2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (07.08.2011 – 13.08.2011)

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (07.08.2011 – 13.08.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

உறுதியான உள்ளமும் சிந்தனையாற்றல் அதிகம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!                            

இந்த வாரம் உங்களுக்கு புதிய வேலைப் பணிகள் சற்று அலைச்சலை ஏற்படுத்தும். வியாபாரத்தில் நவீன நுட்பங்களை கையாண்டு ஆதாயம் அடையலாம். அழகிய ஆடை உபகரணங்கள் பரிசாக கிடைக்கும். குடும்பத்தில் பெண்களின் பணிவிடைகள் மகிழ்ச்சி தரும். நண்பர்களுடன் உல்லாசப் பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறமையான சாதனைகளினால் வெற்றி காண்பார்கள். அரசாங்க வேலைவாய்ப்புகளுக்கு இடமுண்டு. விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல். நல்ல செய்திகளை கேள்விபடுவீர்கள். வார இறுதியில் எந்த முயற்சியிலும் ஈடுபடும் போது நன்கு அலசி ஆராய்ந்து செயற்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: சிவன்

 

சந்திராஷ்டமம்

ஓகஸ்ட் 07ஆம் திகதி காலை 10.14 மணியிலிருந்து  ஓகஸ்ட் 09ஆம் திகதி மாலை 03.08 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்ளை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சனைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்



கிருத்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கவர்ச்சியான பார்வையும் எதிலும் விட்டுகொடுத்து செயற்படும் இடப ராசி அன்பர்களே..!       

இந்த வாரம் உங்களுக்கு இசையில் நாட்டம் அதிகரிப்பதுடன் இதனால் மனஅமைதி கிடைக்கும், நீண்ட நாள் தடைபட்டிருந்த காரியங்கள் மேன்மை அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கக்கூடும். குடும்ப உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுகமான உணவு இனிதே கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களுடன் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளவும். இல்லையெனில் மனசங்டகளுக்கு வழிவகுக்கும். எச்சந்தர்ப்பத்திலும் பிறரின் பிரச்சினைகளை பேசுவதையும் முன்னிற்பதையும் தவிர்க்கவும். பெண்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றி மறையும். வார இறுதியில் தெய்வீக வழிபாடுகளில் நாட்டம் காட்டுவதனால் நன்மைகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: பிரம்மா
வழிபாடு: கருப்பு தவிர்க்கவும்


சந்திராஷ்டமம்

ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி மாலை 03.08  மணியிலிருந்து ஓகஸ்ட் 11ஆம் திகதி மாலை 09.55 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்ளை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



மிருகசீரிடம் 2,3, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்

எந்த விடயத்தையும் தீவிரமாக ஆராய்ந்து நற்பெயரை பெற்றுக்கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு தொழில் சம்பந்தமான திட்டங்களுக்கு வெளிப் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுப விசேடங்களின் போது உறவினர்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நண்பர்களில் மூலம் புதிய ஆடை உபகரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தொடங்குவதால் சிறு பண நெருக்கடிகள் ஏற்படும். பணம் சேமிப்பதில் கூடிய கவனம் செலுத்தவும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தூய்மையான ஆடைகள் அணியலாம். அனாவசிய பொருள் செலவுகளை தவிர்க்கவும். வார இறுதியில் உங்கள் திறைமையான சாதனைகளை செயற்படுத்தி வெற்றி அடையலாம்.
 

