2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (26.02.2012 - 03.03.2012)

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 25 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (26.02.2012 - 03.03.2012)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன் ஒளிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு இல்லம் தேடி இன்பமான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இதனால் மகிழ்ச்சி உண்டாகும். மேலும் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பிறக்கும். தொழிலில் புதிய உக்திகளை செலுத்தி லாபங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வெளியூர் செல்லும் சூழ்நிலைகள் உருவாகலாம். வார இறுதியில் உடலில் சிலவிதமான உபாதைகள் தோன்றி மறையும். மனதில் குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும். சாப்பாட்டில் வெறுப்புகள் தோன்றும், வீண் மருத்துவ செலவுகள் காணப்படும். பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உறவினர்களிடையே அன்யோன்யம் கூடும், உறவுகள் பலப்படும். மகிழ்ச்சி உண்டாகும். இனிமையான உறக்கம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொட்டது துலங்கும் வாரமிது. செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தழுவும். புதவி உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். வார்த்தைகளில் நிதானம் தேவை. இல்லையெனில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் சில நல்ல காரியங்கள் செய்து மனதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். உடலளவில் சிறு அலைச்சல்கள் காணப்படும்.

அதிர்ஷ்ட திகதி: 27 
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் உங்களுக்கு அரசினரால் தனலாபங்கள் உண்டாகும். இல்லத்தில் சகோதர சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். பல புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதிற்கு பிடித்தமான விடயங்களில் ஆர்வம் உண்டாகும், பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும் நிலை உருவாகும், செலவுகள் அதிகமாகும். வார இறுதியில் உணவில் வெறுப்பு காணப்படும். வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும். கவனம் அவசியம். வியாபாரத்தில் அதிக அளவில் போட்டிகள் காணப்படும். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். தொழிலில் நஷ்டங்கள் உண்டாகலாம். கவனத்துடன் இருப்பது அவசியமாகும். இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்பமான சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்புதல்கள் கையெழுத்தாகும். அதிக அளவில் லாபம் காணப்படும். தொழில் ரீதியாக சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். பணத்திற்கு சில தட்டுப்பாடுகள் காணப்படும். கவனத்துடன் இருந்தால் சமாளித்து விடலாம். குடும்பத்துடன் வெளியில் சென்று மகிழ்வீர்கள். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளுடன் ஆரோக்கியமான போட்டிகள் உண்டாகும். வெற்றியை எதிர்பார்க்கலாம். இல்லத்தில் மகிழ்ச்சியான காரியங்கள் நடைபெறும். ஆனாலும் வார இறுதியில் பெண்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். இல்லையெனில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மனம் சஞ்சலம் அடையும். வேண்டாத செலவுகள், அலைச்சல்கள் உண்டாகும். தீய நட்பினால் தொழிலில் நஷ்டம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் காரியங்களில் மனதை செலுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். தொழில் புதிய வழிமுறைகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்து இருந்த மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய ஆடைகளை அணிவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தீயவர்களின் நட்பினை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அவதிப்பட வேண்டிவரும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று மனதை அமைதிப்படுத்துவீர்கள். அலைச்சல்களினால் உடலில் சிறிது சோர்வு காணப்படும். பொதுவாகவே இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே அமையும்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சந்திராஷ்டமம்
பெப்ரவரி 26ஆம் திகதி காலை 07.41 மணியிலிருந்து பெப்ரவரி 28ஆம் திகதி மாலை 08.34 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடிச் சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கம் உங்களுக்கு சில இன்னல்களையே தரும். அனாவசிய பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகலாம். பெண்களுடன் விவாதங்களைத் தவிர்க்கவும். தீயவர்களுடைய நட்புகளை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் சிலவிதமான நஷ்டங்களை சந்திக்க நேரிடும். உடலில் தலைவலி மற்றும் காய்ச்சல் ஆகியவை உண்டாகும். மனதளவில் பயம் தோன்றி மறையும். சில தவிர்க்க முடியாத செலவுகள் காணப்படும். மனம் சஞ்சலம் அடையும். வார தொடக்கம் உங்களுக்கு கெடுதலான பலன்களை கொடுத்தாலும் வார இறுதியில் உங்களுக்கு நற்பலன்கள் காணப்படுகின்றன. தொழில் நிமிர்த்தமாக பிரயாணம் சென்று லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். பொன், பொருள் ஆகியவை சேர்க்கை நடைபெறும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சந்திராஷ்டமம்
பெப்ரவரி 28ஆம் திகதி மாலை 08.34 மணியிலிருந்து மார்ச் 02ஆம் திகதி காலை 08.45 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நண்பர்களின் சேர்க்கையினால் வெளியில் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். எனவே மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இல்லத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். தொழிலில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள் நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள்  உண்டாகும். பொன், பொருள் ஆகியவை சேர்க்கை உண்டாகும். பிரயாணங்களில் கவனம் தேவை. வேண்டாத பேச்சுகளால் வியாபாரத்தில் நஷ்டம் மற்றும் மனக்கஷ்டங்களை அடைய நேரிடும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள், எனவே இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே அமையும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


