2024 மே 07, செவ்வாய்க்கிழமை

இந்தவார பலன்கள் (08.05.2011 - 14.05.2011)

A.P.Mathan   / 2011 மே 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (08.05.2011 - 14.05.2011)
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் மனோபலம் அதிகம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் குடும்பத்தாருடன் ஒன்றிணைந்து சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கக்கூடும். வியாபார உத்தியோகத்தர்களுக்கு புதிய முயச்சிகளை மேற்கொள்ள மேல் அதிகாரிகளின் உதவிகள் பயனுள்ளதாக அமையும். அழகிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். நினைத்த காரியத்தை சாதித்து வெற்றி அடைய கடின உழைப்பு தேவை. பெண்களுடன் பொறுமையுடன் பேசுவது நன்று. வார இறுதியில் பல புண்ணிய காரியங்கள், பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

விசித்திரமான ரசனைகளையும் எதையும் நுணுக்கமாக செய்திடும் ஆற்றல் கொண்ட இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் தோல்விகள் நீங்குவதுடன் நவீன தொடர்புகள் தேடி வரும். அரசாங்க பணியாளர்களின் அனுசரணையுடன் நல்ல வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். பெரியார்களுடன் ஆலய அனுஷ்டானங்களில் மகிழ்ச்சியுடன் ஈடுவீர்கள். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கக் கூடும். புதிய வேலை திட்டங்களுக்காக வெளிபிரயாணங்கள் செல்ல நேரிடும். செயல்களில் சிறு தடுமாற்றங்களும் பயமும் ஏற்படக்கூடும். வார இறுதியில் மனதில் இறை நம்பிக்கை அதிகரிப்பதுடன் வாழ்க்கையில் எல்லா தடைகளை தாண்டி உறுதியாக செயல்படலாம்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் தொழில் அல்லது வேலை சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்பட கூடும். பகைவர்களினால் சிலவிதமான சிக்கல்கள், தோல்விகள் வந்து நீங்கும், நிதானம் தேவை. சிலர் தமது பணிகளை பொறுப்புடன் செய்வதுடன் நல்ல காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒருவொருக்கொருவர் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். இன்பமான உறக்கம் மனதுக்கு உற்சாகம் தரும். தேவைகளுக்கு ஏற்ப செலவுகளை மேற்கொள்ளவும், இல்லாவிட்டால் பணப் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். இவ்வார இறுதியில் உங்கள் திறமையினாலும் விடா முயற்சியினாலும் தடைப்பட்டிருந்த காரியங்களை செய்து முடிக்கக் கூடியதாயிருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

தனது தனி திறனால் தன்னை சுற்றி இருப்பவர்களை கவர்ந்திடும் நற்குணங்களை கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் அது நமக்கு பகை ஏற்படுத்த கூடும். புதிய திட்டங்களுக்காக அதிக அலைச்சல்கள் மேற்கொள்வீர்கள், இதனால் உடல் சோர்வுகள் ஏற்படும். எதிர்பாராத செய்திகள், திடீர் பயணங்களை ஏற்படுத்த கூடும். உரிய பணவரவுகள் தாமதமின்றி வந்து சேரும். மேல் அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் நடக்கவும். பெண்களின் அன்பும் அனுசரிப்பும் அதிகரிக்க கூடும். பொழுதுபோக்குகளின் போது பிறரின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்கள் நல்வரவு மகிழ்ச்சியை தரும். இவ்வார இறுதியில் எந்த முயற்சியிலும் ஈடுபடும்போது அவசரமின்றி நிதானமாக செயல்படுவது நன்று.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தோற்றத்துக்கேற்ற இயல்பும் அதிக கர்வமும் சிந்தனையாற்றல் அதிகம் உள்ள சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் முயற்சியுடன் செயல்பட்ட பணிகளில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் பெண்களினால் அனுகூலம் உண்டாகும். நன்மையான காரியங்கள் மனதுக்கு திருப்தியை தரக்கூடும். தேவையற்ற பிரச்சினைகளின் போது வேகத்தை விட்டு விவேகத்தை கைகொள்வது அவசியம். வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். அயல் தேசங்களிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். நீண்ட நாள் பிரிந்து சென்ற நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டும். இவ்வார இறுதியில் மனக் கவலைகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வாழ்க்கையில் பல குறிக்கோள்களுடன் வாழ விரும்பும் கண்ணிய உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு புதிய காரியங்களை செய்யலாம். குடும்பத்தில் சுப விசேஷங்களின் போது பெண்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். வியாபாரத்தில் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். செலவுகள் சற்று அதிகரிக்கும். உயர் உத்தியோகத்தரினால் ஆதாயம் உண்டு. நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இவ்வார இறுதியில் முழு உள்ளத்தோடு இறைவனை தரிசித்து வழிபடுவதனால் வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