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்

ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி மாலை 09.55 மணியிலிருந்து ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி காலை 06.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்



புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்

எதையும் எளிதில் சாதிக்க முடியும் என்ற மனவலிமையும் அதிக விழிப்புணர்வு கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் பெண்களுடன் அனுசரித்து செயற்படவும். வியாபாரத்தில் நவீன வேலைத்திட்டங்களை நடைமுறைபடுத்துவதை தவிர்க்கவும். இல்லையெனில் நட்டத்தை ஏற்படுத்த கூடும். பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் இடமுண்டு. வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படும். இதனால் உடலால் சில சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதால் மனஅமைதி கிடைக்கும். அயல்தேசங்களிருந்து முக்கிய தகவல் வந்து சேரும். வார இறுதியில் நமது வாழ்க்கைக்கு முன்மாதிரியான பெரியோர்களை கண்டு ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பள், நீலம்
வழிபாடு: (நவக்கிரகம்)




மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்

பிறரை அடக்கியாளும் நிமிர்ந்த நெஞ்சமும் அதிக பிடிவாத குணம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே..!                                                

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் பெண்களின் உதவியுடன் அன்றாட பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்களுடன் வினோத விளையாட்டுக்களில் ஈடுபடும் போது மிக கவனம் தேவை. தொழில் புதிய வாய்ப்புக்கள் சிறப்பான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அரசாங்க ஊழியர்களின் உதவிகள்  தேடிவர கூடும். தொலைதூர பயணங்கள் சிறு அலைச்சலை ஏற்படுத்தினாலும் பயனுள்ளதாக அமையும். சில இடம்மாற்றங்களுக்கு வழியுண்டு. இன்பகரமான செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும். ஒவ்வாத உணவினால் அஜீரணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வார இறுதியில் உடலை உள்ளத்தையும் அதிக அக்கறையுடன் பேணிப் பாதுகாப்பதால் என்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்
 

கடமையில் கண்ணாயிருக்கும் எளிமையான தோற்றமும் கனிவான உள்ளமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!               

இந்த வாரம் உங்களுக்கு உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம். வாகன சாரதிகளுக்கு தூரபிரயாணங்களினால் அதிக இலாபத்தை பெற்றுகொள்ளலாம். வியாபாரத்தில் சக ஊழியர்களுடன் ஒன்றிணைந்து நவீன நுட்பங்களை கையாண்டு மேன்மை அடைவீர்கள். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் பெண்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்க கூடும். தொடங்கும் புதிய காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கலாம். நல்ல நண்பர்களின் நட்புக்கள் கிடைக்க கூடும். வார இறுதியில் இறைவழிபாடுகளில் அதிக நாட்டம் காட்டுவதால் மனதில் சலனங்கள் நீங்கும்.   

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

இறைவன் காட்டும் வழியை வாழ்வில் துணையாக கொண்டு பிறரை மதித்து செயற்படும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு ஆன்மீக பயணங்கள் யாத்திரைகள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். தூய்மையான ஆடைகளை அணியலாம். வீடு அல்லது தொழில் சம்பதமான இடம்மாற்றங்களுக்கு வழியுண்டு. இசையில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள். புதிய காரியங்களை செயல்படுத்தும் போது பணத்தட்டுபாடுகள் ஏற்படகூடும். பணம் சேமிப்பதில் கடின முயற்சி தேவை. அரசாங்க பணியாளர்களின் உதவியுடன் வியாபாரத்தில் நவீன சாதனங்களை கொண்டு அதிக ஆதாயம் அடைதல். பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போது பிறரின் உதவிகள் கிடைக்கக்கூடும். வார இறுதியில் குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடைபெறும் மேலும் பெண்களின் சலுகைகள் மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்

மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க கூடிய பக்குவமும் தன்னடக்கம் அதிகம் கொண்ட விருட்ச்சிக ராசி அன்பர்களே..!    

இந்த வாரம் உங்களுக்கு தீய நண்பர்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நன்மைக்கே. தொழில் ஸ்தானத்தில் மேல் அதிகாரிகளினால் சில இடையூறுகள் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிதானமாக செயல்படவும். மனதில் சிறு குழப்பங்கள் வந்து நீங்கும். குடும்ப உறவினர்களுடன் ஆலய அனுஷ்டனாங்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும் பெரியார்கள் புத்திமதிகள் நல்வழிநடத்தலை ஏற்படுத்தும். நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும். ஆச்சரியமான பொருள் காணக் கிடைத்தல். உங்கள் திறமையான சாதனைகளை வெளிபடுத்தி வெற்றியடைய வாய்ப்புக்கள் கிட்டும். வார இறுதியில் பிறரின் அனாவசிய பிரச்சினைகளிருந்து விலகி இருக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்




முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்

அமைதியான முகத்துதோடு பிறரின் மனதை புரிந்து செயற்படும் கள்ளமில்லா உள்ளம் பெற்ற தனுசு ராசி அன்பர்களே..!                         
   

இந்த வாரம் உங்களுக்கு அழகிய ஆடை அணிகளன்கள் அன்பளிப்பாக கிடைக்க கூடும். அயல்தேசங்களிருந்து புதிய செய்திகள் வந்து சேரும.; நெருங்கி நண்பர்களின் உதவியுடன் புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கூடும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் கல்வியில் திறமையான சாதனைகளை கையாண்டு வெற்றி அடைவார்கள். குலதெய்வ வழிபாடுகளில் அதிக அக்கறை செலுத்துவதால் மனஅமைதி கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தூரபிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம். கேட்ப்பார் பேச்சை கேட்டு அனாவசிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும.; வார இறுதியில் இறைவன் அருளால் மனகஷ்டங்கள் நீங்கி  வாழ்க்கையில் இன்பம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பள், நீலம்
வழிபாடு: பெருமாள்




உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

தோல்விகளை கண்டு தளர்ந்து போகாமல் எதிலும் வெற்றி நடைபோடவேண்டும் என்ற கொள்கை உள்ள மகர ராசி அன்பர்களே..!
 

இந்த வாரம் உங்களுக்கு தொழில் சம்பதமான சில இடமாற்றங்கள் இலாபகரமாக அமையும். மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படுவதால் மனசங்கடங்களை  தவிர்த்து கொள்ளலாம். நீண்ட நாள் நட்புக்கள் பலம்பெறும். புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவு செய்யநேரிடும். திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு கவனம் தேவை. அறுசுவையான உணவு உண்ணலாம். நன்மை பயக்கும் காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. வார இறுதியில் நீண்ட நாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா




அவிட்டம் 3,4,சதயம், பூரட்டாதி1,2,3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம் செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே..!  
                

இந்த வாரம் உங்களுக்கு நவீன வேலைத்திட்டங்களை உடனுக்குடன் முடிப்பீர்கள். வெளிப்பிரயாணங்களின் போது புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க கூடும். உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும் இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பொருள் சேர்க்கை ஏற்படும். பணப்பிரச்சினைகளின் போது பிறரின் உதவியை நாடுவதை தவிர்க்கவும். தூய்;மையான ஆடைகளை அணியலாம். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். வியாபாரத்தில் பகைவர்களினால் மறைமுக போட்டிகள் ஏற்படக்கூடும். அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும். வார இறுதியில் மனதில் உள்ள சோர்வுகள் நீங்கி உற்சாகத்துடன் தமது பணிகளை தொடங்கலாம்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்

காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள் யாரிடமும் மனம் விட்டுப் பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!  

இந்த வாரம் உங்களுக்கு அரசாங்க ஊழியர்களின் உதவி சேவைகள் கிடைக்க கூடும். எதிர்பார்த்த பணவரவு உரிய நேரத்தில் கிடைக்கும். பெண்களுடன் அனாவசிய பேச்சுவார்த்தைகள் மனசங்கடங்களுக்கு வழிவகுக்கும். நீங்கள் செயல்படுத்தும் காரியங்களில் சிறு தோல்விகள் ஏற்படகூடும். அறிமுகமற்ற நண்பர்களின் உதவிகளை நாடுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை மகிழ்ச்சி தரும். உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படும் இதானல் உடல் உபாதைகள் ஏற்படும். மனதில் பயம் உணர்வுகள் தோன்றி மறையும். வார இறுதியில் ஆன்மீக தியானங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதால் வாழ்வில் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X