2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (21.08.2011 - 27.08.2011)

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (21.08.2011 - 27.08.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சொல் செயல்களில் தெளிவும், சஞ்சல மனமும் பிறகு தெளிவு உடையவர்களான மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் உற்சாகத்துடன் நல்ல காரியங்களை நடைமுறைப்படுத்தலாம். வியாபார ஊழியர்கள் தமது வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். இதனால் பணவரவு அதிகரிக்கக்கூடும். நண்பர்களுடன் சுற்றுலாப் பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். ஒவ்வாத உணவினால் உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் பெண்கள் விட்டுகொடுத்து செயற்படுவார்கள். பொருள் செலவுகள் சற்று அதிகரிக்கக் கூடும். வார இறுதியில் பிராத்தனைகள் வழிபாடுகளில் ஈடுபடுவதால் மனதில் குழப்பங்கள் நீங்கும்.
 

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம் : பிரம்மா




கிருத்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1௨ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனைகளைப் பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே...!
 
இந்த வாரம் தொடக்கத்தில் வாகன சாரதிகளுக்கு தூரப்பிரயாணங்கள் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றுகொள்ளலாம். ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் புதிய திட்டங்களை நடைமுறைபடுத்துவீர்கள். பெண்களுக்கு அழகிய ஆடை அணிகலன்கள் பரிசாக கிடைக்கக் கூடும். இசையில் நாட்டம் அதிகரிக்கும். இதனால் மன அமைதி கிடைக்கும். தூய்மையான ஆடைகளை அணியலாம். சில இடமாற்றங்கள் இலாபகரமாக அமையும். எதிர்ப்பார்த்த பணவரவுகள் கிடைக்கும். திருடர்களின் நடமாட்டம் பயத்தை ஏற்படுத்தும் கவனம் தேவை. வார இறுதியில் நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மிருகசீரிடம் 2,3, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தீவிரமோ, தோய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!
                  
இந்த வாரம் தொடக்கத்தில் நீங்கள் முயற்சி செய்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். சில மனக் கஷ்டங்கள், கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் பெண்களினால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறகூடும். மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செயற்படுவது நன்மைக்கே. கேட்பார் பேச்சுக்களை கேட்டு நடப்பதை தவிர்த்துகொள்ளவும். பணப் பிரச்சனைகளுக்காக பிறரின் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்படும். பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை. வியாபாரம் தொடர்பான திட்டங்களை சக ஊழியர்களுடன் ஒன்றிணைந்து  நடைமுறைபடுத்துவீர்கள். வார இறுதியில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் மன நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பும் கொண்ட கடக ராசி  அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் அரச ஊழியர்களின் உதவியுடன் புதிய வேலை வாய்ப்புக்களை பெற்றுகொள்ளலாம். இனிதே உறக்கம் இன்பமாய் கிடைக்கும். விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல். உங்கள் நெருங்கிய நண்பர்கள் மூலம் முக்கிய செய்திகளை கேள்விப்படுவீர்கள். நவீன முயற்சிகளில் ஈடுபடும் போது மனதால் சிறு அலைச்சல்கள் தோன்றும். அறுசுவையான உணவுகள் உண்ணலாம். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை உற்சாகம் தரும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக் கூடும். பெண்களுடன் அதிக பேச்சுக்கள் மன சங்டங்களுக்கு வழிவகுக்கும். வார இறுதியில் தேவையற்ற பிரச்சினைகளைக் கண்டு மனம் தளராது நம்பிக்கையோடு செயற்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாக்கு சாதுர்யம் மனோபலம் உள்ளவர்கள். சற்று அகம்பாவம் உள்ளவர்கள். அதிகாரத் தன்மை உடைய சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்திகளை கேள்விப்படுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சியைத் தரும். மேலும் பெண்கள் தமது பணிகளை அக்கரையுடன் செய்வார்கள். தூரப் பிரயாணங்கள் செல்வதனால் சில புதுவிதமான அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம். வீடு அல்லது தொழில் சம்பந்தமான இடமாற்றங்களுக்கு வழியுண்டு. பிறரின் பிரச்சினைகளை பேசுவதையும் முன்னிற்பதையும் தவிர்க்கவும். நமது வாழ்வில் முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களைக் கண்டு ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும்.  இதனால் மன அமைதி ஏற்படும். வார இறுதியில் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.          

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் உங்கள் திறமையான சாதனைகளின் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். சிலர் ஆன்மீக யாத்திரைகளை மேற்கொள்வார்கள். உடலுக்கு ஒவ்வாத உணவினால் அஜீர்ணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அதிக அக்கரை செலுத்தவும். வியாபார விருத்திக்காக அதிக அலைச்சல்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். காணாமல் போன பொருள் மீண்டும்  கிடைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் சகோத சகோதரிகளின் அந்நியோன்யம் பலப்படும். வார இறுதியில் நமது பொருப்புகளை தவறவிடாது கடமை உணர்வுடன் செயல்படுவதால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்ட திகதி: 22
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
 
எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துல்லியமாக எடைபோடக்கூடியவர்கள், ஆடம்பரமான வாழ்கை உள்ள துலா ராசி அன்பர்களே..!
                                 
