2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (15.01.2012 - 21.01.2012)

Menaka Mookandi   / 2012 ஜனவரி 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (15.01.2012 - 21.01.2012)

 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னைச் சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பாகளே...!

இந்த வாரம் உங்களுக்கு பிறரிடம் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகலாம் . இதனால் வீணான மனஸ்தாபங்கள் உண்டாகும். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல் தலைவலி மற்றும் வேண்டாத உணவால் வயிற்றில் பிரச்சினைகள் உண்டாகும்.  செலவுகள் அதிகரிக்கும்.  மகான்களின் தரிசனங்களும் கிடைக்கும். இசைத் துறையில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.  தனலாபம் ஏற்படும்.  வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வார இறுதியில் மனதளவில் குழப்பங்கள் தோன்றும். இக்காலகட்டங்களில் புதிய வேலைத்திட்டங்களை தவிர்ப்பது நன்மையை தரும்.

அதிர்ஷ்ட திகதி: 18

அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி 

 

சந்திராஷ்டமம்

ஜனவரி மாதம் 18ஆம் திகதி மாலை 02.37 மணியிலிருந்து 20ஆம் திகதி மாலை 05.43 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் ஏற்படும். பெண்களுக்கு நன்மை ஏற்படும். நல்லவர்களின் சேர்க்கை உண்டாகும். சில அலைச்சல்கள் காணப்படும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. மகிழ்ச்சியான செய்தி மற்றும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும். தனலாபம் உண்டாகும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் உல்லாச பயணங்கள் சென்று வரலாம். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். எதிர்பார்புகள் அனைத்தும் நிறைவேற கூடிய மகிழ்ச்சியான வாரம் இது.

அதிர்ஷ்ட திகதி: 15

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள் 

அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள் 

 

சந்திராஷ்டமம்

ஜனவரி மாதம் 20ஆம் திகதி காலை 05.43 மணியிலிருந்து 22ஆம் திகதி மாலை 09.39 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 -ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே...!            

இந்த வாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கல்களில் பல விதத்தில் சிக்கல்கள் பணமுடக்கம் என்பன ஏற்படும். குடும்பத்தில் பெண்களுடன் வேண்டாத விவாதங்கள் ஏற்பட்டு வீண் பிரச்சினைகள் உண்டாகும். தொழில் நிமித்தம் தொலை தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாதல். முயற்சி தடை ஏற்படும். மனதளவில் குழப்பம் உடல் சோர்வு,  மயக்கம், பதற்றநிலை ஆகியவை காணப்படும். மேலும் வீண் செலவுகள் உண்டாகும். சாப்பாட்டில் வெறுப்பு உண்டாகும். இதனால் உடல் நலம் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகலாம். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 21    

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி

அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

 

 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9 - பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரம் சம்பந்தமாக நீண்டதூர பிரயாணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். இதனால் வியாபாரம் விருத்தியடைந்து பணவரவு அதிகரிக்கும். இருந்தாலும் மனதில் குழப்பமான சூழ்நிலையே காணப்படும்.  அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதனால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். மேலும் செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும். நல்ல நண்பர்கள் மூலம் பல விதத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் சுமூகமான நிலை ஏற்படும். பிரார்த்தனை வழிபாடுகளை கடைபிடிக்கவும். இக்காலகட்டங்களில் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் கையாளவும்.

அதிர்ஷ்ட திகதி : 15

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை இளம் சாம்பல்

அதிர்ஷ்ட தெய்வம்: சிவன்


 

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள். 

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட சிம்மம் ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். வியாபாரத்தில் அதிக பணலாபம் உண்டாகும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும் நிலை உருவாகும் மற்றும் பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டி காணும் சூழ்நிலை உருவாகலாம். வார இறுதியில் தீய நட்பினால் நட்டம், குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள், முயற்சி தடை, பெண்களுடன் விவாதங்கள் மற்றவர்களினால் பிரச்சினைகள் என்பன ஏற்பட்டு துன்பப்படும் சூழ்நிலை உருவாகலாம். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 19

அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட தெய்வம்: சிவன்

 


உத்திரம் 2, 3, 4, அஸ்தம் சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும். நல்லவர்களுடைய சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். தனலாபங்கள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். மனம் இனிமையான இசையை விரும்பும். மற்றும் பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளுடன் பிரச்சினை ஏற்படக்கூடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.அத்தோடு வார இறுதியில் வியாபாரத்தில் நட்டம், சிலவிதமான சிக்கல்கள், மனதில் பயம், வீண் அலைச்சல்கள் மனச்சஞ்சலம் என்பன ஏற்படகூடும். இக்காலகட்டங்களில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை உண்டாகும். 

அதிர்ஷ்ட திகதி: 15

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் 

அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

 

 

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம்1, 2, 3-ஆம் பாதங்கள். 

தேடிச் சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே...!     

இந்த வாரம் உங்களுக்கு பல வகையில் சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். எடுத்த காரியத்தில் வெற்றியையே தரும் வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும் .உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் இல்லையெனில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மனதில் குழப்பங்கள் தோன்றும் அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும்.  காரியத்தில் வெற்றி உண்டாகும். மற்றவர்களினால் பிரச்சினை உண்டாகும். வேண்டாத செலவுகளால் வேதனையடைய நேரிடும் மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும்.  இக்காலகட்டங்களில் வாழ்க்கை ஏற்படும் பிரச்சினைகள் தோல்விகளை புத்திசாலித்தனமாக வெற்றிக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 15

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள் 

அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள் 

 

 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்ச்சிக ராசி அன்பர்களே...!                                  

