2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (06.05.2012 - 12.05.2012)

Menaka Mookandi   / 2012 மே 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தவார பலன்கள் (06.05.2012 - 12.05.2012)



அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எடுக்கும் காரியத்தை எளிதாக செய்து முடிக்கும் வல்லமை பெற்ற மேட ராசி அன்பர்களே...!

இந்த வாரம் புதிய வேலைக்கான ஏற்பாடுகள் முன்னேற்றம் கொடுக்கும். எதிர்பார்த்த செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை பரிசாக பெருவீர்கள். உறவினர்களிடத்தில் அந்நியோன்யம் காணப்படும். பணியில் முன்னேற்றமான நிலை காணப்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் காணப்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள் வெற்றியடையும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும்;. ஆனால் வார இறுதியில் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. தகுந்த ஓய்வும் தேவை. வாடிக்கையாளர்களின் எதிர்ப்பைக்கண்டு அச்சம் கொள்வீர்கள். சக பணியாளர்களால் பணிசுமைக்கு ஆளாக நேரிடும். பணத் தட்டுப்பாடுகள் காணப்படும். சில வகையில் வீணான அலைச்சல்கள் உண்டாகும். உடல் நிலையில் நலிவு காணப்படும். குழப்பங்கள் தோன்றி மறையும்.   
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
மே மாதம் 06ஆம் திகதி மாலை 09.31 மணியிலிருந்து மே மாதம் 08ஆம் திகதி மாலை 09.31  மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்துஉண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1௨ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதைச்செய்தாலும் அதில் சாதனைகளை படைக்கும் ரிஷப ராசி அன்பர்களே...

இந்த வாரம் தொடக்கத்தில் போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் காணப்படும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும் செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் தோன்றும்.  ஆனால் வார இறுதியில். தொழிலில் இலாபம் உண்டாகும். பயணங்கள் பயனுடையதாய் இருக்கும்.பணவரவுகள் அதிகம் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். ஏற்றம் தரும் வகையில் வருமானம் வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போதிய வருமானத்தினால் ஆடம்பர பொருட்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு தலைமைக் பொறுப்புக்கள் கூடி வரும். நவீன உக்திகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 8
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



சந்திராஷ்டமம்

மே மாதம் 08ஆம் திகதி மாலை 09.31 மணியிலிருந்து மே மாதம் 10ஆம் திகதி காலை 11.54  மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்துஉண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மற்றவர்களின் அன்புக்கு எளிதில் அடிமையாகும் மிதுனம் ராசி அன்பர்களே...!           

இந்த வாரம் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும். சில நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். வெளிநாட்டு செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தாய் வழி உறவில் நன்மை உண்டாகும். நல்ல நண்பர்கள் வருகை இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் செலவுகள் அதிகரிக்கும். சில வகையில் வீணான அலைச்சல்கள் உண்டாகும். பணத்தட்டுப்பாடுகள் காணப்படும். ஆனால் வார இறுதியில் இல்லத்தில் உடலில் சிறு உபாதைகள் உண்டாகும். தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும். நோய்கள் மூலம் தொந்தரவு காணப்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



சந்திராஷ்டமம்
மே மாதம் 10ஆம் திகதி காலை 11.54 மணியிலிருந்து மே மாதம் 12ஆம் திகதி காலை 05.48  மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்துஉண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

எதிலும் வேகத்தோடும் விவேகத்தோடும் செயல்படும் கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் இல்லத்தில் உள்ள பெண்களினால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். மனதில்  குழப்பம் மனக்கசப்புகள் மற்றும் அலைச்சல்கள் உண்டாகும். பணியில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். பண வரவில் தடை உண்டாகும். பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். முயற்சிகள் தடைபடும். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சினை குறையும்; தீயவர்களின் நட்பினால் வியாபாரத்தில் நட்டம் உண்டாகும். வார இறுதியில் வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பதவி  உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் காணப்படும். மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும்.  வியாபாரம் விருத்தியடையும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது.
அதிர்ஷ்ட திகதி: 8 
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எந்த காரியத்தையும் எளிதாகவும் தைரியமாகவும் முடிக்கும் வல்லமை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும். மற்றும் நல்லவர்கள் நட்பு கிடைக்கும். மேலும் வியாபார நிலையில் முன்னேற்றம் அடைவீர்கள்.  வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரம் சம்பந்தமாக நீண்டதூர பிரயாணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். இதனால் வியாபாரம் விருத்தியடைந்து பணவரவு அதிகரிக்கும். இருந்தாலும் மனதில் குழப்பமான சூழ்நிலையே காணப்படும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதனால் வீணான பிரச்சினைகள் உண்டாகும். மேலும் செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும்.
அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கள்ளமில்லா உள்ளமும் கனிவாக பேசுகின்ற குணமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வாரம் வெளியூர் பிரயாணங்கள் ஒரளவு சாதகமாக அமையும். வயிற்றில் வலிகள் தோன்றி மறையும். பணியிடத்தில் சில சங்கடமான சூழ்நிலைகள் உண்டாகலாம். அரசியல் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். தீயவர்களின் நட்புகளினால் வியாபாரத்தில் நட்டம் உண்டாகும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். மிகவும் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து உண்ணும் வாய்ப்புக்கள் தேடி வரும். வாய்ப்புக்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வாய்ப்புகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

பிறருடைய குணங்களை தெளிவாக எடை போடக் கூடிய துலா ராசி அன்பர்களே...!    

இந்த வாரம் அரசாங்க செய்திகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி  உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்;லது. ஏற்றம் தரும் வகையில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். கடின உழைப்பின் மூலம் ஆதாயத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள் தொந்தரவு கொடுத்து வந்த நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள்  வெற்றியடையும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும்;. ஆனால் வார இறுதியில் உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல் தலைவலி ஆகியவை உண்டாகும். பிறரிடம் உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வீணான மன பயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

எந்தவொரு காரியத்திலும் இருவிதமான ஆதாயங்களை அடைய நினைக்கும் விருட்ச்சிக ராசி அன்பர்களே...!               

இந்த வாரம் நண்பர்களிடத்தில் அளவுடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் பிரச்சினை உண்டாகும். வேலையில் சில சிரமங்கள் காணப்படும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். தவிர்க்க முடியாத சில பயணங்கள் உண்டாகும். துன்பமான நிகழ்வுகள் உண்டாகும். பிறரின் உதவிகள் எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். தீடீர் பணப்பிரச்சினைகள் உண்டாகும். பணி சுமைக்கு ஆளாக நேரிடும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் அவசியம். ஆனால் வார இறுதியில் குடும்ப உறவில் மகிழ்ச்சி காணப்படும். எதிர்பார்த்த அரசாங்க செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பணவரவுகள் அதிகம் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். 
அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்



மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யும் நற்குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...!

இந்த வாரம் வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை காண்பீர்கள். இடம் மாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்பத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும். வியாபாரம் விருத்தியடையும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது. விரும்பிய பொருட்கள் கிடைக்கப்பெறுவீர்கள். சுப செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும். அரசாங்கத்தினரால் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும்;. நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காணப்படும். வாகன யோகங்கள் உண்டாகும். எனவே இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 8 
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




உத்திராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஒரு அனுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே...!

இந்த வாரம் தொழிலில் அதிக இலாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்க காரியங்கள் சாதகமாக அமையும். இடமாற்றம் நல்ல மனமாறுதல்களைக் கொடுக்கும். புதிய வழிகளில் இலாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களால் மகிழ்ச்சி  உண்டாகும். வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் இலாபம் சுமாராக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மக்கள்  மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணிமாற்றங்கள் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். முயற்ச்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். ஆனால் வார இறுதியில்  எந்த விஷயத்திலும் நாட்டம் இருக்காது.வீணான மன உழைச்சல்கள் காணப்படும். 
அதிர்ஷ்ட திகதி: 8
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்.



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எத்தகைய சோதனைகள் வந்தாலும் போராடி ந்ஐயிக்கும் குணம் கொண்ட கும்ப ராசி  அன்பர்களே...!

இந்த வாரம் புதிய தொழில் தி;ட்டம் தீட்டுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். நல்லவர்களின் சேர்;க்கை நல்லகாரியங்கள் செய்வதற்கு வழி வகுக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். மனநிறைவான காரியங்களை செய்வீர்கள். சுப நிகழ்வுகள் உண்டாகும். இல்லத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நவீன உக்திகளால் புதிய ஆதரவைப் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் வீட்டில் அடிக்கடி நடக்கும். வார இறுதியில் முயற்ச்சி செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும். எதிர்;பார்த்த செய்திகள்  தோல்வியில் முடியும். மனசங்கடங்கள் உண்டாகும். வேண்டாத பேச்சுக்களை தவிக்ப்பது நல்லது. வுப்யாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகும். சிலரிடையே மனஸ்தாபங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

ஆழ்ந்த சிந்தனையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் மீன ராசி அன்பர்களே...!  

இந்த வாரம் பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். வியாபாரத்தில் இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பணியிடத்தில் செல்;வாக்கு கூடும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும். அரசினருடன் சுமூகமான போக்கு காணப்படும். காரியத்தில் வெற்றிகள்  உண்டாகும். உறவினர்கள் வருகை உண்டாகும். மனம் அமைதியை விரும்பும்.  நீங்கள் மிகவும் நேசித்த பொருள் உங்களை தேடி வரும்;. வார இறுதியில் வீணான செலவுகள் உருவாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் நஷ்டங்கள் ஆகியவைகளை அடைய நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.பேச்சு செயலில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பணியாளர்கள் திடீர் பணி சுமையால் துன்பத்திற்கு ஆளாவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு, ஆரஞ்சு            
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .