Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 07 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வாரபலன்கள் (08.08.2010 - 14.08.2010)
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்... சொல், செயல்களில் தெளிவும் சஞ்சல மனம் பிறகு தெளிவு உடையவர்களான மேட ராசி அன்பர்களே... இந்த வாரம் உங்களுக்கு புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்
பொழுது போக்குகளில் ஈடுபடும்போது அவதானத்தடன் நடந்து கொள்வது நல்லது. சுற்றத்தினர் நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். மனக்குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். விசித்திரமான ஆச்சரியமான பொருள்களை காணக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். வீண் அலைச்சல் ஏற்பட கூடும். உடல் நிலையில் சில சில உபாதைகள் ஏற்படும். அவதானத்துடன் நடப்பது நல்லது.
அதிர்ஷ்ட தேதி : 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல் நிறம்
வழிபாடு: சிவன் (சந்திரன்).
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்... தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே... இந்த வாரம் உங்களுக்கு அனாவசிய செலவுகள் ஏற்படக்கூடும். சில தீய நட்பினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு கவனமாக இருப்பது நல்லது. சங்கீதத்தில் புதிய முயற்சியை கையாளுவதால் மகிழ்ச்சி ஏற்படும். சுவையான உணவு உண்ண கிடைப்பதன் முலம் மனதுக்கு திருப்தி ஏற்படும். பொழுது போக்கு சம்மந்தப்பட்டவைக்கு செலவு செய்ய ஏற்படும். பெண்கள் மூலம் உதவி கிடைக்கக்கூடும் அதனால் இன்பம் ஏற்படும். சாதுக்களின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். பணவரவும் எதிர்பார்த்தபடி அமையும்.
அதிர்ஷ்ட தேதி : 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல் நிறம்
வழிபாடு: சிவன் (சந்திரன்).
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள் தீவிரமோ தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே...
இந்த வாரம் உங்களுக்கு புதிய முயற்சிகள் தொடங்க இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் சகோதரர் சகோதரிகள் வருகையால் மகழ்ச்சி ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கத்துடன் செயல் படுவது நல்லது. தூரதேசத்தில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த செய்தி கேள்விப்பட இடமுண்டு. தொழில் ஸ்தானம் அல்லது வீடு மாற்றம் ஏற்பட கூடும். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும்.
அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ்
வழிபாடு: பார்வதி.
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள். பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பு கொண்ட கடகராசி அன்பர்களே.
இந்த வாரம் உங்களுக்கு சிலவிதமான தொல்லைகள் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். அவதானத்துடன் இருப்பது நல்லது. பெண்களுடன் மனஸ்தாபம் விவாதம் ஏற்படக்கூடும். வேண்டாத பேச்சால் சிக்கல் ஏற்பட இடமுண்டு. ஆகவே வார்த்தை பிரயோகிப்பதில் அவதானத்துடன் நடந்து கொள்ளவும். மேலதிகாரிகளுடன் பகை ஏற்பட இடமுண்டு. திட்டமிட்ட காரியங்களில் தடை ஏற்படும். செய்யும் செயல்களில் நிதானத்துடன் நடப்பது நல்லது.
அதிர்ஷ்ட தேதி : 8
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
வழிபாடு: நவகிரகம்.
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள். வாக்கு சாதுர்யம் மனோபலம் உள்ளவர்கள், சற்று அகம்பாவம் உள்ளவர்கள் அதிகார தன்மை உடைய சிம்மராசி அன்பர்களே.
இந்த வாரம் உங்களுக்கு மேற்கொள்ளும் பிரயாணத்தின் மூலம் எதிர்பாராத இலாபம் ஏற்படும். செய்யும் வழிபாட்டின் பலனாக மாகான்களின் தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் சேரும். திட்டமிட்டபடி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதனால் பணவரவு கூடும். சில சிக்கல் பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு அவதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுப்பது நல்லது.
அதிர்ஷ்ட தேதி : 14
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்.
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்... நீதி தவறாமை கண்ணியம் நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே... இந்த வாரம் உங்களுக்கு மேலதிகாரிகளுடன் பகை ஏற்பட இடமுண்டு. மிகவும் நிதானத்துடன் செயற்படவும். மனதில் குழப்பம் சஞ்சலம் ஏற்படக் கூடும். புதிய முயற்சிகளில் தடை ஏற்படும். வீண் செலவு ஏற்படும். பெண்கள் மூலம் சில உதவி கிடைக்க வாய்புண்டு. அந்நியர்களால் சிக்கல்கள் மனஸ்தாபம் ஏற்படக் கூடும். பணப்பிரச்சினை எல்லா செயல்களிலும் மந்தநிலை ஏற்படும். சிந்தித்து செயற்படவும்.
அதிர்ஷ்ட தேதி :14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மஞ்சள்
வழிபாடு: பெருமாள்.
சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்... எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துல்லியமாக எடைபோடக்கூடியவர்கள், ஆடம்பரமான வாழ்கை உள்ள துலா ராசி அன்பர்களே... இந்த வாரம் உங்களுக்கு தொடங்கும் எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும். அதிக பண வரவு அதனால் மகிழ்ச்சி ஏற்படும். நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடிய பெரியவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற வழி கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் நிம்மதி. நல்ல செய்தி கேள்வி பட இடமுண்டு. கடவுள் அருளால் தடைபட்ட காரியம் வெற்றி பெறும்.
அதிர்ஷ்ட தேதி :14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மஞ்சள்
வழிபாடு: பெருமாள்.
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்... ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே... இந்த வாரம் உங்களுக்கு சில உடல் சோர்வு, மனக்குழப்பம் ஏற்பட இடமுண்டு. நிதானத்துடன் நடப்பது நல்லது. பெண்களுடன் விவாதம் ஏற்பட இடமுண்டு ஆகவே அவர்களுடன் பேசும்போது மிக அவதானத்துடன் நடக்கவும். எடுத்த காரியத்தில் தடை காட்டும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பணம் கைமாற்றம் செய்வதில் நிதானம் தேவை. அதன் முலம் பிரச்சினை ஏற்பட இடமுண்டு. மேலதிகாரிகளுடன் பகை ஏற்படாத விதத்தில் நடக்கவும். உடலுக்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும் அதன்முலம் உபாதைகள் ஏற்பட இடமுண்டு.
அதிர்ஷ்ட தேதி :12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டு துணி
வழிபாடு: குருபகவான்
முலம் பூராடம் உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்... வைராக்கியம் திடசிந்தனை நேர்மை நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே... இந்த வாரம் உங்களுக்கு பொழுது போக்குகளில் ஈடுபடும்போது நிதானத்துடன் நடக்கவும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும் அதனால் மனமகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கி வியாபாரம் விருத்தி ஆகும் அதனால் பணவரவு கூடும். பெண்களால் குடும்பத்தில் உதவி இன்பம் பெருகும். நல்ல உறக்கம் கிடைக்கும். செலவு செய்யும்போது நிதானத்துடன் நடப்பது நல்லது.
அதிர்ஷ்ட தேதி : 8
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் நீலம்
வழிபாடு: நவகிரகம்.
சந்திராஷ்டமம் ஆனது ஓகஸ்ட் 08 மணி 06.58 பிற்பகலில் இருந்து ஓகஸ்ட் 10 மணி 06.51 பிற்பகல் வரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர்வீட்டீல் விருந்து உண்ணுதல் புதிய முயற்சிகள் புதிய தொழில் தொடங்குதல் வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
உத்திராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம்1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்... தெய்வீக பலன் பெற்றவர்களே நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்த மகர ராசி அன்பர்களே. இந்த வாரம் உங்களுக்கு தொடங்கிய காரியத்தில் வெற்றி கிட்டும். அதனால் அதிக பணலாபம் கிடைக்கும். மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சில விதமான மனக்குழப்பம் சங்கடங்கள் ஏற்பட இடமுண்டு அவதானத்துடன் நடப்பது நல்லது. வியாபாரத்தில் பகை பிரச்சினை ஏற்படக் கூடும் நிதானத்துடன் நடப்பது நல்லது. இடம் மாற்றத்திற்கு வழியுண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் சேரும் அதனால் மனமகிழ்ச்சி. பெண்களுடன் விவாதம் ஏற்படக்கூடும். ஆகவே வார்த்தை பிரயோகிப்பதில் அவதானத்துடன் நடந்துகொள்ளவும்.
அதிர்ஷ்ட தேதி : 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல் நிறம்
வழிபாடு: சிவன் (சந்திரன்).
சந்திராஷ்டமம் ஆனது ஓகஸ்ட் 08 மணி 06.58 பிற்பகலில் இருந்து ஓகஸ்ட் 10 மணி 06.51 பிற்பகல் வரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல் வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள். ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம் செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே. இந்த வாரம் உங்களுக்கு புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். அரச ஊழியர்களால் நன்மை ஏற்படுகூடும். பண வரவில் சில தடைகள் ஏற்படும். பொழுது போக்குகளில் ஈடுபடும்போது அவதானத்துடன் நடந்துகொள்வது நல்லது. உடல் நிலையில் சில சில உபாதைகள் ஏற்படுகூடும். அவதானத்துடன் நடப்பது நல்லது. நல்ல செய்தி கேள்விப்பட இடமுண்டு. சுவையான உணவில் திருப்தி ஏற்படும்.
அதிர்ஷ்ட தேதி : 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல் நிறம்
வழிபாடு: சிவன் (சந்திரன்).
சந்திராஷ்டமம் ஓகஸ்ட் 12 மணி 06.22 பிற்பகலிர் இருந்து ஓகஸ்ட் 14 மணி 07.32 பிற்பகல் வரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர்வீட்டில் விருந்து உண்ணுதல் புதிய முயற்சிகள் இபுதிய தொழில் தொடங்குதல் வேண்டாத பிரச்சனையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்... காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள் யாரிடமும் மனம் விட்டுப்பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே... இந்த வாரம் உங்களுக்கு சில சிக்கல் பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு அவதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுப்பது நல்லது. பெண்களுடன் விவாதம் ஏற்படக் கூடும் ஆகவே வார்த்தை பிரயோகிப்பதில் அவதானத்துடன் நடந்துகொள்ளவும். பண வரவில் சில தடைகள் ஏற்படும். செலவு செய்யும்போது நிதானத்துடன் நடப்பது நல்லது.
அதிர்ஷ்ட தேதி : 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்).
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025