இந்த வாரம் நீங்கள் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் வியாபாரம் விருத்தியடைந்து இலாபம் உண்டாகும். சுவையான உணவு கிடைத்தல், குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். நமது வாழ்க்கையில் முன்மாதிரியாக விளங்கும் பெரியோர்களை கண்டு ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் சேருதல். மற்றும் வீண் அலைச்சல், முயற்சி தடைகள், தவிர்க்க முடியாத சில வீண் செலவுகள், வீண் பேச்சுக்களால் பிரச்சினைகள் என்பன இடையிடயே உண்டாகும். வார இறுதியில் மனதில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மனஅமைதி கிடைக்கும். 

அதிர்ஷ்ட திகதி : 18

அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு

 அதிர்ஷ்ட தெய்வம்: அம்மன்

 

 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு உடல் பாதிப்புகளான காய்ச்சல் தலைவலி வாதம் போன்றவை ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் நிலை உருவாகலாம். வேண்டாத பேச்சுகளால் மனஸ்தாபம்,  திருட்டுப் பயம் உண்டாகும் மேலும் வீண் அலைச்சல் காணப்படும். இதனால் மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும்.  குடும்பத்தில் சில சில பிரச்சனைகள் ஏற்படும் பிறரின் பேச்சை கேட்டு தேவையற்ற பிரச்சனைகளில் முன்னிட்ப்பதை தவிர்க்கவும்.வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதுடன் பல வாய்ப்புக்கள் பின்தள்ளபடும்.தூர பிரயாணங்களை இயலுமான வரை தவிர்க்கவும்.  எல்லா விடயத்திலும் நிதானத்துடன் இருப்பது அவசியம்.                            

 அதிர்ஷ்ட திகதி: 21

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் பட்டு

அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்

 

 

உத்திராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2 -ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஒரு அனுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே...!                      

 இந்த வாரம் தொடக்கத்தில் புதிய வேலை திட்டங்களை மேற்கொள்வதை தவிர்க்கவும் இல்லாவிடின் தேவையற்ற சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம். மனதில் பயங்கள் குழப்பங்கள் வந்து நீங்கும் வியாபார தொடர்பான முயற்சிகள் தடைபக்கூடும். ஒவ்வாத உணவுகளினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் நலனை பாதுகாக்கவும். குடும்பத்தில் பெண்களுடன் விட்டுகொடுத்து செயல்படவும் பணப்பிரச்சனைகள் உருவாகும். வீண் அலைச்சல் செயல்களில் தவறுகள் என்பன ஏற்படும். இவ்வார இறுதியில் எந்த விஷயத்தையும் பலமுறை சிந்தனை செய்து பின்னர் முடிவெடுப்பது சிறந்தாகும்.

அதிர்ஷ்ட திகதி: 17

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்

அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

 

 

அவிட்டம்3, 4, சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பறம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே...!  

இந்த வாரம் உங்களுக்கு உடல் நிலையில் சோர்வு காணப்படும் மனதில் குழப்பமான சூழல்கள் உருவாகும்.  குடும்பத்தில் உள்ள பெண்களுடன் விவாதங்கள் உண்டாகும். எனவே நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். மகான்களின் தரிசனங்கள் கிடைக்கப் பெறுவீர்கள் இதனால் மனம் அமைதியடையும். ஆனாலும் முயற்சியில் தோல்விகளே காணப்படும். துக்கம் உண்டாகும் வீண். அலைச்சல் உண்டாகும் செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் போன்றவைகள் நிகழும். சிலரிடையே மனஸ்தாபங்கள் தோன்றும் திருட்டு போகும் சூழ்நிலை உருவாகலாம். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.              

அதிர்ஷ்ட திகதி: 17 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், ப்ரவுன்

அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

 

சந்திராஷ்டமம்

ஜனவரி மாதம் 13ஆம் திகதி காலை 08.32 மணியிலிருந்து 16ஆம் திகதி காலை 11.42 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே.   

இந்த வாரம் நீங்கள் வியாபாரத்தில் பல அரிய நுட்பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள் இதனால் பணவரவுகள் அதிகரிக்கும ;நீண்ட நாள் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிதேச பயணங்களின் போது நெருங்கிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். காணமல் போன பொருள் மீண்டும் கிடைத்தல். புதிய வேலை பணிகள் அலைச்சலை தரகூடும். நல்ல உறக்கம் கிடைக்கும். சில புதிய இடம்மாறுதல்கள் லாபகரமாக அமையும்.  இவ்வார இறுதியில் நீங்கள் செய்வது எதுவாயினும் அதில் முயற்சியும் தன்னம்பிக்கையும் மிக முக்கியமாகும்.

அதிர்ஷ்ட திகதி : 21

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டு 

வழிபாடு: குருபகவான்

 

சந்திராஷ்டமம்

ஜனவரி மாதம் 16ஆம் திகதி காலை 11.42மணியிலிருந்து 18ஆம் திகதி மாலை 02.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .