2024 மே 07, செவ்வாய்க்கிழமை

இந்தவார பலன்கள் (28.11.2010 – 04.12.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (28.11.2010 – 04.12.2010)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

மனதில் பட்டதை விரைவில் செய்திடும் மேன்மையான குணம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் வாகன சாரதிகளுக்கு தூரபிரயாணங்களினால் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறும். குடும்பத்தில்  பெண்களினால் சுபவிசேடங்கள் நடைபெறகூடும், மேலும் உற்றார் - உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வெளிதேசங்களிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் மந்தநிலை மாறி புதிய வேலைதிட்டங்கள் தேடிவர வாய்ப்புண்டு. அரசாங்க ஊழியர்களின் உதவிகளினால் நன்மையடைவீர்கள். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அவதானம் தேவை. வார இறுதியில் வாழ்க்கை தரத்திற்கு ஏற்ப செலவுகளை குறைத்து, சேமிப்பை அதிகரிப்பது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்


 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கருத்திற்கோர் விடிவெள்ளியாய் விளங்கும் இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை மனதில் உள்ள சோர்வுகள் நீக்கி உற்சாகத்தை தரும். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், இறைவழிபாடுகளுக்காக யாத்திரைகள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தூய்;மையான ஆடைகளை அணிவீர்கள்,  பணவரவுகள் காலதாமதத்தை ஏற்படுத்தும், உயரதிகாரிகளினால் சில சலுகைகள் கிடைக்கக்கூடும். நவீன முயற்சிகளை செயல்படுத்த அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பகைவர்களின் அதிர்ப்தியான செயல்கள் தோல்வியை ஏற்படுத்தும், நிதானத்துடன் செயல்படவும். வார இறுதியில் தோல்விகளை கண்டு பின்செல்லாமல் இறை நம்பிக்கையோடு முயற்சிக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)


 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

எடுத்த முடிவுகள் இறுதி முடிவாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மென்மையான மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வெளிபிரயாணங்கள் செல்வதனால் நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும், புதிய வியாபாரங்களில் சில இடமாற்றங்கள் ஏற்படவாய்ப்புண்டு. உழைப்புக்கேற்ற ஊதியங்களை உடனுக்குடன் பெறுவீர்கள். இசையில் அதிக நேரத்தை செலவிடுவதனால் மனதில் உற்சாகம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் ஆதாரவும் அதிகரிக்கக்கூடும். சுற்றத்தில் நண்பர்களின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். அரசாங்க ஊழியர்களின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரகூடும். ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகள் ஏற்படும். வார இறுதியில் உடலையும் உள்ளத்தையும் பரிபூரணமாக கவனம் செலுத்துவதால் வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)


 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

எதிராளியைகூட எளிதில் மாற்றிடும் கலையான தோற்றம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நல்ல நண்பர்களின் ஒத்துழைப்புக்கள் புதிய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருக்கும். எதிர்பாராத பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், அவதானத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் சக ஊழியர்களையும் அனுசரித்து செல்வதனால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம். குடும்ப உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள். பெண்களுடன் சில கருத்து வேற்றுமைகள் ஏற்படக்கூடும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். உல்லாச பிரயாணங்களின்போது பிறரின் உதவிகள் கிடைக்கக்கூடும். வார இறுதியில் பெரியார்களின் வழிநடத்தல்கள் எதிர்காலத்துக்கு துணையாக இருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)

 


மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சுயநல போர்வையில் பொதுநல புலிகளாகவும் தளராத நெஞ்சமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பொழுதுபோக்குகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், இதனால் அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களினால் சங்கடங்கள் ஏற்படும், சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் உயர் உத்தியோகத்தரால் போட்டிகள் ஏற்படக்கூடும். பணவரவுகளில் சற்று தாமத்தை ஏற்படுத்தும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் செலுத்தவும். பகைவர்களுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, நாவடக்கத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும், புண்ணிய தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும். வார இறுதியில் இறைவன் அருளால் மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா


 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எந்த விடயத்தையும் ஆராய்ந்து செய்தால் அதில் வெற்றி நிச்சயம் எனும் கொள்கை கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அழகான ஆடை - ஆபரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களின் பின் நல்ல செய்திகளை கேள்விப்படுவீர்கள். குடும்பத்தில் சகோதரிகளின் அன்பும் ஆதரவும் அதிகரிப்பதுடன் சில சுற்றுலா பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தொழிலில் மந்தநிலை மாறி நவீன நுட்பங்களை கையாளலாம், இதனால் அதிக பணவரவு ஏற்படும். சில அரச ஊழியர்களின் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடும். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், தூய ஆடைகளை அணிந்து இறை வழிபாடுகளில் ஈடுபடுவதனால் மனதில் அமைதி கிடைக்கும், நண்பர்களுடன் விநோத விளையாட்டுகளுக்காக அதிக செலவுகளை தவிர்க்கவும். வார இறுதியில் ஆன்மீக தியானங்கள் வாழ்வில் இருளை போக்கி உற்சாகத்தை தரும்.

அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
வழிபாடு: நவகிரகம்


 

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

நல்ல நம்பிக்கையை யானையின் தும்பிக்கைபோன்று பலமானது என்று கருதும் நல்லவர்களை நேசிக்கும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தாருடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். பெண்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரக்கூடும். தொழில் வளர்ச்சிக்கு சில அரசாங்க உதவிகள் தேடி வரக்கூடும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். நீண்ட தூரத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகளை கேள்விப்படுவீர்கள். புதிய வேலைப்பாடுகளை உற்சாகத்துடன் தொடங்கலாம், இதனால் எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும். இசையில் அதிக ஆர்வம் செலுத்துவதனால் மனதில் புத்துணர்ச்சி கிடைக்கும். சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படக்கூடும். சில சரும உபாதைகள் வந்து நீங்கும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். வார இறுதியில் நன்மை பயக்கு செயல்களில் ஈடுபடுவதன் மூலம் துன்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும்.  

அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: நவகிரகம்
வழிபாடு: சாம்பால், நீலம்




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல்பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்துவீர்கள், இதனால் அதிக பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறகூடும். உல்லாச பயணங்கள் செல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. பெண்களுடன் சில வாக்குவாதங்களினால் மனஸ்தாபம் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நவீன வேலைத்திட்டங்களின்போது நண்பர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். சில சரும நோய்கள் வந்து நீங்கும், தேக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். வார இறுதியில் மனதில் நன்மையானதை மட்டும் சிந்தித்து செயல்படுவதால் சிக்கல்கள் விலகி செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அமைதியும் சாந்தமும் குடிகொண்ட முகத்தோடு இனிமையாக பேசி மற்றவர்களை உள்ளம் நெகிழ வைக்கும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்புக்கள் தேடி வரகூடும். வியாபாரத்தில் நவீன சாதனங்களை கொண்டு ஆதாயம் அடையலாம். கேட்பார் பேச்சுக்களை கேட்டு பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். பணநெருக்கடி ஏற்படும், பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் தேவை. குடும்பத்தாருடன் வெளிபிரயாணங்கள் பயணிப்பதால் அனுகூலம். உயரதிகாரிகளின் இடையூறுகள் மனசங்கடத்தை ஏற்படுத்தும், நிதானத்துடன் செயல்படவும். சில பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, வார இறுதியில் விடாமுயற்சியுடன் செயல்படுவதன் மூலம் வெற்றியை அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)


 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடின உழைப்பால் மட்டுமே முன்னேறலாம் என்பதை முழுமூச்சாக கொண்டு சிகரம் தொடுகிற மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள், குடும்ப உறவினர்களுடன் ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். பெண்களின் சலுகைகள் மகிழ்ச்சியை தரகூடும், அறுசுவையான உணவுகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். அழகிய ஆடை - அணிகலன்கள் அன்பளிப்பாக கிடைக்கக்கூடும். உயரதிகாரிகளுடன் சுமுகமானமுறையில் நடந்து கொள்ளவும், இல்லாவிடின் மனசாங்கடங்களை எதிர்நோக்க நேரிடும். விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. அன்றாட வேலைகளை உற்சாகத்துடன் தொடங்கலாம், வார இறுதியில் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்.   

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)


 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மாறுபட்ட குணங்களை கொண்டவர்களிடமும் யதார்த்தமாக பேசி பிறர் மனதை அடக்கி ஆளும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிதாக தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும், நண்பர்களுடன் உல்லாச பிரயாணங்களின்போது அதிக செலவுகள் ஏற்படும். வியாபார விரித்திற்காக அதிக அலைச்சல்கள் மேற்கொள்ளவேண்டிருக்கும். சில இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தியானங்கள், வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் ஏற்படும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். பெண்களுடன் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு. நாவடக்கத்துடன் செயல்படவும். வார இறுதியில் நல்ல காரியங்களை இறைவன் துணையுடன் செயல்படுத்தலாம்;.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்:
நவம்பர் 30ஆம் திகதி காலை 7.28 மணியிலிருந்து டிசெம்பர் 02ஆம் திகதி காலை 9.54 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

உறுமீனைப்போல் காத்திருக்கும் உறுதியுள்ளமும் தோல்விகளை கண்டு எதிர்நீச்சல்போடும் மீனராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் மேலதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. இசையில் அதிக ஆர்வம் காட்டுதல், குடும்ப உறவினர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், இதனால் அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். வெளிதேசங்களிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். பணவரவுகளுக்காக பிறரின் உதவிகள் நாடுவதை தவிர்க்கவும். பொருள் வரவு சேரும். பகைவர்களுடன் வேண்டாத பேச்சுகளினால் மனஸ்தாபம் ஏற்படும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். வார இறுதியில் நீண்ட நாட்க்கள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்:
நவம்பர் 02ஆம் திகதி காலை 9.54 மணியிலிருந்து டிசெம்பர் 04ஆம் திகதி மாலை 12.54 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X