2024 மே 27, திங்கட்கிழமை

இந்தவார பலன்கள் (14.08.2011 - 20.08.2011)

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (14.08.2011 - 20.08.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பிறரின் மனதை கவரும் பேச்சும் கலை ஆர்வம் அதிகம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் நண்பர்களுடன் ஒன்றிணைந்து புதிய தொழில் தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பினால் அதிக பணவரவு கிடைக்கும். சுற்றுலா பிரயாணங்கள் செல்வதன் மூலம் அழகிய ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். பெண்களுடன் வேண்டாத விதண்டா வாதங்களை தவிர்க்கவும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கு சிறு சிரமங்களை எதிர்நோக்கநேரிடும். நீண்ட நாள் தொலைந்த பொருளை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். அனாவசிய செலவுகள் அதிகரிக்க கூடும். இக்காலகட்டங்களில் பிரார்த்தனைகள் பூஜைகளில் ஈடுபடுவதனால் கஷ்டங்கள் விலகி செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

சாமர்த்தியமாக எந்த வேலையும் செய்துகொள்ளும் வெகுளியான உள்ளம் பெற்ற இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நன்மையான காரியங்களில் நாட்டம் அதிகரிப்பதுடன் ஆன்மீக பிரயாணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிட்டும். சாதுக்களை தரிசித்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம். இசையில் ஆர்வம் காட்டுதல், குடும்பத்தில் சுப விசேஷங்களினால் நெருங்கிய சொந்தபந்தங்களின் நல்வரவு மனதுக்கு இன்பத்தை தரும். தொழில் தொடர்பான இடமாற்றங்கள் பயனுள்ளதாக அமைய வாய்ப்புண்டு. நண்பர்களின் மூலம் அழகிய ஆடை உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். அறுசுவையான உணவுகள் உண்ணலாம். பொருள் திருட்டுக்களினால் மனபயங்கள் ஏற்படும், அவதானத்துடன் இருக்கவும். இக்காலகட்டங்களில் எதிர்பாராத புதிய செய்திகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் தமது பொறுப்புக்களை சரிவர செய்து நன்மதிப்பை பெறுவார்கள். மனதில் சிறு கவலைகள் சங்கடங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் பகைவர்களினால் போட்டி இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பணத் தட்டுப்பாடுகளினால் பிறரின் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்படக்கூடும். தேவையற்ற பிரச்சினைகளை மற்றவர்களிடம் பேசுவதையும் முன்னிற்பதையும் கண்டிப்பாக தவிர்க்கவும். பெரியார்களின் அன்பும் ஆதரவும் நம்பிக்கை தரும். இக்காலகட்டங்களில் ஆன்மீக தியானங்கள் நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் உறுதுணையை தரும்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் தாழ்ந்த உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் பல புதிய சாதனைகளும் திறமைகளினாலும் உயர்வு அடையலாம். வெண்மையான ஆடைகளை அணிதல். பொழுதுபோக்குகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்க கூடும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், உடலுக்கு அதிக களைப்பு உணர்வு தோன்றும். நிம்மதியான உறக்கம் இனிதே கிடைக்கும். பணத் தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சேமிப்புக்களை அதிகரிப்பதில் அதிக ஊக்கம் தேவை. குடும்பத்தில் நலன்விரும்பிகளின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். இக்காலகட்டங்களில் நாம் சிந்தித்து செயல்படாத சில காரியங்கள் தவறுகளை ஏற்படுத்தக்கூடும், ஆழம் அறியாமல் காலை விடாமல் இருப்பது நல்லது. 

அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 14ஆம் திகதி காலை 06.37 மணியிலிருந்து ஓகஸ்ட் 16ஆம் திகதி மாலை 05.20 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பிடிவாதத்தை பெரிய சொத்தாக பாதுகாக்கும் அதிக அன்புக்கு மட்டுமே அடிபணியும் சிம்மம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒருவொருக்கொருவர் அன்யோன்யமாக செயல்படுவார்கள். புதிய வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள். தொலைத்தூர பயணங்கள் செல்வதால் அனுகூலம். உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற வாய்வார்த்தைகள் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடலால் சில உபாதைகள் ஏற்படும், ஒவ்வாத உணவை தவிர்ப்பது நல்லது. தீய நண்பர்களுடன் சேர்ந்து அனாவசிய செலவுகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கக்கூடும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை பெரிதுபடுத்தாது பொறுமையுடன் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 16ஆம் திகதி மாலை 05.20 மணியிலிருந்து ஓகஸ்ட் 18ஆம் திகதி காலை 05.43 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் தொடங்கும் காரியம் அனைத்தும் செய்து முடிக்க கடின முயற்சி தேவை. பிறரின் பேச்சை கேட்டு செயல்படுவதை தவிர்த்துக்கொள்ளவும். சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும், இதனால் உடல் நலன் பாதிப்படையும். தொழில் தொடர்பான பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தக் கூடும். பகைவர்களினால் சிலவிதமான சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இசைத்துறையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீடு அல்லது காணி சம்பந்தமான இடமாற்றங்களுக்கு வழியுண்டு. நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இக்காலகட்டங்களில் நமது வாழ்வில் முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களின் ஆசீர்வாதம் கிடைக்கக் கூடும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 18ஆம் திகதி காலை 05.43 மணியிலிருந்து ஓகஸ்ட் 21ஆம் திகதி மாலை 06.16 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துல்லியமாக எடைபோடக்கூடியவர்கள், ஆடம்பரமான வாழ்கை உள்ள துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் அறிமுகமற்ற நண்பர்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், இல்லாவிடின் தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சொந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சியும் உற்சாகமும் கிடைக்கும். தமது வேலைகளை எந்த தடையுமின்றி முடிக்கக்கூடியதாயிருக்கும். திருடர்களின் நடமாட்டம் மனபயத்தை ஏற்படுத்தும், கவனம் தேவை. வியாபாரம் சம்பந்தமான முயற்சிகளை பின்தள்ளி வைப்பது நல்லது. பெண்களுடன் மனஸ்தாபங்களுக்கு இடமுண்டு. இக்காலகட்டங்களில் இறை தியானங்கள் மனதுக்கு தெளிவையும் தைரியத்தையும் தரும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு இனிமையான தூக்கம் கிடைக்கும். அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். பிறருக்கு நன்மை பயக்கும் காரியங்களில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் வந்து சேரும். சேமிப்பை விட செலவுகள் சற்று அதிகரிக்கும். வியாபார முன்னேற்றத்திற்கு நல்ல நண்பர்களின் ஒத்துழைப்புக்கள் பக்கபலமாக இருக்கும். முயற்சி செய்த காரியத்தை முடிக்கக்கூடியதாயிருக்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்களின் போது உறவினர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். இக்காலகட்டங்களில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதால் நன்மைகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வைராக்கியம், திட சிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதனால் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். சுவையான உணவுகளை உண்ணலாம். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்யோன்யம் வலிமை பெறும். தீயவர்களுடன் கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். சில இடமாற்றங்களுக்கு வழியுண்டு. பெண்களின் உதவியுடன் அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். தேவையற்ற பிரச்சினைகளினால் மனதளர்வு ஏற்படும். இக்காலகட்டங்களில் மற்றவர்கள் மனதை புரிந்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தெய்வீக பலம் பெற்றவர்களே, நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்த மகர ராசி அன்பர்களே...!

இந்தவாரம் நீங்கள் தொடங்கிய காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தீய நண்பர்களின் பேச்சைக்கேட்டு தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். நவீன நுட்பங்களை திறமையாக கையாளுவதால் முன்னேற்றம். திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானம் தேவை. மேல் அதிகாரிகளுடன் சுமூகமான முறையில் செயல்படவும். பணப் பிரச்சினைகளுக்காக பிறரின் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்படும். சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படுதல். வெண்மையான ஆடைகளை அணியலாம். வெளிதேச பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம். இக்காலகட்டங்களில் வாழ்கையில் ஒவ்வொரு நாட்களையும் பொன்னானதாக கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே, புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம் - செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் பகைவர்களினால் மறைமுக போட்டிகள் ஏற்படும், தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேரும். பெண்களுடன் அனுசரித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் கிடைக்கும். ஒவ்வாத உணவினால் அஜீரண சம்பந்தமான நோய்கள் ஏற்படும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைத்திட்டங்கள் அதிக அலைச்சலை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். மனசங்கடங்கள் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். இக்காலகட்டங்களில் இறைவனை நம்பிக்கையோடு வழிபட்டு பிரார்த்தனை செய்;வதால் மனகுறைகள் நீங்கும். 

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம் விட்டுப் பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய ஆடை- அணிகலன்கள் பரிசாக கிடைக்கும். இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள். வியாபாரத்தில் பல புதிய சாதனங்களினால் ஆதாயம் அடையலாம். அரசாங்க உழியர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகை மகிழ்ச்சி தரும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க அதிக சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். பொழுதுபோக்குகளில் அதிக நாட்டம் காட்டுதல். அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பணவரவுகள் காலதாமதத்தை ஏற்படுத்தும். பெரியார்களின் அன்பும் ஆதரவும் நம்பிக்கை தரும். இக்காலகட்டங்களில் மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X