இந்த வாரம் தொடக்கத்தில் புதிய காரியங்களை முன்னெடுக்க கூடியதாயிருக்கும். எதிர்பாராத தனலாபம் ஏற்பட கூடும். நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் நவீன சாதனங்களை கொண்டு ஆதாயம் அடையலாம். பகைவர்களுடன் வேண்டாத பேச்சுவார்த்தைகள் மனசஞ்சலத்தை ஏற்படுத்தும். வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். நல்ல நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும். சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும். பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்யநேரிடும். வார இறுதியில் அன்றாட பணிகளை உடனுக்குடன் முடிக்கலாம்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)

 

சந்திராஷ்டமம்

ஆகஸ்ட் 21ஆம் திகதி மாலை 06.16 மணியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி காலை 04.36 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்

 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!          
                        
இந்த வாரம் தொடக்கத்தில் இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும். வேண்டாத செலவுகளினால் பணப் பிரச்சினைகள் ஏற்படும். குலதெய்வ வழிபாடுகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவதால் நற்பலன்களை பெறுவீர்கள். அரசாங்க உதவியுடன் புதிய திட்டங்களை முன்னெடுக்கலாம். குடும்பத்தில் பெண்களின் உதவிகள் கிடைக்கும். தீய நண்பர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதால் அனாவசியப் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். வெண்மையான ஆடைகளை அணியலாம். மேல் அதிகாரிகளினால் சில இடையூறுகள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். பொறுமையுடன் செயற்படவும். வார இறுதியில் சகிப்புத் தன்மையும் சாந்தமும் கொண்ட உள்ளத்தோடு வாழ்வதால் தீமைகள் விலகிச் செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)

 

சந்திராஷ்டமம்

ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி காலை 4.36 மணியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி காலை 11.04 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின்  பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வைராக்கியம், திடசிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் உடைய  தனுசு ராசி அன்பர்களே...!  
                
 இந்த வாரம் தொடக்கத்தில் வெளிப் பிரயாணங்கள் மூலம் இலாபம் கிடைக்க வாய்ப்புண்டு. இசைத் துறையில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். வினோதங்கள் விபரீதத்தை ஏற்படுத்தாத வண்ணம் செயற்படவும். பெண்களுடன் கடினமான வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. நாவை கட்டுபாட்டில் வைக்கவும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகையால் குதூகலம் ஏற்படும். தொழில் தொடர்பான முயற்சிகளுக்கு பிறரின் உதவிகள் கிடைக்கக்கூடும். உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான உணவுகளை உண்ணலாம். இன்பகரமான செய்திகள் வந்து சேரும். வார இறுதியில் நமது வாழ்கையில் வழித் துணையான இறைவனை நம்பிக்கையோடு பிராத்தனை செய்வதால் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

 

சந்திராஷ்டமம்

ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி காலை 11.04 மணியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி  மாலை 01.45 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்ளை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின்  பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்



உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தெய்வீக பலன் பெற்றவர்களே, நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்த மகர ராசி அன்பர்களே..!  
 
இந்த வாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். இதனால் பணவரவு அதிகரிக்கக் கூடும். முக்கிய தகவல்கள் உரிய நேரத்தில் வந்து சேரும். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தை சீராக பாதுகாப்பதன் மூலம் உஷ்ணம் சம்பந்தமான உபாதைகளை தவிர்த்துக்கொள்ளலாம். செலவுகள் சற்று அதிகரிக்கும். கடின உழைப்புடன் செயற்படுவது அவசியம். புதிய காரியங்களில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும். வார இறுதியில் குடும்பத்தில் பெரியார்கள் வழங்கும் அறிவுரைகளை கேட்டு நடப்பதால் அனாவசிய பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே, புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம் செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே..!   

இந்த வாரம் தொடக்கத்தில் நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் புதிய வேலைவாய்ப்புக்களை பெற்கொள்ளலாம். நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பொருள் சேர்க்கை ஏற்படக்கூடும். வியாபார வளர்ச்சிக்காக நவீன தொடர்புகள் தேடிவரும். மனப் பயங்கள் ஏற்பட்டு நீங்கும். பகைவர்களினால் சில விதமான சிக்கல்கள் தோன்றும். குடும்பத்தாருடன் சுற்றுலா பிரயாணங்கள் செல்வதனால் உற்சாகம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறமையான சாதனைகளை செயற்படுத்தி மேன்மை அடைவார்கள். எச்சந்தர்ப்பத்திலும் பிறரின் உதவியை நாடுவதை தவிர்க்கவும். வார இறுதியில் கடினமான திட்டங்களை எளிதாக செய்து முடிக்கலாம்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள். யாரிடமும் மனம் விட்டுப் பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் தொடக்கத்தில் திட்டமிட்டு புதிய பணிகளை செயற்படுத்துவதால் நற்பலனை அடையலாம். பிறரின் நலன் கருதி தேவையற்ற பிரச்சினைகளை முன்னின்று வாதிடுவதை தவிர்க்கவும். பணவரவுகள் சற்று காலதாமத்தை ஏற்படுத்தும். அரசாங்க வேலைவாய்ப்புக்கு வழியுண்டு. மனதளவில் சில அலைச்சல்கள் ஏற்படக்கூடும். வெளித்தேசங்களிருந்து செய்திகள் வந்து சேரும். ஆலய அனுஷ்டானங்களில் நாட்டம் அதிகரிக்கும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். நண்பர்கள் இன்ப துன்பங்களின் போது ஒன்றுமையுடன் செயற்படுவார்கள். வார இறுதியில் ஆன்மீக தியானங்களினால் மனதில் பயங்கள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.                     

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X