சந்திராஷ்டமம்

மார்ச் 02ஆம் திகதி மாலை 08.45 மணியிலிருந்து மார்ச் 04ஆம் திகதி மாலை 05.44 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் நல்ல நண்பர்களின் உறவுகள் கிடைக்கும், மனதில் மகிழ்ச்சி உருவாகும். வெளியிடங்களுக்கு சென்று உணவு உண்ணும் நிலை உருவாகும். மனதளவில் மகிழ்ச்சிகள் இருந்தாலும் உடலளவில் அலைச்சல்கள் ஏற்படும். புண்ணிய செய்திகள் வந்து சேரும்.  இதனால் மனம் அமைதியடையும். வயது மூத்தவர்கள் மற்றும் ஆலய தரிசனங்கள்  கிடைக்கப்பெறுவீர்கள். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் தனலாபம் கிட்டும். காரியத்தில் வெற்றிகள் தேடி வரும். பண விடயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.  மனதளவில் பயம் தோன்றும், வார இறுதியில் வீண் அலைச்சல் உண்டாகும். மருத்துவ செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திகதி: 27 
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். பிறரிடம் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலைகள் உருவாகலாம். இல்லத்தில் உடன் பிறந்தவர்களின் வருகையினால் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் தனலாபங்கள் கிடைக்கும். நல்ல உறக்கம் கிடைக்கும். சில தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும். நல்ல நண்பர்களின் சேர்க்கைகளினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். அலைச்சல்கள் உண்டாகும். வார இறுதியில் மனம் சஞ்சலமடையும். வேண்டாத வீண் பேச்சுக்களால் பிரச்சினைகள் உருவாகும். நிதானம் அவசியம். எல்லா விடயங்களிலும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 27 
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கம் உங்களுக்கு பல சிக்கல்களைத் தரும். அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீணாக பிரச்சினை ஏற்படும். எனவே நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். வேண்டாத உணவுகளினால் வயிற்றில் பிரச்சினைகள் உண்டாகும். வீட்டில் களவுபோகும் சூழ்நிலைகள் உண்டாகலாம், எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். வார தொடக்கம் உங்களுக்கு சுமாராக இருந்தாலும் வார இறுதியில் சில மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வழிகள் பிறக்கும். இதனால் லாபமும் மகிழ்ச்சியும் கிட்டும். இடமாற்றம் மனதில் மாறுதல்களை உண்டாக்கும். விருந்து உண்ணும் வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் சில நல்ல மனிதர்களின் சந்திப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களின் வருகை ஏற்படும், இல்லத்தில் மகிழ்ச்சி, நல்ல உறக்கம் கிடைக்கும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள் இதனால் மனது மகிழ்ச்சியடையும். முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும். அதிக பண லாபம் உண்டாகும். இடம் மாற்றம் நிகழும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும் பொழுது கவனம் தேவை. வார இறுதியில் உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி ஆகியவை உண்டாகும். வீணான மனக்கசப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும். திருட்டு போவது இதனால் பயம் வீண் அலைச்சல் ஆகியவைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .