2024 மே 27, திங்கட்கிழமை

இந்தவார பலன்கள் (03.07.2011 - 09.07.2011)

A.P.Mathan   / 2011 ஜூலை 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (03.07.2011 - 09.07.2011)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை புத்திசாலித்தனமாக கையாளும் ஆற்றல் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது பெரியார்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும். தாமதமான பணவரவுகள் வந்து சேரும். வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடிவரக்கூடும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம். பெண்களுக்கு அழகிய ஆடை அணிகலன் சேர்க்கை உண்டாகும். விநோத விளையாட்டுக்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளில் அதிக அக்கறை செலுத்தவும். இக்காலகட்டங்களில் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கடின வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கக் கூடியதாயிருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: பிரம்மா
அதிர்ஷ்ட தெய்வம்: கறுப்பு தவிர்க்கவும்




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பணிவுள்ள மனதில் பயம் இருக்காது என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தொழில் சம்பந்தமான வேலைகளுக்கு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். இசையில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுடன் தேவையற்ற பேச்சுவார்த்தைகளினால் மனஸ்தாபம் ஏற்படும். புதுமையான பொருள் காணக்கிடைக்கும். அரசாங்க உதவிகள் கிடைக்கக்கூடும். அனாவசிய செலவுகளினால் பணப் பிரச்சினைகள் ஏற்படும். கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம். உடல் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுப விசேஷங்களின் போது உறவினர்கள் ஒன்றுபட்டு செயல்படுவார்கள். இக்காலகட்டங்களில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அறிவை விட ஆர்வத்தோடு பல சாதனைகள் படைக்கும் தனித்திறன் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஏற்படும். விசேடமாக பெண்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். முயற்சியுடன் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களின் உதவியுடன் புதிய வேலைத் திட்டங்களை மேற்கொள்வீர்கள். திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானத்துடன் செயல்படவும். நல்ல செய்திகள் வந்து சேரும். வீடு அல்லது காணி சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். பொழுது போக்குகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். இக்காலகட்டங்களில் இறை சிந்தனைகள் வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 06
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் ஏற்றமோ இறக்கமோ மனதில் மாற்றமின்றி வாழும் கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு உற்சாகத்துடன் நல்ல காரியங்களை தொடங்கலாம். மனக் கவலைகள் நீங்கி நிம்மதியான தூக்கம் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுடன் பேசும்பொழுது பொறுமையுடன் வார்த்தைகளை பிரயோகிக்கவும். புதிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ளல், அரசாங்க ஊழியர்களின் நட்புறவுகள் அனுகூலத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். புதிய நண்பர்களின் நட்புக்கள் கிடைக்கும். ஆன்மீக யாத்திரைகள் பயணங்கள் செல்வதனால் மனஅமைதி கிடைக்கும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடும். இக்காலகட்டங்களில் நாம் செய்யும் செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் தளர்வின்றி முயற்சி செய்யவும்.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
 



மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தோற்றத்துக்கேற்ற இயல்பும் அதிக கர்வமும் சிந்தனையாற்றல் அதிகம் உள்ள சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் தோல்விகள் நீங்குவதுடன் நவீன தொடர்புகள் தேடி வரும். அரசாங்க பணியாளர்களின் அனுசரணையுடன் நல்ல வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். பெரியார்களுடன் ஆலய அனுஷ்டானங்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். புதிய வேலைத் திட்டங்களுக்காக வெளிப்பிரயாணங்கள் செல்ல நேரிடும். அலைச்சல்கள் சற்று அதிகரிக்கக்கூடும். செயல்களில் சிறு தடுமாற்றங்களும் பயமும் ஏற்படக்கூடும். இக்காலகட்டங்களில் மனதில் இறை நம்பிக்கை அதிகரிப்பதுடன் வாழ்க்கையில் எல்லா தடைகளையும் தாண்டி உறுதியாக செயல்படலாம்.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எந்நேரமும் சோர்வின்றி சுறுசுறுப்பாக செயல்படும் நுணுக்கமான பார்வை உள்ள கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு முயற்சியுடன் செயல்பட்ட பணிகளில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் பெண்களினால் அனுகூலம் உண்டாகும். நன்மையான காரியங்கள் மனதுக்கு திருப்தியை தரக்கூடும். தேவையற்ற பிரச்சினைகளின் போது வேகத்தை விட்டு விவேகத்தை கைகொள்வது அவசியம். மனசங்கடங்கள், பயங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். அயல் தேசங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரிந்து சென்ற நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டும். விசித்திரமான பொருள் காணக்கிடைக்கும். இக்காலகட்டங்களில் மனக் கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படலாம்.

அதிர்ஷ்ட திகதி: 04
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

வாழ்க்கையில் யாருக்கும் இடையூறின்றி சுற்றி திரியும் பறவைகளை போல் சுதந்திரமாக வாழ விரும்பும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் அது தேவையற்ற பகை ஏற்படுத்தக் கூடும். புதிய திட்டங்களுக்காக அதிக அலைச்சல்கள் மேற்கொள்வீர்கள், இதனால் உடல் சோர்வுகள் ஏற்படும். எதிர்பாராத செய்திகள் திடீர் பயணங்களை ஏற்படுத்த கூடும். உரிய பணவரவுகள் தாமதமின்றி வந்து சேரும். மேல் அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் நடக்கவும். பெண்களின் அன்பும் அனுசரிப்பும் அதிகரிக்க கூடும். பொழுதுபோக்குகளின் போது பிறரின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களின் நல்வரவு மகிழ்ச்சியை தரும். இக்காலகட்டங்களில் எந்த முயற்சியிலும் ஈடுபடும் போது அவசரமின்றி நிதானமாக செயல்படுவது நன்று.

அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் அதிக தன்னம்பிக்கை உடைய விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நினைத்த காரியத்தை சாதித்து வெற்றி அடையலாம். பணத் தட்டுப்பாடுகள் சங்கடத்தை தரக்கூடும், ஆகவே பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை. பகைவர்களினால் அனாவசிய சிக்கல்கள் தேடிவரக் கூடும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகள் வந்து நீங்கும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். மேல் அதிகாரிகளின் உதவியுடன் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை. இக்காலகட்டங்களில் திட்டமிட்டு செய்யாத எந்த முயற்சியும் நஷ்டத்தை தரக்கூடும், சிந்தித்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எல்லோரிடமும் பண்பாக பேசும் குணமும் பிறரை அனுசரித்து நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய வேலைத் திட்டங்கள் தொடர்பான முயற்சிகளுக்கு அரசாங்க உத்தியோகத்தர்களின் உதவிகள் சாதகமாக அமையும். நிம்மதியான உறக்கம் நிறைவாக கிடைக்கும். தேவையற்ற பிரச்சினைகள் தேடிவந்தாலும் அதிலிருந்து விலகி நிற்கவும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் அன்பும் அக்கறையும் மகிழ்ச்சி தரக்கூடும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார திட்டங்களில் தடைகள் ஏற்படும். பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், இல்லாவிட்டால் தேவையற்ற மனசங்கடங்களுக்கு வழிவகுக்கும். இக்காலகட்டங்களில் இறைவாழிபாடுகள், பிரார்த்தனைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவதால் துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்

சந்திராஷ்டமம்
ஜூலை 02ஆம் திகதி மாலை 04.31 மணியிலிருந்து ஜூலை 04ஆம் திகதி மாலை 08.23 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கவலைகளை மறந்து களிப்புமிகு முகத்துடன் கனிவாகப் பேசும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சிலவிதமான சிக்கல்கள், கவலைகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளை முன்னெடுப்பதனால் அனுகூலம். பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது. அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் நல்ல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும். அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். கேட்பார் பேச்சை கேட்டு நடப்பதால் வீண் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்;. இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும், இதனால் மனஅமைதி. தொழில் அல்லது பணிமாற்றங்கள் ஏற்படக்கூடும், இக்காலகட்டங்களில் நமக்கு முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


சந்திராஷ்டமம்
ஜூலை 04ஆம் திகதி மாலை 08.23 மணியிலிருந்து ஜூலை 06ஆம் திகதி மாலை 11.07 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஊறுமிக்க எண்ணங்களும் கம்பீரமான தோற்றமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் புதிய நுட்பங்களை புகுத்தி மேன்மை அடைவீர்கள். புதிய ஆடை- அணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்பும் அக்கறையும் கிடைக்கும். புதிய வேலைத் திட்டங்களை உடனுக்குடன் செய்து முடித்தல். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சிறு மனக் குழப்பங்கள், சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும், நலனை பாதுகாக்கவும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடும். இக்காலகட்டங்களில் பெண்களுடன் பேசும் போது வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

சந்திராஷ்டமம்
ஜூலை 06ஆம் திகதி காலை 11.07 மணியிலிருந்து ஜூலை 08ஆம் திகதி காலை 01.41 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

எதிலும் கலை நுணுக்கத்துடன் காரியங்களை செய்யும் மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய வேலை திட்டங்களில் சிறு மந்த நிலையை ஏற்படுத்த கூடும். எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். இறை வழிபாடுகள், பிரார்த்தனைகளில் அதிக நாட்டம் காட்டுவீர்கள், இதனால் மனஅமைதி கிடைக்கும். வெண்மையான ஆடைகளை அணியலாம். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவார்கள். சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும். சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும். சிலர் தூர பயணங்களின் போது நெருங்கிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டும். இக்காலகட்டங்களில் புதிய சாதனைகளினாலும் திறமையினாலும் வாழ்வில் வெற்றி அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


சந்திராஷ்டமம்
ஜூலை 08ஆம் திகதி காலை 01.41 மணியிலிருந்து ஜூலை 10ஆம் திகதி காலை 04.46 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X