2025 ஜூலை 02, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (21.11.2010 – 27.11.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (21.11.2010 – 27.11.2010)  

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

மனதில் பட்டதை விரைவில் செய்திடும் மேன்மையான குணம்கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு நினைத்த காரியத்தை சாதித்து வெற்றி அடையலாம். மனதளவில் சில அலைச்சல்கள் ஏற்படக்கூடும். இசைதுறையில் நாட்டம் அதிகரிக்கும்;. குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். மேலும், பெண்களின் உபசரிப்புக்கள் அதிகரிக்க கூடும். இடம் அல்லது தொழில் மாற்றத்திற்கு இடமுண்டு. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நல்லவர்களின் அறிமுகங்கள் புதிய முயற்சிகளுக்கு வழிவகுக்கும். சுற்றுலா பயணங்கள் செல்லுவதால் மன அமைதியும் உற்சாகமும் கிடைக்கும். விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது அதிக அவதானம் தேவை. தூய ஆடைகளை அணிவீர்கள். நமது வாழ்க்கைக்கு முன் உதாரணமாக இருக்கக்கூடிய பெரியார்களை கண்டு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட தி;கதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கருத்திற்கோர் விடிவெள்ளியாய் விளங்கும் இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு தூரதேசத்திலிருந்து நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்திகளை கேள்விபடுவீர்கள். விசித்திரமான, ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். வியாபாரத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் பகை ஏற்பட வாய்ப்புண்டு, நிதானத்துடன் நடக்கவும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகையினால் சுபசெலவுகள் ஏற்படும். மனதில் உற்சாகத்துடன் நன்மையான செயல்களை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும். பெண்களுடன் அனாவசிய வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். நண்பர்களின் ஒத்துழைப்போடு புதிய முயற்சிகளில் ஈடுபடுவதனால் நல்ல லாபத்தை பெற்றுகொள்ளலாம். இறைவழிபாடுகளில் அதிக பற்று செலுத்துவதால் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியோடு வாழலம்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

எடுத்த முடிவுகள் இறுதி முடிவாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மென்மையான மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு உற்சாகத்துடன் நல்ல காரியங்களை தொடங்கலாம். மனதில் சோர்வுகள் நீங்கி நிம்மதியான உறக்கம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகளினால் முன்னேற்றம் ஏற்படக்கூடும். இதனால் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புதிய நட்புக்கள் நம்பிக்கையை தரக்கூடும். குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். நவீன திட்டங்களை நடைமுறைபடுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பிரயாணங்களை மேற்கொள்ளுவதால் அனுகூலம். தொலைந்த பொருள் கிடைக்கக்கூடும். பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும், நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். இசையில் அதிக நேரத்தை செலவிடுதல். அழகிய ஆடை, உபகரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கக்கூடும். தியானங்கள், வழிபாடுகள் உங்களுக்கு மனஅமைதியை தரும்.  

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: பிரம்மா
வழிபாடு: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

எதிராளியை கூட எளிதில் மாற்றிடும் கலையான தோற்றம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு சில பிரச்சினைகள், சிக்கல் ஏற்பட்டு நீங்கும், நிதானத்துடன் செயல்படவும். ஒவ்வாத உணவினால் அஜீரண கோளாறுகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். வாகன சாரதிகளுக்கு தூர பிரயாணத்தால் லாபம் ஏற்படும். குடும்பத்தில் சகோதரர்கள் விட்டுகொடுத்து செயல்படுவார்கள், விசேடமாக பெண்களின் மதிப்பும் மாரியதையும் அதிகரிக்க கூடும். பிறரின் பேச்சுகளினால் மனஸ்தாபங்கள் உருவாகும். அரசாங்க ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடும். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். தொழிலை விரிவுபடுத்த உயர் அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் நடந்து கொள்ளவும். அயல்தேசங்களிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்ககூடும். சொல்லிலும் செயலிலும் பொறுமையுடன் நடந்தால் மேன்மை பெறலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


 