மாறுப்பட்ட குணங்கள் உள்ளவர்களை ஆறுதல் பேச்சால் அடக்கியாளும் திறன் கொண்ட துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் புதிய வேலை முயற்சிகளை செய்பவர்களுக்கு அரசாங்க ஊழியர்களின் மூலம் சிறப்பான பணி அமையும். தொழில் அல்லது வீடு சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். அதிக செலவுகளினால் பணப் பிரச்சினைகள் ஏற்படும், சேமிப்புக்களில் அதிக கவனம் செலுத்தவும். தூய்மையான ஆடைகளை அணியலாம். குடும்பத்தில் சொந்தங்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தரும். நீண்ட தூர பயணங்கள் அலைச்சல்களை தரக்கூடும். இன்பமான தூக்கம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறமையான சாதனைகளை முன்னெடுத்தல். இவ்வார இறுதியில் எடுத்த காரியத்தை சாதித்து வெற்றி அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் அதிக தன்னம்பிக்கை உடைய விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் நினைத்ததை சாதித்து வெற்றி அடையலாம். தீய நண்பர்களின் சகவாசங்களினால் சிலவிதமான சிக்கல்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியார் பேச்சை கேட்டு நடப்பது நன்று. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்துவதுடன் பணப் பிரச்சினைகள் சங்கடத்தை தரும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கும். நல்ல செய்திகள் மனதுக்கு உற்சாகத்தை தரும்;. பெண்களுடன் சிறு மனகசப்புக்கள் தோன்றி மறையும். புதிய வேலை தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கக் கூடும். இவ்வார இறுதியில் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் உடனுக்குடன் முடிக்கக் கூடியதாயிருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)




மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் பெண்களுக்கு அழகிய ஆடை, ஆபாரண சேர்க்கை உண்டாகும். ஆச்சரியமான பொருள் காணக் கிடைத்தல். தொழில் ஸ்தானத்தில் முன்னேற்றமும் லாபமும் காணப்படும். அஜீரண சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். இதனால் சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படுதல். குடும்ப உறவினர்கள் நல்ல காரியங்களின் போது முன்னின்று செயல்படுவார்கள். பொழுதுபோக்குகளுக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். இசையில் நாட்டம் அதிகரிக்கும். அரசாங்க உதவிகள் தேடிவரக் கூடும். இவ்வார இறுதியில் மனதுக்கு அமைதி தரும் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)


சந்திராஷ்டமம்
மே 08ஆம் திகதி காலை 04.05 மணியிலிருந்து மே 11ஆம் திகதி காலை 09.02 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து பல சாதனைகள் படைக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் கடின உழைப்பினால் அதிக பணவரவு ஏற்படும். அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பகைவர்களின் பிரச்சினைகளை பேசுவதால் அது சங்கடத்தை ஏற்படுத்தும். வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். மனதளவில் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். வியாபாரத்தில் அதிகாரிகளின் போட்டிகளினால் மந்தநிலை ஏற்படக்கூடும். குடும்பத்தில் பெண்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இவ்வார இறுதியில் கவலைகளை மறந்து நன்மையானதை மட்டும் சிந்திப்பதால் வாழ்வு வளம் பெறும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)


சந்திராஷ்டமம்
மே 11ஆம் திகதி காலை 09.02 மணியிலிருந்து மே 13ஆம் திகதி காலை 11.26 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் உற்சாகத்துடன் அன்றய வேலைப் பணிகளை முடிப்பீர்கள். நெருங்கிய நண்பர்கள் தேடிவர வாய்ப்புண்டு. விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. வாகன சாரதிகளுக்கு தூர பிரயாணங்களினால் அதிக லாபம். வரவுக்கு மீறிய செலவுகளை மேற்கொள்ளல். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். வெண்மையான ஆடைகளை அணியலாம். பெண்கள் தமது கடமைகளை அக்கறையுடன் செய்தல். பணப் பிரச்சினைகளின் போது பிறரின் உதவி நாடும் நிலை ஏற்படக்கூடும். இவ்வார இறுதியில் தீயவர்களின் சகவாசங்களை தவிர்த்து நற்பண்புகளை கற்று வாழ்வது சிறந்ததாகும்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
மே 13ஆம் திகதி காலை 11.26 மணியிலிருந்து மே 15ஆம் திகதி மாலை 12.10 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

தனது கடமைகளை சரியாக செய்து நற்பெயரை பெற்றுக்கொள்ளும் மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொறுப்புடன் நடந்துகொள்ளவும்;. வியாபாரத்தில் சக ஊழியர்களுடனும் அதிகாரிகளுடனும் பகை ஏற்படக்கூடும். பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும். உடலுக்கு உஷ்ணமான உணவுகளை தவிர்த்து நலனை பாதுகாக்கவும். கடின உழைப்பினால் அதிக லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறக்கூடும். பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வெளிதேசங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கும். இவ்வார இறுதியில் நம்மை வழிநடத்தும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம்;.

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X