2024 மே 27, திங்கட்கிழமை

இந்தவார பலன்கள் (10.07.2011 - 16.07.2011)

Menaka Mookandi   / 2011 ஜூலை 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (10.07.2011 - 16.07.2011)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னைச் சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசாங்க உத்தியோகஸ்;தர்களின் அனுசரணைகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் சுபகாரியங்களின் போது உற்றார் உறவினர்களின் வருகை உற்சாகத்தை தரும். நல்ல நண்பர்களின் நட்பு தேடி வருவர். அன்றாட வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். பெண்களுடன் வீண் முரண்பாடுகள் ஏற்படக் கூடும். வார்த்தைகளில் நிதானம் தேவை. நவீன நுட்பங்களைப் பயன்படுத்துவதால் நட்டம் ஏற்படக் கூடும். காணாமல் போன பொருள் மீண்டும்  கிடைக்கும். சரும உபாதைகள் வந்து நீங்கும். இவ்வார இறுதியில் இறை தலங்கள் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடுவதனால் மனதில் குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


சந்திராஷ்டமம்
ஜூலை 10ஆம் திகதி காலை 04.46 மணியிலிருந்து ஜூலை 13ஆம் திகதி காலை 08.55 மணிவரை இருப்பதால், இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



கிருத்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1௨ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுரியத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு புதிய வேலை தொடர்பான திட்டங்களுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும். சிலர் தமது கடின முயற்;சியினால் திறமையான பல சாதனைகளை முன்னெடுப்பார்கள். அறிமுகமற்ற நண்பர்களுடன் சேர்ந்து தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்ககூடும். ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் அதிக செலவு செய்தல். தொழில் ஸ்தானத்தில் சக உழியர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளும் கிடைக்ககூடும். சில இட மாறுதல்கள் ஏற்படும். இவ்வார இறுதியில் நன்மையான காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுவதனால் கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சந்திராஷ்டமம்
ஜூலை 13ஆம் திகதி காலை 08.55 மணியிலிருந்து ஜூலை 15ஆம் திகதி மாலை 02.47 மணிவரை இருப்பதால், இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மிருகசீரிடம் 2,3 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..! 
          
இந்த வாரம் உங்களுக்கு தாமதமான காரியங்கள் விரைவில் நடைபெறக் கூடும். வியாபார முன்னேற்றத்திற்காக அரசாங்க அதிகாரிகளின் உதவிகள் பக்கபலமாக இருக்கும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் அழகிய ஆடை உபகரணங்கள் பரிசாக கிடைக்கக் கூடும். தேவையற்ற பிரச்சினைகளினால் குழப்பம் சங்கடங்கள் ஏற்படும். பொழுதுபோக்குகளுக்கு அதிக பண விரயங்களை மேற்கொள்வீர்கள். உடலுக்கு ஒவ்வாத உணவினால் சரும நோய்கள் வந்து நீங்கும். நலனை பாதுகாக்கவும். வாகன சாரதிகளுக்கு தூர பிரயாணங்களினால் அதிக இலாபம் ஏற்படும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும். இவ்வார இறுதியில் வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் ஒன்றித்திருக்கும். இறைவனை தரிசித்து வழிபடுவது அவசியம்.
 
அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, செம்மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


சந்திராஷ்டமம்
ஜூலை 15ஆம் திகதி மாலை 02.47 மணியிலிருந்து ஜூலை 17ஆம் திகதி மாலை 10.57 மணிவரை இருப்பதால், இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் தாழ்ந்த உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
  
இந்த வாரம் உங்களுக்கு, நீங்கள் முயற்சி செய்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் சிறு பணத் தட்டுப்பாடுகள் ஏற்படக்கூடும். இதனால் நல்ல வாய்ப்புக்கள் பின்தள்ளபடும். மனதளவில் அலைச்சல்கள் ஏற்படக் கூடும். நீண்ட நாள் எதிர்பார்த்த நண்பர்களின் சந்திப்புக்கள் மகிழ்ச்சி தரும். அரசாங்க ஊழியர்களின் நட்புறவுகள் நன்மையைத் தரும். குடும்பத்தில் பெண்கள் தமது பணிகளை பொருப்புடன் செய்வார்கள். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக் கூடும். உயர் உத்தியோகஸ்தர்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை கடைபிடிக்கவும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வார இறுதியில், வாழ்க்கையில் முன்மாதிரியாக விளங்கும் பெரியோர்களின் வார்த்தைகளை கேட்டு செயற்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்மம் ராசி அன்பர்களே..! 
                 
இந்த வாரம் உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் போட்டிகள் அதிகரிக்கக் கூடும். சாப்பாட்டில் வெறுப்புத் தன்மை ஏற்படும். உடற்சோர்வுகள் வந்து நீங்கும். ஆச்சரியமான பொருள் காணக் கிடைத்தல். தூய்மையான ஆடைகளை அணியலாம். சிலர் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிறு தடுமாற்றங்கள் ஏற்படும். பொருமையுடன் நடக்கவும். அரசாங்க வேலை வாய்ப்புக்களுக்கு வழியுண்டு. இன்பமான தூக்கம் நிறைவாக கிடைக்கும். கேட்பார் பேச்சைக் கேட்டு நடப்பதால் வீண் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். திருடர்களிடம் மிக கவனத்துடன் செயற்படவும். இவ்வார இறுதியில் தடைப்பட்ட காரியங்களை உற்சாகத்துடன் செய்து முடிக்கக் கூடியதாயிருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளுதல். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு செயற்படவும். பெண்களுடன் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மனக் கசப்பை ஏற்படுத்தும். நாவடக்கம் அவசியம். ஒவ்வாத உணவினால் அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைபடுத்துவதால் அதிக பணவரவு ஏற்படும். நண்பர்கள் மூலம் புதிய ஆடை அணிகலன்கள் பரிசாகக் கிடைக்கும். இசையில் நாட்டம் அதிகரிக்கும். வார இறுதியில் தெய்வீக வழிபாடுகள் தியானங்களில் அதிக ஈடுபாடு செலுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வாழ்க்கையில் யாருக்கும் இடையூறின்றி சுற்றித் திரியும் பறவைகளைப் போல் சுதந்திரமாக வாழ விரும்பும் துலாம் ராசி அன்பர்களே..!    
               