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சுயநல போர்வையில் பொதுநல புலிகளாகவும் தளராத நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு இசையில் ஈடுபாடு அதிகரிக்கும், அதனால் மனஅமைதி ஏற்படக்கூடும். குடும்ப உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியமான ஆகாரங்கள் கிடைப்பதுடன் அவை உடலையும் மனதையும் பாதுகாக்கும்;. தொழில் ஸ்தானத்தில் நவீன உபகரணங்களை கொண்டு ஆதாயம் அடையலாம். தூர பிரயாணங்கள் செல்லுவதனால் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்ககூடும். பணவரவுகளில் சற்று தாமதம் ஏற்படும். அன்றாட வேலைதிட்டங்களை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். விநோத விளையாட்டுகளுக்கு அதிக செலவுகளை தவிர்க்கவும். பகைவர்களினால் ஏற்படும் சிக்கல்களின்போது பிறரின் உதவிகள் பக்கபலமாக இருக்கும். நல்ல செயல்களை இறைவன் துணையுடன் செய்யலாம்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நீலம்
வழிபாடு: நவகிரகம்


 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எந்த விடயத்தையும் ஆராய்ந்து செய்தால் அதில் வெற்றி நிச்சயம் எனும் கொள்கை கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு திறமையான திட்டங்களை முன்னெடுப்பதற்கு நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்ப உறவினர்களுடன் சென்று தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதனால் நன்மை ஏற்படும். பெண்களின் அன்பும் அனுசரிப்பும் மகிழ்ச்சியை ஏற்படுத்தகூடும். பகைவர்களுடன் கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, நாவடக்கம் அவசியம். புதுமையான பொருட்களை காணக்கிடைத்தல். கேட்போர் பேச்சைகேட்டு நடப்பதால் அது நமக்கே பகை ஏற்படுத்தும், நிதனத்துடன் செயல்படுவது நல்லது. ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். தேக ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். வரவுக்கு மீறிய செலவுகளினால் சேமிப்புக்கள் குறையும், பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டவும். பெரியோர்களின் ஆலோசனை வாழ்க்கைக்கு நல்ல வழிநடத்தலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்


 

சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

நல்ல நம்பிக்கையை யானையின் தும்பிக்கைபோன்று பலமானது என்று கருதும் நல்லவர்களை நேசிக்கும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு மனதில் புத்துணர்ச்சியுடன் விநோத விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சங்கடங்கள் நீங்கி சுபவிசேஷங்கள் நடைபெறக்கூடும். பெண்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மதிப்பை பெறலாம். புதிய ஆடை, உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நவீன தொழில்நுட்;பங்களை கையாளுவதனால் அதிக லாபத்தை பெற்கொள்ளலாம். வெளிபிரயாணங்கள் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைக்கக்கூடும். இசையில் அதிக ஆர்வத்தை செலுத்துவீர்கள், இதனால் மனதில் சோர்வுகள் நீங்கும். சில சரும நோய்களினால் ஆரோக்கிய பாதிப்படையும், ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். தெளிவான சிந்தனையுடன் ஒவ்வொரு செயல்களை முன்னெடுப்பதால் வெற்றியை பெறலாம்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்:
நவம்பர் 21ஆம் திகதி மாலை 12.53 மணியிலிருந்து நவம்பர் 23ஆம் திகதி மாலை 07.46 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல்பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தாருடன் உல்லாச பிரயாணங்கள் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கக்கூடும். பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், இல்லாவிட்டால் மனசங்கடங்களை எதிர்நோக்க நேரிடும். விநோத விளையாட்டுகளுக்கு அதிக பொருள் செலவுகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் உயரதிகாரிகளுடன் சுமுகமான உறவை வைத்து கொள்வது நன்மைக்கே, கடின உழைப்பினால் முன்னேற்றம் அடையலாம். எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். சில உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவும். தெய்வீக வழிபாடுகள் யாத்திரைகளில் ஈடுபடுவதால் வாழ்க்கைக்கு புதிய வழியும் மனநிறைவும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்:
நவம்பர் 23ஆம் திகதி மாலை 07.46 மணியிலிருந்து நவம்பர் 25ஆம் திகதி காலை 12.52 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அமைதியும் சாந்தமும் குடிகொண்ட முகத்தோடு இனிமையாக பேசி மற்றவர்களை உள்ளம் நெகிழ வைக்கும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு அறுசுவையான உணவுகள் கிடைக்கும். சில அரச ஊழியர்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் தேடிவர வாய்ப்புண்டு. நிம்மதியான நித்திரை உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை தரும். அறிமுகமற்ற நண்பர்களின் பேச்சை கேட்டு தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் இடமாற்றம் அல்லது பணிமாற்றம் ஏற்படக்கூடும், குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகை மகிழ்ச்சியை தரும், மேலும் அழகிய ஆடை, உபகரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கக்கூடும். பகைவர்களினால் எதிர்பாராத கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு, வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும், இறைவனை பக்தியோடு தரிசிப்பதால் சிக்கல்கள் யாவும் சீர்த்திருத்தம் பெறுவதுடன் சாதுக்களை தரிசிக்க வாய்ப்புகிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
நவம்பர் 25ஆம் திகதி காலை 12.52 மணியிலிருந்து நவம்பர் 27ஆம் திகதி காலை 04.38 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடின உழைப்பால் மட்டுமே முன்னேறலாம் என்பதை முழு மூச்சாக கொண்டு சிகரம் தொடுகிற மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு பெண்களுடன் அனாவசிய வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். பணவரவுகள் சற்று காலதாமதத்தை ஏற்படுத்தும். பணம் சம்பாதிப்பதற்காக அதிக அலைச்சல்களை எதிர்நோக்கநேரிடும். தொழிலில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும், சுமுகமான முறையில் நடந்து கொள்ளவும். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், இதனால் மருந்து செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகையினால் குதூகலம் ஏற்படும். தூய ஆடைகளை அணிவீர்கள். சில திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானம் தேவை. மனதில் கவலைகள் மறைந்து நன்மையான காரியங்களை செய்வதால் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
நவம்பர் 27ஆம் திகதி காலை 04.38 மணியிலிருந்து நவம்பர் 30ஆம் திகதி காலை 07.28 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மாறுபட்ட குணங்களை கொண்டவர்களிடமும் யதார்த்தமாக பேசி பிறர் மனதை அடக்கி ஆளும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு புதிய திட்டங்களை விடாமுயற்சியுடன் முன்னெடுப்பீர்கள், இதனால் அதிக பணவரவு ஏற்படும். நண்பர்களுடன் விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது அவதானம் தேவை. குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடைபெறும், அதன் மூலம் உறவினர்களின் அன்யோன்யம் ஏற்படக்கூடும். அன்றாட வேலைகளை உற்சாகத்துடன் தொடங்கலாம். பெண்களின் அன்பும் அக்கறையும் மகிழ்ச்சியை தரும். தொலைந்த பொருள் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் விரித்திக்கு அரசாங்க உதவிகள் கிடைக்ககூடும். நீண்டநாள் எதிர்பார்த்த இன்பகரமான செய்திகள் வந்து சேரும். இசைத்துறையில் அதிக நாட்டம் கொள்ளுதல். பகைவர்களின் சிக்கல்களிருந்து விலகி நிற்பது நல்லது. பெரியார்களின் ஆலோசனைகள் வாழ்வில் நற்பண்புகளை வளர்க்க உதவும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9- பாதங்கள்.

உறுமீனைப்போல் காத்திருக்கும் உறுதியுள்ளமும் தோல்விகளை கண்டு எதிர்நீச்சல்போடும் மீனராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வேலைதிட்டங்களினால் நல்ல திருப்புமுனை ஏற்படக்கூடும். உறவினர்களுடன் வெளிபிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம். பெண்களின் அக்கறை மகிழ்ச்சி தரக்கூடும். பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை தவிர்க்கவும். அறுசுவையான உணவுகள் கிடைக்கும். விசித்திரமான, ஆச்சரியமான பொருள் காணுதல். புண்ணிய தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். பகைவர்களுடன் கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, நாவடக்கத்துடன் செயல்படவும். மனதில் பயம் உணர்வுகள் தோன்றி மறையும். இறைவழிபாடுகளில் அதிக அக்கறை செலுத்துவதால் மனதில் உறுதியான நம்பிக்கை ஏற்படும்

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: சிவன் (சந்திரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .