் புதிய அனுபவத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)


 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல்பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஒவ்வாத உணவினால் சில உடல் உபாதைகள் வந்து நீங்கும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். பெரியோர்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும். எதிர்பாராத பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும். சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும். புதிய காரியங்களை செயல்படுத்தும்போது அரசாங்க உதவிகள் சேவைகள் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நவீன நுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள், இதனால் அதிக பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சகோதரர்களின் ஆதரவு அதிகரிக்கக்கூடும். இக்காலகட்டங்களில் திறமையாக சிந்தித்து செயல்படுவதன் மூலம் வெற்றிகள் எளிதாகும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அமைதியும் சாந்தமும் குடிகொண்ட முகத்தோடு இனிமையாக பேசி மற்றவர்களை உள்ளம் நெகிள வைக்கும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் குடும்பத்தில் உறவினர்களுடன் விசேட பிரார்த்தனைகள் பூஜைகளை செய்வீர்கள். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். இடம் அல்லது தொழில் மாற்றத்திற்கு இடமுண்டு. தீய நண்பர்களின் சகவாசங்களினால் சில பிரச்சினைகளை எதிர்நோக்கநேரிடும், அவதானத்துடன் செயல்படவும். நிம்மதியான நித்திரை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும். எடுத்த காரியங்களை கடின முயற்சியுடன் முன்னெடுப்பதால் வெற்றி கிடைக்கும். வெளி பிரயாணங்களின்போது பிறரின் உதவிகள் கிடைக்கக்கூடும். இக்காலகட்டங்களில் நீண்டநாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்


 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடின உழைப்பால் மட்டுமே முன்னேறலாம் என்பதை முழு மூச்சாக கொண்டு சிகரம் தொடுகிற மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் பெண்களின் அன்பும் அனுசரிப்பும் அதிகரிக்கக்கூடும். விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல். பொழுதுபோக்குகளுக்காக ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். தடைப்பட்ட காரியங்களை மீண்டும் நடைபெற வாய்ப்புண்டு. தூய ஆடைகளை அணியலாம், உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படகூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை கையாளுவதன் மூலம் அதிக லாபத்தை பெற்றுகொள்ளலாம். நண்பர்களின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பகைவர்களுடன் எதிர்பாராத கருத்துவேறுபாடுகள் ஏற்படும், நாவடக்கத்துடன் செயல்படவும். இக்காலகட்டங்களில் இறைவனை பக்தியுடன் தரிசித்து வழிபட்டு வர தீமை விலகி நன்மைகள் ஏற்படும்.   

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்

 


அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மாறுபட்ட குணங்களை கொண்டவர்களிடமும் யதார்த்தமாக பேசி பிறர் மனதை அடக்கி ஆளும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புக்கள் தேடி வரகூடும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். அறுசுவையான உணவுகள் கிடைக்கும். நட்புவட்டம் வரிவடையும், பெண்களுடன் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு. வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். வாகன சாரதிகளுக்கு தூரபிரயாணங்களின்போது அதிக லாபத்தை பெற்றுகொள்ளலாம். அழகிய ஆடை அணிகலன்கள் பரிசாக கிடைக்கும். அயல் தேசங்களிருந்து செய்திகள் வந்து சேரும். மனதில் பயம் உணர்வுகள் ஏற்படும். இக்காலகட்டங்களில் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதனால் மனதில் அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா


 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

உறுமீனைப்போல் காத்திருக்கும் உறுதியுள்ளமும் தோல்விகளை கண்டு எதிர்நீச்சல்போடும் மீனராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் சிலவிதமான சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். நன்மையான காரியங்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்;. குடும்பத்தில் உறவினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவார்கள், பெண்களின் சலுகைகள் மகிழ்ச்சியை தரகூடும். பணவரவுகளில் சற்று தாமதத்தை ஏற்படுத்தும். ஒவ்வாத உணவினால் அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். இசையில் அதிக நாட்டம் காட்டுதல். புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் தொடங்கலாம். நண்பர்களுடன் வெளிபிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். இக்காலகட்டங்களில் பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அவதானத்துடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X