இந்த வாரம் உங்களுக்கு, குடும்ப உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் இலாபகரமாக அமையும். அறுசுவையான உணவு உண்ணலாம். நண்பர்களுடன் உல்லாசப் பயணங்கள் செல்லும் போது மிக கவனம் தேவை. காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்;சிகள் தடையின்றி நிறைவேறும். நன்மையான காரியங்களை செய்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைப்பதுடன் இதனால் மன அமைதி ஏற்படும். உடல் உஷ்ணம் அதிகரிக்கக் கூடும். ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். நெருங்கிய  நண்பர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். இவ்வார இறுதியில் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப செலவுகளை குறைத்து சேமிப்புக்களை அதிகரிக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

தேடிச் சென்றும் உதவிடும் குணமும் முடிவுகளை பராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாகச்  செயற்படும் விருச்சிக ராசி அன்பர்களே..!  
                 
இந்த வாரம் உங்களுக்கு, சிலவிதமான சிக்கல்கள், கவலை தோன்றி மறையும். புதிய முயற்;சிகளை முன்னெடுப்பதனால் அனுகூலம். பணப் பிரச்சனைகளின் போது பிறரின் உதவியை நாடுவதை தவிர்க்கவும். அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் நல்ல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். நிம்மதியான தூக்கம் மனதுக்கு உற்சாகத்தைத் தரும். தீய நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயற்படுவதனால் துன்பம். அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல். குடும்பத்தாருடன் இறை வழிபாடுகளில் ஈடுபடுவதனால் நன்மை ஏற்படும். இவ்வார இறுதியில் வாழ்க்கையில் பல நல்ல விடயங்களை கற்று உணர்ந்து வாழ்வது சிறந்தாகும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளைக் கண்டு விலகிச் செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு, உற்சாகத்துடன் புதிய காரியங்களில் ஈடுபடலாம். பகைவர்களினால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வார்த்தைகளில் நிதானம் தேவை. வாகன சாரதிகளுக்கு தூரப் பிரயாணங்களினால் அதிக இலாபம். நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் அனுகூலம். பிறரின் பேச்சைக் கேட்டு தேவையற்ற பிரச்சினைகளில் முன்னிற்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதுடன் பல வாய்ப்புக்கள் பின்தள்ளபடக் கூடும். கடின உழைப்பினால் மட்டு வெற்றி அடையலாம். விசித்திரமான பொருள் காணக்கிடைக்கும். இவ்வார இறுதியில் எந்த விடயத்திலும் நிதானத்துடன் கையாள்வது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!   
                  
இந்த வாரம் உங்களுக்கு புதிய தொழில் தொடர்பான திட்டங்களுக்கு உயர் அதிகாரிகளுடனும் சக உழியர்களுடன் இணைந்து செயற்படுவீர்கள். குடும்பத்தில் பெண்கள் அக்கரையுடன் நடந்துகொள்வதுடன் நன்மதிப்பை பெற்றுக்கொள்வார்கள். தாமதமான பணவரவுகள் வந்து சேரும். நண்பர்களுடன் சுற்றுலாப் பயணங்கள் செல்லும் போது மிகக் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் தமது ஆற்றலால் திறமையான சாதனைகளை முன்னெடுத்தல். பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய செய்திகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். இவ்வார இறுதியில் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களைப் பாராது சுயசிந்தனையுடன் செயற்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் வாக்கு வன்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு, குடும்பத்தில் சுபகாரியங்களின் போது சொந்தபந்தங்களின் அன்பு அக்கரை அதிகரிக்கும். வியாபார உத்தியோகஸ்தர்கள் தொழில் விருத்திக்காக பல புதிய நுட்பங்களை கையாளுதல். பிறரின் மூலம் தகவல் வந்து சேரும். ஆன்மீக தியானங்கள் யாத்திரைகளை மேற்கொள்ளும் போது மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும். பணப் பிரச்சினைகள் அலைச்சலையும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே பணம் சேமிப்பதில் கடின உழைப்பு அவசியம். நல்ல நண்பர்களின் நட்பு வட்டம் விரிவடையும். வார இறுதியில் இதுவரை ஏற்பட்ட கவலைகள் மறைந்து வாழ்க்கையில் புதிய பாதைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயற்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!  

இந்த வாரம் உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள், கவலைகள் ஏற்படக்கூடும். பிறரின் பேச்சைக்கேட்டு செயற்படுவதை தவிர்க்கவும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிராத்தனைகள் பூஜைகளில் ஈடுபடுவதனால் துன்பங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கக்கூடும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். அனாவசிய பொருள் செலவுகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். பெண்களுடன் பேசும் போது வாக்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். மனப்பயங்கள் வந்து நீங்கும். அன்றாட பணிகளை உடனுக்குடன் செய்து முடித்தல். இவ்வார இறுதியில் வாழ்வில் நல்ல யோசனைகள் தோன்றும் போது அதை உடனே செய்து முடித்தால் வெற்றி தொடரும்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X