2024 மே 08, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (13.02.2011 - 19.02.2011)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (13.02.2011 - 19.02.2011)

 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

காரணமின்றி எதையும் பேசாது சந்தர்ப்பத்துக்கு தகுந்தவாறு மனதில் பட்டதை தெளிவாக பேசும் மேட ராசி அன்பர்களே..!


இந்தவாரம் வியாபார விரித்திக்காக புதிய வழிமுறைகளை கையாண்டு அதிக லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் வலிமை பெறும். விசேடமாக பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும். அன்றாட வேலைப் பணிகளை விரைவாக செய்து முடிக்கலாம். நீண்ட நாட்களின் பின் நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கக்கூடும். உயர் உத்தியோகத்தரால் சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு, பொறுமையுடன் செயல்படவும். இசையில் அதிக ஈடுபாடு செலுத்துவதால் மனஅமைதி கிடைக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். வீடு அல்லது காணி சம்பந்தமான சில இடமாற்றங்களுக்கு வழியுண்டு. வார இறுதியில் தொடங்கிய காரியத்தை உற்சாகத்துடன் செய்து முடிக்கலாம்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி





கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கருத்திற்கோர் விடிவெள்ளியாய் விளங்கும் இடப ராசி அன்பர்களே..!


இந்தவாரம் நீங்கள் புதிய சாதனைகளை மேம்படுத்தி வெற்றி காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகள், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதால் மனஅமைதி கிடைக்கும். வெண்மையான ஆடைகளை அணியலாம். குடும்பத்தில் சுபவிசேஷங்களின்போது உறவினர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடிவரக்கூடும், இதனால் அதிக பணவரவு ஏற்படும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செயல்படுத்துவார்கள். இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும். அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்க கூடும். வார இறுதியில் நல்ல நண்பர்களின் ஒற்றுமை பலம்பெறும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்



 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

எந்த காரியத்தையும் முன்னின்று செயல்படுத்தும் ஆற்றலும் பிறருடன் மென்மையாக பழகும் மிதுன ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு நல்ல நண்பர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும். தொலைந்த பொருளை மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. நீண்டதூர பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் பயனுள்ளதாக அமையும். மாணவர்கள் கல்வியில் திறமையான சாதனைகளை கையாண்டு வெற்றி அடையலாம். வியாபாரத்தில் பணத்தட்டுப்பாடுகள் ஏற்படும், இதனால் புதிய வாய்ப்புக்கள் பின்தள்ளபடும். பணம் சேமிப்பதில் கடின உழைப்பு தேவை. பகைவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதாரவும் அதிகரிக்கும். சில உடல் உபாதைகளினால் சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படும், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவும். வார இறுதியில் இறைவழிபாடுகளில் அதிக நாட்டம் காட்டவும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

அதிக சிந்தனை திறனும் பலரின் மனதை புரிந்து செயல்படும் கனிவான உள்ளம் பெற்ற கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் தொழில் தொடர்பான திட்டங்களை சக ஊழியர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுத்தலாம். நண்பர்களுடன் சுற்றுலா பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், இதன்போது ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்யோன்யம் பலம்பெறும். எதிர்பாராத புதிய வேலைவாய்ப்புக்கள் தேடிவர கூடும். பெண்களுடன் அனுசரித்து நடப்பதால் அனாவசிய மனசங்கடங்களை தவிர்த்துக்கொள்ளலாம். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும் வார இறுதியில். கேட்பார் பேச்சுகளை பொருட்படுத்தாது சுயசிந்தனையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

புன்னகை கொண்ட முகமும் தனக்குள் பல கலைகளை பிறருக்கு வெளிகாட்டாது புரியாத புதிர்போன்று செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே..!


இந்தவாரம் கடினமான காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும். பிறரின் பிரச்சினைகளை முன்னின்று வாதிடுவதால் அது நமக்கே பகையை ஏற்படுத்தும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். குடும்பத்தாருடன் ஆன்மீக யாத்திரைகள் செல்வதனால் மனதில் குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் உதவியுடன் புதிய வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். விநோதங்கள் விபரிதத்தை ஏற்படுத்தாவண்ணம் செயல்படவும். செலவுகள் சற்று அதிகரிக்கும், வார இறுதியில் நமது கடமைகளை சரிவர செய்து வாழ்வில் மேன்மை அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கற்பனை திறன் அதிகம்கொண்ட நீங்கள்; எல்லோருடனும் எளிமையாக பழகும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்ப உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பெண்களுக்கு அழகிய ஆடை அணிகலன்கள் பரிசாக கிடைக்க கூடும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். வியாபார உத்தியோகத்தர்கள் தமது பணியை பொறுப்புடன் செய்து முடிப்பார்கள். நீண்டதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். திருடர்களின் நடமாட்டம் மனபயத்தை ஏற்படுத்தும். அரசாங்க உதவியுடன் நவீன வேலைத் திட்டங்களை நடைமுறைபடுத்தலாம். தூய்மையான ஆடைகளை அணியலாம். நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும் வார இறுதியில். நமது வாழ்வில் முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதம் பெற சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

வாழ்வில் பல சோதனைகளை தாண்டி துணிவோடு செயல்படும் வெள்ளையுள்ளம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கு அரசாங்க வழியில் சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்களின் ஒற்றுமை வலிமைபெறும். குடும்பத்தில் நலன்விரும்பிகளின் வருகை மகிழ்ச்சி தரும். புண்ணிய காரியங்களில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். அதிக செலவுகளினால் பணதட்டுபாடுகள் ஏற்படும். பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை. பெண்களுடன் கோபத்தில் பேசும் வார்த்தை மனசங்கடங்களுக்கு வழிவகுக்கும், நாவடக்கம் அவசியம். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. வெளிதேசங்களிருந்து முக்கிய தகவல்கள் வந்து சேரும். வார இறுதியில் தியானங்கள், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதால்  வாழ்வில் ஏற்படும் துன்ப- துயரங்கள் மறையும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

நெருக்கடி நேரத்திலும் மனம் தளராது எதையும் தாங்கும் இதயம் கொண்டவராக செயல்படும் விருட்சிக ராசி அன்பர்களே..!


