2024 மே 08, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (17.04.2011 - 23.04.2011)

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (17.04.2011 - 23.04.2011)
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அன்பு காட்டும் உள்ளமும் அணையாத தீபமாக பிறரை அரவணைக்கும் குணமும் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்ப உறவினர்களுடன் மகிழ்ச்சியாக சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். வியாபாரத்தில் சக ஊழியர்களின் அனுசரணையுடன் புதிய பணிகளை நடைமுறைபடுத்தலாம், இதனால் பணவரவுகள் அதிகரிக்க கூடும். பெண்களுடன் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மனகசப்பை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்களின் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம். வீடு அல்லது தொழில் மாற்றங்களுக்கு இடமுண்டு. மனதளவில் சிறு அலைச்சல்கள் ஏற்படக்கூடும். வார இறுதியில் பெரியார்களின் உதவிகள் மனதுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


சந்திராஷ்டமம்
ஏப்ரல் 19ஆம் திகதி காலை 02.15 மணியிலிருந்து ஏப்ரல் 21ஆம் திகதி காலை 05.06 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பெரியாரை அனுசரித்து நடக்கும் பக்குவம் கொண்ட, புரிந்துணர்வு அதிகமுள்ள இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அதிக செலவு செய்யநேரிடும், இதனால் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும். புதிய முயற்சிகளினால் முன்னேற்றம் அடையலாம். இசைதுறையில் அதிக நாட்டம் காட்டுதல். வாகன சாரதிகள் தூர பிரயாணங்களினால் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். அரசாங்க ஊழியர்களின் மூலம் நல்ல தொழில் வாய்ப்புக்கள் அமையக்கூடும். உற்சாகத்துடன் அன்றாட வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தேவையற்ற பிரச்சினைகள் தேடிவந்து தொல்லைகள் தரக்கூடும். பொறுமையுடன் செயல்படுவது நன்று. வார இறுதியில் வெண்மையான ஆடைகளை அணிந்து இறை பிரார்த்தனைகள், வழிபாடுகளில் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


சந்திராஷ்டமம்
ஏப்ரல் 21ஆம் திகதி காலை 05.06 மணியிலிருந்து ஏப்ரல் 24ஆம் திகதி காலை 11.50 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எல்லா உயிர்களையும் நேசித்து வாழும் மலர் போன்ற மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நீண்டநாள் தடைபட்டிருந்த வேலைகளை விரைவாக செய்து முடிக்கக் கூடியதாயிருக்கும். குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை மனதுக்கு உற்சாகத்தை தரும். விஷேடமாக பெண்களின் அக்கறை, அனுசரிப்பு அதிகரிக்க கூடும். உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும். மனசோர்வுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படக்கூடும், இதனால் நல்ல வாய்ப்புக்கள் பின்தள்ளப்படும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். இனிதே உறக்கம் இன்பமாய் கிடைக்கும். வார இறுதியில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் பொறுப்புடன் செய்வது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

தனக்கு பலம் என்ற கருத்துக்கு ஒரு விதிவிலக்காக விளங்கும் தன்னபிக்கை அதிகம் உள்ள கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அரசாங்க அதிகாரிகளின் மூலம் நிரந்தர தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். வியாபாரத்தில் பல அரிய சாதனங்களை பயன்படுத்தி அதிக லாபம் அடைவீர்கள். பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம். பெண்களுக்கு அழகிய ஆடை, உபகரணங்கள் சேர்க்கை ஏற்படும். அயல்தேசங்களிலிருந்து எதிர்பாராத செய்திகள் வந்து சேரும். பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் அது நமக்கே பகையை ஏற்படுத்தக்கூடும். நாவடக்கத்துடன் செயல்படவும். சிக்கனமற்ற செலவுகளினால் வரவுகள் குறையும், பணம் சேமிப்பத்தில் ஊக்கம் தேவை. வார இறுதியில் ஆன்மீக யாத்திரைகள் பிரார்த்தனைகளின் பலனாக சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பிறரிடம் மனம்விட்டு பேசிப்பழகும் குணமும் அதிகார தன்மையும், யாரிடமும் தாழ்ந்து செல்லாத துணிவும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். நீண்டநாள் எதிர்பார்த்த இன்பகரமான செய்திகள் வந்து சேரும். தீய நண்பர்களுடன் அதிக பேச்சுவார்த்தைகள் பகை உண்டாக்கும். குடும்பத்தில் உறவினர்களினால் அனுகூலம். புதுமையான பொருள் காணக்கிடைத்தல். அஜீரண கோளாறுகளினால் சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படுதல், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொலைதூர பயணங்கள் சற்று அலைச்சலை தரக்கூடும். பெண்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் மனசங்கடங்களுக்கு வழிவகுக்கும். வார இறுதியில் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களிலிருந்து விடுபட இறைநம்பிக்கை மிகவும் முக்கியமானதாகும்.

அதிர்ஷ்ட தேதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எந்த விடயத்தையும் அமைதியுடனும் பொறுப்புடனும் செய்து முடிக்கும் திறனும் எதிலும் காரணமின்றி பேசாத கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபார உத்தியோகத்தர் தமது தொழிலை முன்னெடுப்பதற்கு வெளிப் பிரயாணங்களை மேற்கொள்வார்கள். அழகிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். புதிய நண்பர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். மனபயங்கள் வந்து நீங்கும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளினால் வெற்றி அடைதல். தூய்மையான ஆடைகளை அணியலாம். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். விநோத விளையாட்டுக்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயல்படவும். இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள், வார இறுதியில் புண்ணிய காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவதால் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடிச்சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நினைத்த காரியத்தை சாதித்து வெற்றி காண்பீர்கள். வரவு குறைந்து செலவுகள் அதகரிக்கக்கூடும். ஒவ்வாத உணவினால் அஜீரண கோளாறுகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். குடும்பத்தில் சுபகாரியங்களின்போது உற்றார் உறவினர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். விஷேடமாக பெண்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். அரசாங்க தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல். புதிய முயற்சிகள் நஷ்டத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தக்கூடும். மனதில் சஞ்சலங்கள் குழப்பங்கள் வந்து நீங்கும். இக்காலகட்டங்களில் இறைவழிபாடுகள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே... எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு கூட்டுத்தொழிலை விரிவுபடுத்த நண்பர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்க கூடும். குடும்பத்தாருடன் ஆலய அனுஷ்டானங்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பல புண்ணிய காரியங்களின் பலனாக நன்மைகள் வந்து சேரும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். புதிய காரியங்களை வெற்றிகரமான செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். மேல் அதிகாரிகளின் உதவியுடன் நவீன திட்டங்களை செயல்படுத்தலாம். அனாவசிய ஆடம்பர செலவுகளினால் பணப்பிரச்சினைகள் ஏற்படும். இக்காலகட்டங்களில் நமது வாழ்க்கைக்கு முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதம் பெறவாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நண்பர்களிடம் மூலம் புதிய ஆடை அணிகலன்கள் பரிசாக கிடைக்கக் கூடும். வியாபாரத்தில் நவீன நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி அடைவீர்கள். நண்பர், உறவினர்களுடன் வெளிபிரயாணங்களை மேற்கொள்வதனால் அனுகூலம். தாமதமான காரியங்களை உடனுக்குடன் முடிக்கக்கூடியதாயிருக்கும். உயர் உத்தியோகத்தர்களுடன் சுமூகமான முறையில் செயல்படவும். பெண்களிடையே இருந்த மனகசப்புக்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். தூரதேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கக்கூடும். இசையில் அதிக நாட்டம் காட்டுவதால் மனஅமைதி கிடைக்கும். பகைவர்களினால் தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரக்கூடும். நாவடக்கம் அவசியம். இக்காலகட்டங்களில் பெரியார்களின் வார்த்தைகளைக் கேட்டு செயல்படுவது நன்று.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சில உடல் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும். வியாபாரம் தொடர்பான திட்டங்களுக்கு தூர பயணங்கள் செல்லநேரிடும். புதிய காரியங்களில் சிறு தடைகள் அலைச்சல்களை ஏற்படுத்தக்கூடும். நீண்டநாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்புக்கிட்டும். திருடர்களினால் மனபயங்கள் தோன்றும். வரவுகள் குறைந்து செலவுகள் அதிகரிக்கக்கூடும். பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை. வீடு அல்லது காணி சம்பந்தமான இடமாற்றங்களுக்கு வழியுண்டு. குடும்பத்தில் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். இக்காலகட்டங்களில் புதிய நண்பர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரமின்றி வாழ விரும்பும் வக்குவான்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் புதிய வேலைகளை முன்னெடுப்பதை தவிர்க்கவும். தொலைதூர செய்திகள் மன அமைதியை தரக்கூடும். சுவையான உணவுகளை உண்ணலாம். அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைக்கும். வெண்மையான ஆடைகளை அணிந்து புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிரார்த்தனைகள் வழிபாடுகளில் ஈடுபடலாம். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும், நலனை பாதுகாக்கவும். நண்பர்களுடன் இணைந்து பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். இக்காலகட்டங்களில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் இன்பகரமான செய்திகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

வாழ்க்கையில் பல கஷ்டங்களை உறுதியாக நீந்தி கடந்து செல்லும்- உப்பை போன்று உறையாத உள்ளம் பெற்ற மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பான தூரபயணங்களை மேற்கொள்வீர்கள். சிக்கனமற்ற செலவுகளினால் பணப்பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை மகிழ்ச்சியை தரும். சிலருக்கு அரசாங்க ஊழியர்களின் நட்புறவுகள் நன்மை ஏற்படுத்தக்கூடும். நண்பர்களுடன் இணைந்த நவீன தொழில் நுட்பங்களை கையாண்டு ஆதாயம் அடையலாம். பெரியார்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளலாம். பெண்களுடன் மனஸ்தாபங்கள் தோன்றி மறையும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். இக்காலகட்டங்களில் தெய்வீக சிந்தனைகள் தியானங்கள் வாழ்க்கையில் நல்வழிநடத்தலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்


சந்திராஷ்டமம்
ஏப்ரல் 17ஆம் திகதி காலை 02.09 மணியிலிருந்து ஏப்ரல் 19ஆம் திகதி காலை 02.15 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X