2024 மே 08, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (30.01.2011 - 05.02.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 29 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (30.01.2011 - 05.02.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது உங்களுக்கு பொருந்தும். எந்த விடயத்திலும் ஞானத்துடன் செயல்படும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் தொடங்கிய காரியத்தில் வெற்றி காண்பீர்கள். பணப்பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும். குடும்ப உறவினர்களுடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மனசங்கடங்கள் நீங்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கக்கூடும். தொலைந்த பொருளை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். நண்பர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவார்கள். சுகமான உணவு இனிதாக கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அரசாங்க பணியாளர்கள் மூலம் சில உதவிகள் கிடைக்கக்கூடும். இக்காலகட்டங்களில் பெரியார்கள் வழங்கும் அறிவுரைகளை கேட்டு நடப்பதால் பகைவர்களினால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
வழிபாடு: நவகிரகம்




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரிவதுபோல் யாரிடமும் எளிமையாக பேசி பழகும் சுபாவம் கொண்ட இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அரசாங்க தொழில் வாய்ப்புக்களுக்கு இடமுண்டு. பெண்களுக்கு புதிய ஆடை, ஆணிகலன்கள் கிடைக்கக்கூடும். பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தினாலும் உரிய நேரத்தில் வந்து சேரும். நன்மை பயக்கும் காரியங்களில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். இன்பமான உறக்கம் நிறைவாக கிடைக்கும். வியாபாரத்தில் மந்தநிலை மாறி நவீன சாதனங்களை கொண்டு ஆதாயம் அடையலாம். மனதுக்கு பயத்தை உணர்த்தும் சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும். இக்காலகட்டங்களில் விநோத விளையாட்டுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
ஜனவரி 30ஆம் திகதி காலை 08.07 மணியிலிருந்து பெப்ரவரி 01ஆம் திகதி மாலை 05.01 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆழம் அறியாது காலை விடாது சுயசிந்தனையுடன் தமது வேலையை தாமே செய்யும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்த கூடும். வீடு அல்லது தொழில் மாற்றங்களுக்கு இடமுண்டு. புதிய திட்டங்களின்போது நெருங்கிய நண்பர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். உங்களது திறமையான சாதனைகளை செயல்படுத்தி வெற்றி அடையலாம். குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். எச்சந்தர்ப்பத்திலும் பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதையும் முன்னிற்பதையும் தவிர்க்கவும். பெண்களின் உதவியுடன் அன்றாட பணிகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். விநோத விளையாட்டுக்களில் கவனகுறைவோடு ஈடுபடுவதால் சில சிக்கல்களை எதிர்நோக்கநேரிடும். இக்காலகட்டங்களில் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களை எளிதாக ஏற்றுகொள்வது உகந்ததாகும்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்:
பெப்ரவரி 01ஆம் திகதி மாலை 05.01 மணியிலிருந்து பெப்ரவரி 03ஆம் திகதி காலை 03.44 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

வாழ்க்கையில் வேகமாக முன்னேற வேண்டும் என்ற சிந்தனையும் எதிலும் அமைதியுடன் செயல்படும் விடயஞானம் உள்ள கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரம் தொடர்பான திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதால் அதிக பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சுபவிசேடங்களின்போது சொந்த பந்தங்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வதன் மூலம் சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலைப் பணிகளை செயல்படுத்த அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். நீண்டநாள் எதிர்பார்த்த இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள், இக்காலகட்டங்களில் அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களில் விலகி செயல்படுவது நன்று.    

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
பெப்ரவரி 03ஆம் திகதி காலை 03.44 மணியிலிருந்து பெப்ரவரி 06ஆம் திகதி மாலை 03.52 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பிறரின் அன்புக்கும் சொல்லுக்கு அடிபணிந்தவராக கோபத்தில் சிங்கம் போன்றும் கர்ச்சிக்கும் குணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவது அல்லது அநாவசிய பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும். குடும்ப உறவினர்கள் மூலம் செய்திகள் வந்து சேரும். திருடர்களிடம் கவனம் தேவை. புதுமையான பொருள் காணக்கிடைத்தல். வெண்மையான ஆடைகளை அணியலாம். நமது நலனை விரும்பும் பெரியார்களின் ஆதரவு நம்பிக்கை தரும். பணப்பிரச்சினைகள் சற்று அலைச்சலை ஏற்படுத்தக்கூடும். சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படுதல். புண்ணிய ஸ்தலங்கள் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதால் மனஅமைதி கிடைக்கும். இக்காலகட்டங்களில் பிரச்சினைகளை கண்டு பின்செல்லாது பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவதால் வாழ்க்கையில் குழப்பங்கள் தெளிவு பெறும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: சிவன் (சந்திரன்)




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

இறைவன் வழியே வாழ்வில் உன்னதமான வழி எனும் சிந்தனையும் மெய்சிலிர்க்கும் தோற்றம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் தமது வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். வியாபாரத்தில் நவீன நுட்பங்களை பயன்படுத்தி ஆதாயம் அடையலாம். குடும்ப உறவினர்களுடன் தூர பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். சில இடமாற்றங்களுக்கு வழியுண்டு. நாவுக்கு சுவையான உணவு உண்ணலாம். நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் கிடைக்கக்கூடும். அரசாங்க ஊழியர்களின் உதவியை பெற அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டிருக்கும். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளை வெளிகாட்டுவதால் அனுகூலம். இசையில் நாட்டம் அதிகரிப்பதுடன் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். இக்காலகட்டங்களில் வாழ்க்கை தரத்திற்கு ஏற்ப செலவுகளை குறைத்து சேமிப்பில் அக்கறை செலுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 04
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

நல்ல நண்பர்களை அதிகம் நேசிக்கும் குணமும் பிறரிடம் மனவிட்டு பேசி மகிழவேண்டு என்ற ஆசையும் அன்பு காட்டும் உள்ளமும் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு உடலால் சில சிரமங்கள் ஏற்படக்கூடும். ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத இன்பகரமான செய்திகள் வந்து சேரும். பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படக்கூடும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். மனதால் சிறு கஷ்டங்கள், குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் உயர் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படும், இதனால் புதிய வாய்ப்புக்கள் பின்தள்ளப்படக்கூடும். வெளிதேச பயணங்களின்போது நல்ல நண்பர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் மூலம் அழகிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கும். இக்காலகட்டங்களில் முழு மனதோடு இறைவனை நாடுவதால் கவலைகள் மறையும்.

அதிர்ஷ்ட திகதி: 04
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

எந்த முயற்சியிலும் வெற்றி காணும் நீங்கள் பிறருக்கு அறிவுரை வழங்குவதில் மதி மந்திரியாக வலம் வரும் விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும். தொழில் தொடர்பான வேலைப் பணிகளுக்கு பயணங்கள் செல்லநேரிடும், இதனால் மனதில் சிறு அலைச்சல்கள் தோன்றும். பெண்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தூய்மையான ஆடைகளை அணியலாம். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் அன்யோன்யம் பலப்படும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். நன்மை பயக்கும் காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பிறரின் பிரச்சினைகளை பேசுவதையும் ஆலோசனை கூறுவதையும் தவிர்க்கவும். இக்காலகட்டங்களில் சிலவிதமான மனநிறைவு தரக்கூடிய நிகழ்வுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

மதியாத வாசல் மிதியாத கொள்கை பெற்ற, எல்லோரையும் அனுசரித்தி அடக்கி பேசும் குழந்தை உள்ளம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தொலைந்த பொருளை மீண்டும் பெற்று கொள்ளலாம். தொழில் ஸ்தானத்தில் உயர் அதிகாரிகளுடன், சக உழியர்களுடன் பிரச்சினை ஏற்படக்கூடும், பொறுமையுடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் பெண்களின் உதவியுடன் தமது பணிகளை செய்து முடிப்பீர்கள். அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும், ஒவ்வாத உணவினால் அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், தேகசுகத்தை பாதுகாக்கவும். ஆலய அனுஷ்டானங்களில் அதிக அக்கறையுடன் ஈடுபடுவதால் மனதில் உற்சாகம் கிடைக்கும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்ட சங்கடங்கள் மறைந்து மனதில் புதிய எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடின உழைப்புடன் போராடி முன்னேற்றம் அடையும் நீங்கள் மற்றவர்கள் மத்தியில் உயர்மதிப்பை பெற்றுக்கொள்ளும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு கூட்டு தொழிலை விரிவுபடுத்த அரசாங்க ஊழியர்களின் உதவிகள் சாதகமாக அமையும். புதிய செலவுகளினால் பணத்தட்டுப்பாடுகள் ஏற்படும், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் செலுத்தவும். அறுசுவையான உணவு உண்ணலாம், வெளிதேசங்களிருந்து முக்கிய தகவல் வந்து சேரும். சில நவீன வேலைத் திட்டங்களை கையாளும்போது சில இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். சுற்றுலா பயணங்களில் ஈடுபடுவதால் மகிழ்ச்சியும் உற்சாகமும் கிடைக்கும். இசையில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை ஏற்படும், மேலும் பெண்களின் பணிகள் அதிகரிக்கக்கூடும். இக்காலகட்டங்களில் நிறைவான உள்ளத்தோடு பிறரை மனதால் வாழ்த்துவதனால் வளமுடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பரந்த உள்ளம் பரம்பொருள் இல்லமாக செயல்படுவீர்கள். எதற்காகவும் தன்னை சார்ந்தவர்களை விட்டுக்கொடுத்து பேசாத கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் பெண்களின் உதவியுடன் அன்றாட பணிகளை செய்து முடிக்கலாம். மேலும், உற்றார் உறவினர்களுடன் விசேட பிரார்த்தனைகளில் ஈடுபடுவதால் நன்மைகள் ஏற்படும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சில சரும உபாதைகள் வந்து நீங்கும், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கவும். வெளிபிரயாணங்களின்போது நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்க கூடும். இக்காலகட்டங்களில் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை எண்ணி மனதை குழப்பிக்கொள்ளாது நன்மையை மட்டும் சிந்திக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
வழிபாடு: நவகிரகம்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

பலரை நம்பி ஏமார்ந்து போகும் நீங்கள் ஒரு காலகட்டத்தில் உங்களை மட்டுமே அதிகம் நம்பும் பக்குவத்தை பெற்று உணர்ந்து செயல்படும் மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் தொலைதூர பயணங்களை மேற்கொள்வதால் அனுகூலம். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். புதிய ஆடை, ஆணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். சுவையான உணவுகள் உண்ணலாம். பணப்பிரச்சினை சிறு அலைச்சலை ஏற்படுத்தும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். மேல் அதிகாரிகளினால் சில இடையூறுகள் ஏற்படக்கூடும், பொறுமையுடன் செயல்படவும். அரச வேலைவாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். இக்காலகட்டங்களில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதனால் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X