2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (12.02.2012 - 18.02.2012)

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (12.02.2012 - 18.02.2012)
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில்; ஏதாவது ஒரு விடயத்தில் பிறரின் உதவியை நாடுவீர்கள். இதனால் வீண் மனக்கஷ்டங்கள் உண்டாகும். எனவே கவனத்துடன் செயல்;படுவது அவசியமாகும். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி மற்றும் உணவால் வயிற்றில் பிரச்சினைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். மற்றும் வீட்டில் திருடர்களின் தொந்தரவுகள் காணப்படும், கவனம் தேவை. மனதளவில் பயம் உண்டாகும். ஆனாலும் வார இறுதியில் வயது மூத்தோர்களின் அசீர்வாதம் மற்றும் ஆலய தரிசனங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் மனம் அமைதியடையும். மனதிற்கு விருப்பமான விடயங்களில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி: 15 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


சந்திராஷ்டமம்
பெப்ரவரி 14ஆம் திகதி மாலை 08.00 மணியிலிருந்து பெப்ரவரி 16ஆம் திகதி மாலை 04.52 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு மனதில் உற்சாகமான நிலை மற்றும் நல்லவர்களின் சேர்க்கைகள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள்; உண்டாகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொண்டு தொழிலில் புதிய உக்திகளை செலுத்தி லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். பயணங்களினால் உணவு விடயத்தில் தட்டுப்பாடுகள் காணப்படும். உணவில் கவனம் தேவை. தொட்டது துலங்கும் வாரமிது, எனவே புதிய எண்ணங்களை நிறைவேற்றலாம். மேலும் மேலதிகாரிகளின் சந்திப்புக்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். வெற்றிகளை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
பெப்ரவரி 16ஆம் திகதி மாலை 04.52 மணியிலிருந்து பெப்ரவரி 18ஆம் திகதி காலை 05.00 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவார தொடக்கத்தில் உங்களுக்கு நல்லவர்களின் சேர்க்கை மற்றும் உடன் பிறந்தவர்களின் வருகை ஆகியவைகளினால் உறவுகள் பலப்படும். மற்றும் நிறைவான உணவு, உறக்கம் ஆகியவை கிடைக்கப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் இல்லம் தேடி வரும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். மனதளவில் அலைச்சல் உண்டாகும். வார இறுதியில் பெண்களுடன் விவாதங்கள் ஏற்படும். மற்றும் பிரச்சினைகள் துன்பங்களை அடைய நேரிடும், மனதளவில் குழப்பம் உண்டாகலாம். எனவே வாய் வார்த்தைகளில் கவனம் தேவை. பயணங்களினால் தலைவலி ஏற்பட்டு மனதில் பயம் உண்டாகும். இதனால் உடல் சோர்வுடன் காணப்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீண்டதூர பிரயாணத்தின் மூலம் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும். மேலும் தொழிலில் புதிய முறைகளைக் கையாள்வீர்கள். தனலாபம் உண்டாகும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள். அப்பொழுது கவனம் தேவை. மகிழ்ச்சி நிலவும். உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். மனதிற்கு பிடித்தமான காரியங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். நல்லவர்களின் உறவுகள் மற்றும் வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நண்பர்களின் மூலம் சில நல்ல உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலில் ஆரோக்கியமான போட்டிகள் உண்டாகும். மகிழ்ச்சியான வாரம் இது. 

அதிர்ஷ்ட திகதி: 14 
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.  விருந்தினர்;களின் வருகை காணப்படும். பணத் தட்டுப்பாடு உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும், அதிக பணலாபம் உண்டாகும். சுவையான உணவு உண்ணுதல், பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் செல்லும் சூழ்நிலைகள் உருவாகலாம், இதனால் அலைச்சல் தோன்றி மறையும். அரசாங்க காரியங்கள் அனைத்தும் அனுகூலமாகவே முடியும். வார இறுதியில் பெண்களுடன் வீண் விவாதங்கள் உண்டாகும். பிரச்சினைகள் ஏற்படலாம். முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும். மனதில் துக்கங்கள் தோன்றும். வார இறுதி உங்களுக்கு சுமாராகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவார தொடக்கம் உங்களுக்கு சுமாராகவே அமையும். வீட்டில் களவு போகும் சூழ்நிலை உருவாகும், இதனால் பயம் மற்றும் வீண் அலைச்சல்கள் உண்டாகும். மனம் சஞ்சலமடையும். மேலதிகாரிகள் மற்றும் ஆகாதவர்களுடன் வீணான பிரச்சினைகள் உருவாகலாம். கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும். தீயவர்களின் நட்பினால் தொழிலில் நஷ்டமடைவீர்கள். சிக்கல்கள் உருவாகலாம். வார இறுதியில் நல்ல பலன்கள் உண்டாகும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். லாபங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று மனதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். ஆலய தரிசனம் செல்வீர்கள்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடிச் சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுடைய உயர் அதிகாரிகளின் சந்திப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். எடுத்த  காரியம் வெற்றியடையும். மனதிற்கு பிடித்தமான பொருட்கள் மற்றும் ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும். இ;டமாற்றம் மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். வார இறுதியில் தலைவலி ஏற்பட்டு; உடல் சோர்வு, மனதில் பயம் உண்டாகும். பிறரிடம் உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகவே மனக்கசப்புகள் உருவாகலாம். மனதில் குழப்பங்கள் தோன்றும். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்;. தீயவர்களுடைய நட்புகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் இடம்விட்டு வேறு இடம் மாறுதல், இதனால் லாபம் உண்டாகும். சுவையான உணவு உண்ணுதல், பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல், அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். இதனால் லாபமடையும் சூழல் உண்டாகும். அரசாங்கத்தினரால் அனுகூலம் கிடைக்கப்பெறுவீர்கள். தவிர்க்க முடியாத சில முக்கிய செலவுகள் உண்டாகும். காரியங்கள் அனைத்தும் சுமூகமாக முடியும். வெளியூர்களில் உள்ள ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து மனதில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சில தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும்.

அதிர்ஷ்ட திகதி: 14 
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் உண்டாகும். எதிர்பார்த்த செய்திகள் வந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணத்திற்கு தட்டுப்பாடு காணப்படும். பண விடயத்தில் கவனம் அவசியம். சிறு அலைச்சல்கள் காணப்பட்டாலும் வெற்றிகள் உண்டாகும். ஞானிகள் மற்றும் வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் வெளிநாடு மற்றும் புதிய ஓர்டர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நண்பர்கள் வட்டம் அதிகமாகும். வார இறுதியில் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையெனில் அவதிப்பட நேரிடும். சிறிதளவு மனதில் பயம் தோன்றும். வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உருவாகும். வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 12    
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தொடக்கத்தில் சில கெட்ட பலன்களே காணப்படுகின்றன. முயற்சியில் தோல்விகள் காணப்படும். துக்கமான சூழ்நிலைகள் நிலவும். வீண் அலைச்சல் மற்றும் செய்யும்  செயல்களில் பிழைகள் நிகழும். அனாவசிய செலவுகள் காணப்படும். தொழிலில் தடைகள் காணப்படும். ஆனாலும் மனம் தளர வேண்டாம். வார இறுதியில் மகிழ்ச்சிகள் உண்டாகும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். நல்ல தூக்கம் கிடைக்கும். தனலாபம் உண்டாகும். சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். பெண்களி;டமிருந்து உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் வருகை மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மேலும் பெண்களின் மூலம் புதிய தொழில்கள் கிடைக்கப்பெறுவீர்கள். மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட திகதி: 12    
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உடல் நிலையில் சோர்வு காணப்படும். மனதில் குழப்பமான சூழல்கள் உண்டாகலாம். பெண்களுடன் வேண்டாத விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். முயற்சியில் தோல்வி மற்றும் நஷ்டங்களை அடைவீர்கள். வேண்டிய சிலர் ஏமாற்றங்களை தந்து மனதை காயப்படுத்துவார்கள். வார இறுதியில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று நதிகளில் நீராடி மனதை இறை நிலைப்படுத்துவீர்கள். மனம் மகிழ்ச்சியடையும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வார இறுதியில் நல்லவர்களின் சேர்;க்கை நல்லகாரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். பிரயாணங்களின் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.  

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்





பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். ஆதிக பணலாபம் உண்டாகும். காரிய அனுகூலங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தொட்டது துலங்கும். மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்புகளை பெறுவீர்கள். பிரச்சினைகளை லாவகமாக கையாண்டு எளிதில் வெற்றி காண்பீர்கள். தொழில் சம்மந்தமான பயணங்களின் மூலம் லாபங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வார இறுதி நாட்களில் கவனம் தேவை. உணவுகளினால் வயிற்றில் பிரச்சினைகள் உண்டாகும். பயணங்களில் சில தடைகள் காணப்படும். உடலில் உஷ்ணம், காய்ச்சல், தலைவலி தோன்றும். மனதில் அலைச்சலும் பயமும் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் போகவே மனக்கசப்புகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


சந்திராஷ்டமம்
பெப்ரவரி 12ஆம் திகதி மாலை 05.17 மணியிலிருந்து பெப்ரவரி 14ஆம் திகதி மாலை 08.00 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X