2024 மே 08, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (06.03.2011 - 12.03.2011)

A.P.Mathan   / 2011 மார்ச் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (06.03.2011 - 12.03.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சொல், செயல்களில் தெளிவும் சஞ்சல மனம் பிறகு தெளிவு உடையவர்களான மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த இன்பகரமான செய்திகள் வந்து சேரும். விநோத விளையாட்டுகளுக்கு அதிக செலவு செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் புதிய ஆடை, உபகரணங்கள் பரிசாக கிடைக்க கூடும். பெண்களுடன் அனாவசிய மனஸ்தாபங்களை தவிர்க்கவும். குடும்பத்தாருடன் ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் மனஅமைதி கிடைக்கும். மனதால் சிறு அலைச்சல்கள் தோன்றும். கடின வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நவீன சாதனங்களை பயன்படுத்தி ஆதாயம் அடையலாம். வார இறுதியில் வாழ்வில் மேலும் முன்னேற்றமடைய பல வாய்ப்புக்கள் தேடிவருவதுடன் அதை தவறவிடாது பயனடையவும்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் வெளிப் பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம். தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இசை துறையில் ஈடுபாடு அதிகரிக்கும், இதனால் மனஅமைதி கிடைக்கும். சுவையான உணவுகள் உண்ணலாம். புதிய நண்பர்கள் அறிமுகம் மகிழ்ச்சி தரும். நீண்டநாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். மனதுக்கு உற்சாகம் தரும் தூய்மையான ஆடைகளை அணியலாம். அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் நல்ல வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளலாம். வார இறுதியில் பிறரின் பேச்சை நம்பி எந்த காரியத்திலும் முன்னிற்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தீவிரமோ, தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. பணப் பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். பணம் சேமிப்பதில் ஊக்கம் செலுத்தவும். தொழில் தொடர்பான திட்டங்களுக்கு பயணங்கள் செல்லநேரிடும். குடும்பத்தில் பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்து முடிப்பார்கள். பகைவர்களால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நாவடக்கத்துடன் செயல்படவும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடும். தொலைதூர செய்திகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். வார இறுதியில் இறைவனை நேசித்து நம்பிக்கையுடன் வழிபடுவது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பு கொண்ட கடகராசி  அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நீங்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதோ அல்லது அனாவசிய பிரச்சினைகளை வாதிடுவதையும் தவிர்க்கவும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். உண்ணும் உணவில் வெறுப்பு தன்மை ஏற்படும். அரச தொழில் வாய்ப்புக்கள் தேடி வரகூடும். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். முயற்ச்சி செய்த காரியங்கள் தோல்வியை ஏற்படுத்த கூடும். ஒவ்வாத உணவினால் அஜீரண சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதுடன் பணபிரச்சினைகள் ஏற்படக்கூடும். வார இறுதியில் வாழ்வில் பழையனவை எண்ணி கவலைப்படாது வாரநாட்களை நன்நாளாக கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாக்கு சாதுர்யம் மனோபலம் உள்ளவர்கள், சற்று அகம்பாவம் உள்ளவர்கள், அதிகார தன்மை உடைய சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் பொழுதுபோக்குகளில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்க கூடும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. கேட்பார் பேச்சை கேட்டு நடப்பதால் அனாவசிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளினால் சிறப்பான முன்னேற்றமும் லாபமும் காணப்படும். மேல் அதிகாரிகளுடன் நட்புறவுகள் நற்பயனை தரும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பெண்களின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகத்தை தரும். வார இறுதியில் புதிய காரியங்களை தொடங்ககூடியதாயிருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்
மார்ச் 05ஆம் திகதி மாலை 10.22 மணியிலிருந்து மார்ச் 08ஆம் திகதி காலை 11.02 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் திருடர்களிடம் கவனம் தேவை, துஷ்டர்களின் நட்பிலிருந்து விலகி நிற்பது நல்லது. வியாபார உத்தியோகத்தர்கள் தமது பணிகளை விரைவாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் சுபவிசேஷங்களின்போது உறவினர்களின் உதவிகள் கிடைக்க கூடும். நாவுக்கு இனிதான உணவுகள் உண்ணலாம். இசையில் நாட்டம் அதிகரிக்கும், இதனால் மனஅமைதி கிடைக்கும். பொருள் சேர்க்கை ஏற்படும். பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதால் அது நமக்கு பகை ஏற்படுத்தும். வார்த்தைகளில் நிதானம் தேவை. சரும நோய்கள் வந்து நீங்கும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். வார இறுதியில் புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்
மார்ச் 08ஆம் திகதி காலை 11.02 மணியிலிருந்து மார்ச் 10ஆம் திகதி மாலை 11.00 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துள்ளியமாக எடைபோடக்கூடியவர்கள், ஆடம்பரமான வாழ்கை உள்ள துலா ராசி அன்பர்களே..!