இந்தவாரம் பல நவீன நுட்பங்களை கையாண்டு மேன்மை அடையலாம். சில ஒவ்வாத உணவினால் அஜீரண சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், உடல் நலனை பேணிப் பாதுகாக்கவும். தொழிலில் மந்தநிலை மாறி புதிய வாய்ப்புக்கள் தேடிவருதல், இதனால் பணவரவு அதிகரிக்கும். சிலர் ஆன்மீக யாத்திரைகளின்போது மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெறவாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் பெண்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். சில இடமாற்றங்களுக்கு வழியுண்டு. தொடங்கும் காரியங்கள் சிறு அலைச்சலை ஏற்படுத்தினாலும் வெற்றி அடையும். பொருள் சேர்க்கை ஏற்படக்கூடும். குடும்பத்தாருடன் பொழுதுபோக்குகளில் உற்சாகத்துடன் ஈடுபடலாம். வார இறுதியில் மனதுக்கு நிறைவு தரும் சுபவிசேஷங்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
பெப்ரவரி 13ஆம் திகதி காலை 12.20 மணியிலிருந்து பெப்ரவரி 15ஆம் திகதி காலை 04.32 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அறிவு கூர்மையுடனும் எந்த செயலையும் தைரியத்துடனும் செய்யும் ஆற்றலை பெற்ற தனசு ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு எதிர்பாராத புதிய செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்த கூடும். அனாவசிய ஆடம்பர செலவுகளை மேற்கொள்வீர்கள். தீய நண்பர்களின் சகவாசங்களினால் சில குழப்பங்கள் ஏற்படும். அவதானத்துடன் செயல்படவும். வியாபார முன்னேற்றத்தில் சிறு தடைகள் ஏற்படக்கூடும், இதனால் பணப் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்களின்போது உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுவையான உணவு உண்ணலாம். மனசோர்வுகள் வந்து நீங்கும். உயர் அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் நடந்துகொள்ளவும், இல்லையெனில் வீண் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வார இறுதியில்; எச்சந்தர்ப்பத்திலும் இறைவனை மறவாது செயல்படுவது சாலச் சிறந்ததாகும்.
 
அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


சந்திராஷ்டமம்:
பெப்ரவரி 15ஆம் திகதி; காலை 04.32 மணியிலிருந்து பெப்ரவரி 17ஆம் திகதி காலை 05.26 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மறப்போம் மன்னிப்போம் என்பதில் பிறரின் தவறுகளை மன்னித்து ஏற்றுகொள்ளும் மகர ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு பெரியார்களின் அறிவுரைகள் நல்வழிநடத்தலை ஏற்படுத்தும். புதிய முயற்ச்சிகளில் சிறு தடைகள் வந்து நீங்கும். நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, கவனம் தேவை. நன்மை பயக்கும் காரியங்களில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும். வியாபார விரித்திக்காக நவீன வழிமுறைகளை கையாண்டு வெற்றி அடையலாம். பகைவர்களுடன் கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். அரசாங்க வேலைவாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். வார இறுதியில் நமது பேச்சும் சிந்தனையும் மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாவண்ணம் செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


சந்திராஷ்டமம்:
பெப்ரவரி 17ஆம் திகதி காலை 05.26 மணியிலிருந்து பெப்ரவரி 19ஆம் திகதி காலை 04.50 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எவருக்காகவும் கொள்கையை மாற்றிக்கொள்ளாது ஏமாற்றங்களை கண்டு கலங்காத கும்ப ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும். அன்றாட வேலைப் பணிகளை உற்சாகத்துடன் செயல்படுத்தலாம். சில சரும உபாதைகள் வந்து நீங்கும், தேகசுகத்தை பாதுகாக்கவும். தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களுடன் பகை ஏற்படவாய்ப்புண்டு. அயல்தேசங்களிருந்து முக்கிய தகவல்கள் வந்து சேரும். தூய்மையான ஆடைகளை அணியலாம். புதுமையான பொருள் காணக்கிடைத்தல். நண்பர்களுடன் ஒன்றிணைந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும், பணம் சேமிப்பதில் அக்கறை செலுத்தவும். வார இறுதியில் பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படுவதால் சங்கடங்களை தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

எல்லோரும் இன்புற்று வாழவேண்டு என்றும் நல்லதே நினைக்கும் பண்பாளராக விளங்கும் மீன ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு புதிய முயற்சிகளினால் முன்னேற்றம் ஏற்படும். சில இடமாற்றங்களுக்கு வழியுண்டு. பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்யநேரிடும். வியாபாரம் தொடர்பான வேலைகளுக்கு பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். அழகிய ஆடை, உபகரணங்கள் சேர்க்கை. குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். பெண்களின் அன்பும் ஆதாரவும் அதிகரிக்கக்கூடும். இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும், இதனால் மனஅமைதி கிடைக்கும்.  பணப்பிரச்சினைகள் சற்று அலைச்சலை ஏற்படுத்தக்கூடும். நீண்டநாள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். வார இறுதியில் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு செலுத்துவதால் நன்மைகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
வழிபாடு: நவகிரகம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X