2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (11.09.2011 - 17.09.2011)

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (11.09.2011 - 17.09.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கம்பீரமான தோற்றமும் ஞானமும் நேருக்கு நேர் சந்திக்கும் துணிவும் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு முயற்சியால் செய்யும் காரியங்கள் தடையின்றி நிறைவேறும். வெளிப் பிரயாணங்களுக்கு அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் பரிசாக கிடைக்கக் கூடும். தொலைதூர செய்திகள் நன்மையாக அமைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை ஏற்படும். விநோத விளையாட்டுக்களில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. பெண்களின் அக்கறையும் அனுசரிப்பும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும். தொழில் ஸ்தானத்தில் மேல் அதிகாரிகளின் உதவியுடன் நவீன நுட்பங்களை கையாண்டு ஆதாயம் அடையலாம். தேவையற்ற பிரச்சினைகளுக்கு முன்னிற்காமல் தமது கடைமை சரிவர செய்துவர வாழ்வில் சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.    

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கவர்ச்சியான பார்வையும் எதிலும் விட்டுக்கொடுத்து செயல்படும் இடப ராசி அன்பர்களே..!

இந்நவாரம் உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். வியாபார உத்தியோகத்தர்கள் தமது பணிகளை உற்சாகத்துடன் மேற்கொள்வார்கள். சுவையான உணவு உண்ணலாம். குடும்பத்தில் சுபகாரியங்களினால் உறவினர்கள் ஒன்றுபட வாய்ப்புண்டு. அரச உதவிகள் தேடி வரக்கூடும். வெளிப் பிரயாணங்கள் சிறு அலைச்சலை ஏற்படுத்த கூடும். பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளை வெளிகாட்டி பயன் அடைவார்கள். பெண்களுடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் நீங்கி அக்கறையுடன் செயல்படுவார்கள். அன்றாட வேலைத் திட்டங்களை சிந்தித்து செயல்படுவதால் வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

புன்னகை தவழும் முகமும் பிறரை கவரும் வசீகரமும் தனி ஆற்றலினால் காரியத்தை சாதிக்கும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய காரியங்களை திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை சீராக பாதுகாப்பதன் மூலம் உஷ்ண சம்பந்தமான உபாதைகளை தவிர்த்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் நவீன தொடர்புகளினால் நல்ல திருப்புமுனை ஏற்படுத்தும். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். நீண்ட தூர செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்தக் கூடும். பணப் பிரச்சினைகளின் போது பிறரின் உதவிகள் மன ஆறுதலை தரும். தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்துக்கொள்வது நன்மைக்கே. நிம்மதியான உறக்கம் மனதுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். பெரியார்களின் அறிவுரைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதால் வாழ்க்கையில் மேன்மை அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
வழிபாடு: குருபகவான்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

சுறுசுறுப்பும் விழிப்புணர்வும் அழகிய தோற்றமும் இனிய சுபாவமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு கூட்டுத் தொழிலை விரிவுபடுத்த நண்பர்களின் உதவிகள் கிடைக்க கூடும். இதனால் பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும், மேலும் குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சியை தரும். செலவுகள் சற்று அதிகரிக்கும். இசையில் நாட்டம் அதிகரிப்பதுடன் மனதில் சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். வாகன சாரதிகளுக்கு தூர பயணங்களின் மூலம் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். அரச வேலைவாய்ப்புக்கள் தேடிவரக் கூடும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று நம்பிக்கையோடு வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். மனதில் நன்மையானதை மட்டும் சிந்தித்து செயல்படுவதால் தீமைகள் விலகி செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 10ஆம் திகதி மாலை 01.02 மணியிலிருந்து செப்டெம்பர் 12ஆம் திகதி காலை 12.07 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

நிமிர்ந்த நெஞ்சமும் நேர்கொண்ட பார்வையும் வாக்குவன்மையும் வணங்காத் தன்மையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். சுற்றுலா பயணங்களின் போது அழகிய ஆச்சரியமான பொருள் காணக் கிடைக்கும். தடைப்பட்டிருந்த வேலைத் திட்டங்களை உடனுக்குடன் முடிப்பீர்கள். இடம் அல்லது தொழில் மாற்றங்களுக்கு வழி உண்டு. மனதில் சிறு குழப்பங்கள் துன்பம் ஏற்பட்டு நீங்கும். பகைவர்களினால் சில பிரச்சினைகள் தேடிவரக்கூடும். சுயசிந்தனையுடன் செயல்படவும். புண நெருக்கடி ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் செலுத்தவும். விநோத விளையாட்டுகளில் ஈடுபடும் போது மிக கவனம் தேவை. புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். நமது வாழ்க்கை முன்மாதியாக இருக்கும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதம் பெற்று வாழ வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 12ஆம் திகதி காலை 12.07 மணியிலிருந்து செப்டெம்பர் 15ஆம் திகதி மாலை 12.31 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எளிமையும் வலிமையும் இணைய உண்மைக்கு மதிப்பளித்து அதன்படி வாழ எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரம் தொடர்பான சில பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். மனதுக்கு அமைதி தரும் தூய்மையான ஆடைகளை அணியலாம். பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டவைக்கு செலவு செய்ய நேரிடும். தொடங்கிய காரியத்தில் வெற்றி கிடைக்கும். உடலுக்கு ஒவ்வாத உணவினால் அஜீரணம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். நலனில் அக்கறை செலுத்தவும். அறிமுகமற்ற நட்புக்களை தவிர்க்கவும். மேல் அதிகாரிகளின் உதவியுடன் புதிய திட்டங்களை நடைமுறைப் படுத்தலாம். எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். பெண்களின் ஆதரவு அதிகரிக்கக் கூடும். செய்யும் செயலிலும் பிறருடன் பேசும் வார்த்தைகளிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நன்று.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)


சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 15ஆம் திகதி மாலை 12.31 மணியிலிருந்து செப்டெம்பர் 17ஆம் திகதி காலை 01.20 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

இறைவன் காட்டும் வழியை வாழ்வில் துணையாக கொண்டு பிறரை மதித்து செயல்படும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் பெண்களுடன் சிறு வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். வியாபாரத்தில் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும், இதனால் புதிய வாய்ப்புக்கள் பின்தள்ளப்படக்கூடும். நீண்டநாள் எதிர்பார்த்த நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். அறுசுவையான உணவு உண்ணலாம். தொடங்கும் காரியங்களில் சில தடங்கள் சங்கடத்தை ஏற்படுத்தும். அனாவசிய பொருள் செலவுகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களுடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். வெளி தேசங்களிலிருந்து வரும் செய்திகள் அலைச்சலை ஏற்படுத்தக் கூடும். எச்சந்தர்ப்பத்திலும் இறைவனை மறவாது நன்மைகள் செய்து வருவது வாழ்க்கைக்கு உகந்ததாகும்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

முன்கோபம் அதிகம் உள்ள மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் மதி மந்திரியாக வலம் வரும் விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்ப உறவினர்களின் அன்பும் அக்கறையும் மனதுக்கு உற்சாகம் தரும். பொழுதுபோக்குகளுக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும். புதுமையான பொருள் காணக்கிடைத்தல். நண்பர்களின் உதவியுடன் புதிய வேலைப் பணிகளை உடனுக்குடன் செயல்படுத்தலாம். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தூய்மையான ஆடைகளை அணியலாம். அரசாங்க ஊழியர்களினால் சில சலுகை கிடைக்க கூடும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் செலுத்தவும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை நீக்கி இவ்வார நாட்களை நன்னாளாக நேசிக்கவும். 

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: சிவன் (சந்திரன்)




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அறிவு கூர்மையுடனும் எந்த செயலையும் தைரியத்துடனும் செய்யும் ஆற்றலை பெற்ற தனசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் விநோத விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். நெருங்கிய உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் உயர் அதிகாரிகளின் நட்புக்கள் நல்ல ஆதாயத்தை ஏற்படுத்தும். செலவுகள் சற்று அதிகரிக்க கூடும். மனதுக்கு பயத்தை ஏற்படுத்தும் சில சம்பவங்கள் நடைபெறக்கூடும். மனம் தளராது நம்பிக்கையுடன் செயல்படவும். புதிய பயணங்கள் செல்ல பிறரின் உதவிகள் கிடைக்கும். பெரியார்களின் அறிவுரைகள் வாழ்க்கை புதிய வழிநடத்தலை ஏற்படுத்தும். பெண்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். அழகிய ஆடை உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். ஆலய அனுஷ்டானங்களில் அதிக நாட்டம் செலுத்துவதால் மனஅமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் இயற்கையாக பெற்ற கடினமாக உழைக்கும் சுபாவம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சில மனகஷ்டங்கள் தோன்றி மறையும். அறுசுவையான உணவுகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளை தொடங்க அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். திருடர்களிடம் கவனம் தேவை. குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களுடன் விநோத விளையாட்டுக்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் நவீன திட்டங்களை முன்னெடுக்கலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், நாவடக்கம் அவசியம். தொலைந்த பொருள் கிடைக்க வாய்ப்புண்டு. வாழ்வில் எச்சந்தர்ப்பத்திலும் மனிதர் மனங்களை புரிந்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

செய்யும் செயலை சிறப்பாகவும் செம்மையாகவும் செயல்படுத்தும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் புண்ணிய காரியங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். சிலர் புதிய சாதனைகளை கையாண்டு மேன்மை அடைவார்கள். திடீர் பயணங்கள் செலவுகளை ஏற்படுத்தினாலும் பயனுள்ளதாக அமையும். நட்புவட்டம் விரிவடையும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும், அவதானத்துடன் செயல்படவும். தேவையற்ற வாய்வார்த்தைகள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். சரும நோய்கள் வந்து நீங்கும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வாழ்வில் வரும் சோதனைகளை கண்டு பின்செல்லாது பொறுமையுடன் செயல்படுவது நன்று.    

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

ஒரு கை செய்த உதவி மறு கை அறியாத வண்ணம் சுதந்திரமாக செயல்படும் மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தூய்மையான ஆடைகள் அணியலாம். தொழிலை மேம்படுத்த அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். அறுசுவையான உணவு உண்ணலாம். அயல் தேசங்களிலிருந்து செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் பெண்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கக் கூடும். உல்லாச பிரயாணங்களுக்கு அதிக செலவு செய்யநேரிடும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். பகைவர்களுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளில் நிதானம் தேவை. நவீன தொடர்புகள் சிறு அலைச்சலை ஏற்படுத்தினாலும் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். தெய்வீக சிந்தனைகளை வாழ்வில் பின்பற்றி வாழ்வதனால் மனதில் சோர்வுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
வழிபாடு: (நவகிரகம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X