இந்தவார ஆரம்பத்தில் முக்கியமான தகவல்கள் திடீர் பயணத்தை ஏற்படுத்த கூடும். மனதால் அலைச்சல்கள் தோன்றும். அயராத உழைப்பினால் மட்டுமே வெற்றி பெறலாம். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை கையாளுவீர்கள், இதனால் பணவரவு அதிகரிக்கும். சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படுதல். மாணவர்கள் கல்வியில் தமது திறமையான சாதனைகளை செயல்படுத்தல். சிலர் ஆன்மீக யாத்திரைகள் மேற்கொள்வார்கள். நீண்டநாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை மகிழ்ச்சி தரும், வார இறுதியில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சில சம்பவங்கள் நடைபெறுவதுடன் உற்சாகத்துடன் தமது வேலைகளை தொடங்கலாம்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்
மார்ச் 11ஆம் தகிதி மாலை 11.00 மணியிலிருந்து மார்ச் 13ஆம் திகதி காலை 08.40 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல்பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் சில மனகஷ்டங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய பயணங்கள் செல்வதன் மூலம் நீண்டநாள் எதிர்பார்த்த நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். அரசாங்க ஊழியர்களின் ஆதரவு கிடைக்க கூடும். தொடங்கும் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படக்கூடும். பெரியார்களின் ஆலோசனைகள் நல்வழிநடத்தலை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளுடன் அமைதியான பேச்சுவார்த்தைகளை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் நவீன திட்டங்கள் அதிக அலைச்சலை ஏற்படுத்தும். பொருள் திருட்டுக்களினால் மனபயங்கள் ஏற்படும். வார இறுதியில் எந்த காரியத்தில் மிகவும் நிதானமாக கையாளுவது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வைராக்கியம், திடசிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதால் அதிக லாபத்தை பெற்றுக்கொள்வீர்கள். தொழில் ஸ்தானத்தில் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். பெண்களுடன் அனாவசிய மனஸ்தாபங்களுக்கு இடமுண்டு. தடைபட்டிருந்த வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கலாம். அழகிய ஆடை, உபகரணங்கள் சேர்க்கை. விநோத விளையாட்டுக்களுக்கு அதிக செலவு செய்ய நேரிடும். புதுமையான பொருள் காணக்கிடைத்தல். குடும்ப உறவினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வார இறுதியில் இறை வழிபாடுகளில் ஈடுபடுவதால் மனகுழப்பங்கள் நீங்கி அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பால், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தெய்வீக பலன் பெற்றவர்களே நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்த மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் வியாபார சம்பந்தமான திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்த கூடும். சில உடல் உபாதைகளினால் சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படும். அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். தீய நண்பர்களின் பேச்சை கேட்டு நடப்பதால் அதிக பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். புதிய பயணங்கள் செல்வதனால் அனுகூலம். இசை துறையில் ஈர்ப்பு அதிகரிக்கும். பெண்களின் அன்பும் ஆதரவும் கிடைக்க கூடும். விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை மகிழ்ச்சி தரும். பொருள் வரவு ஏற்படக்கூடும். வார இறுதியில் புண்ணிய காரியங்களில் முழு மனதோடு ஈடுபடுவதால் நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே, புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம் - செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கு பிறரின் உதவிகள் கிடைக்க கூடும். பணவரவுகள் சற்று காலதாமதத்தை ஏற்படுத்தும், கடின உழைப்பினால் மட்டுமே அதிக லாபம். குடும்பத்தாருடன் சுற்றுலா பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். அறிமுகமற்ற நண்பர்களுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும். தொழில் அல்லது வீடு சம்பந்தமான இடமாற்றங்களுக்கு வழியுண்டு. சிறு மனசஞ்சலங்கள், பயங்கள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட தூரத்திலிருந்து செய்திகள் கிடைக்கும். வார இறுதியில் நம்பிக்கையான பிரார்த்தனைகள் வழிபாடுகளின் வழியாக வாழ்வில் ஏற்படும் துன்பங்களை இலகுவாக வெற்றிகொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம்விட்டுப் பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் எதிர்பாராத புதிய செய்திகள் அதிக அலைச்சலை ஏற்படுத்த கூடும். அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். சுவையான உணவுகள் உண்ணலாம். உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படும், இதனால் நவீன தொடர்புகள் பின்தள்ளப்படும். குடும்பத்தில் சுபவிசேஷங்களின் மூலம் உறவினர்கள் ஒன்றுகூடல். திருடர்களிடம் அதிக கவனம் தேவை. பகைவர்களினால் சிலவிதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு, நிதானமாக செயல்படவும். சரும நோய்கள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வார இறுதியில் மேல் அதிகாரிகளுடன் பொறுமையுடன் நடக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X