2024 மே 08, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (22.05.2011 - 28.05.2011)

A.P.Mathan   / 2011 மே 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (22.05.2011 - 28.05.2011)
 

 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை புத்திசாலித்தனமாக கையாளும் ஆற்றல் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் குடும்பத்தாருடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதனால் நன்மை உண்டாகும். தூய்மையான ஆடைகளை அணியலாம். சிலவிதமான சிக்கல்களின் போது பெரியார்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும். புதிய வேலை வாய்ப்புக்களுக்காக தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டும். உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும். இவ்வார இறுதியில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள காலநேரங்களை உரிய முறையில் பயன்படுத்தினால் வாழ்வில் பொற்காலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பணிவுள்ள மனதில் பயம் இருக்காது என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் புதிய தொழில் தொடர்பான திட்டங்களுக்கு உயர் அதிகாரிகளுடனும் சக உழியர்களுடனும் இணைந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் பெண்கள் அக்கறையுடன் நடந்துகொள்வதுடன் நன்மதிப்பை பெற்றுக்கொள்வார்கள். தாமதமான பணவரவுகள் வந்து சேரும். நண்பர்களுடன் சுற்றுலா பயணங்கள் செல்லும் போது மிக கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் தமது ஆற்றலால் திறமையான சாதனைகளை முன்னெடுத்தல். பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும். இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும். இவ்வார இறுதியில் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை பாராது சுய சிந்தனையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அறிவை விட ஆர்வத்தோடு பல சாதனைகள் படைக்கும் தனித் திறன் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் நவீன வேலைத் திட்டங்களை முன்னெடுக்கலாம். குடும்ப உறவினர்கள் அல்லது நண்பர்களின் வருகையினால் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். பெண்களுக்கு அழகிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். விநோத விளையாட்டுகளுக்காக அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். விசித்திரமான பொருள் காணக்கிடைக்கும். சுவையான உணவுகளை உண்ணலாம். பணப் பிரச்சினைகளின் போது பிறரின் உதவியை நாடும் நிலை ஏற்படக்கூடும். இவ்வார இறுதியில் பிறருக்கு எந்த இடையூறுகளும் இன்றி நமது கடமையை சரியாக செய்து வருவது சிறந்ததாகும்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)


சந்திராஷ்டமம்
மே 21ஆம் திகதி மாலை 08.40 மணியிலிருந்து மே 24ஆம் திகதி காலை 05.52 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் ஏற்றமோ இறக்கமோ மனதில் மாற்றமின்றி வாழும் கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் முயற்சி செய்த காரியத்தில் முழு பயனை அடைவீர்கள். பெண்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் பொறுமையுடன் நடப்பது நன்று. குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். சிக்கனமற்ற செலவுகளினால் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி நவீன தொடர்புகள் தேடி வரும். இதனால் பணவரவுகள் அதிகரிக்கக்கூடும். ஆன்மீக யாத்திரைகள், பயணங்கள் செல்வதனால் மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். இவ்வார இறுதியில் வாழ்க்கையில் ஏற்படும், சவால்களை நம்பிக்கையோடு வெற்றி கொள்ளவேண்டும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


சந்திராஷ்டமம்
மே 24ஆம் திகதி காலை 05.52 மணியிலிருந்து மே 26ஆம் திகதி மாலை 05.45 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தோற்றத்துக்கேற்ற இயல்பும் அதிக கர்வமும் சிந்தனையாற்றல் அதிகமும் உள்ள சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் எதிர்பாராத புதிய செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்தக்கூடும். மேல் அதிகாரிகளுடன் சுமுகமாக நடந்துகொள்ளவும். குடும்ப உறவினர்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடர்பான இடமாற்றங்கள் லாபகரமாக அமையும். பொன், பொருள் சேர்க்கை. பெண்களுடன் கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தகளில் நிதானம் தேவை. வெண்மையான ஆடைகளை அணியலாம். தீய நண்பர்களின் சகவாசங்களினால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். இவ்வார இறுதியில் ஆலய அனுஷ்டானங்களில் நம்பிக்கையோடு ஈடுபடுவது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


சந்திராஷ்டமம்
மே 26ஆம் திகதி மாலை 05.45 மணியிலிருந்து மே 29ஆம் திகதி காலை 06.18 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எந்நேரமும் சோர்வின்றி சுறுப்பாக செயல்படும் நுணுக்கமான பார்வை உள்ள கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள், கவலைகள் ஏற்படக்கூடும். பிறரின் பேச்சைக் கேட்டு செயல்படுவதை தவிர்க்கவும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிரார்த்தனைகள், பூஜைகளில் ஈடுபடுவதனால் துன்பங்கள் நீங்கி நன்மைகள்; உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கக்கூடும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். அனாவசிய பொருள் செலவுகளை மேற்கொள்வீர்கள். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். நீண்ட தூர பயணங்கள் சற்று அலைச்சலை ஏற்படுத்தக்கூடும். இவ்வார இறுதியில் எந்த காரியத்தையும் விடாமுயற்சியுடனும் உறுதியான உள்ளத்துடனும் செயல்படுத்துவது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

மாறுபட்ட குணங்கள் உள்ளவர்களை ஆறுதல் பேச்சால் அடக்கியாளும் திறன் கொண்ட துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நினைத்த காரியங்களை சாதித்து வெற்றி அடையலாம். பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல். அரசாங்க வேலை வாய்ப்புக்களுக்கு வழியுண்டு. வியாபாரத்தில் புதிய நுட்பங்களை புகுத்தி அதிக லாபம் அடைவீர்கள். பெண்களுடன் தேவையற்ற பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதை தவிர்க்கவும். செயல்களில் சிறு பதற்றநிலை ஏற்படக்கூடும். நிம்மதியான தூக்கம் மனதுக்கு உற்சாகம் தரும். துஷ்ட நண்பர்களின் நட்பிலிருந்து விலகி நிற்கவும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். இவ்வார இறுதியில் நமது நலனை விரும்பும் பெரியார்களை மதித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் அதிக தன்னம்பிக்கை உடைய விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் புதிதாக முன்னெடுக்கும் காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பகைவர்களுடன் தேவையற்ற பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். அதிக செலவுகளை மேற்கொள்வதனால் பணப் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் தாமதமான சுபகாரியங்கள் நடைபெறக்கூடும், இதனால் சுற்றத்தின் நண்பர்கள் உறவினர்களின் வருகையினால் குதூகலம் ஏற்படும். வீடு அல்லது தொழில் மாற்றங்களுக்கு இடமுண்டு. வியாபார விருத்திக்காக நவீன சாதனைகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். பெண்களுடன் மனகசப்புக்கள் ஏற்படக்கூடும், நிதானம் தேவை. திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும் இவ்வார இறுதியில். இறை தியானங்கள், பிரார்த்தனைகள் மனதுக்கு உற்சாகம் தரும்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் குடும்பத்தில் சொந்த பந்தங்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கக்கூடும். இசையில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியத்தை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம். உடலுக்கு ஒவ்வாத உணவினால் அஜீரண சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் சற்று அதிகரிக்கக்கூடும். வெளிதேச பயணங்களின் போது திருடர்களிடம் மிக அவதானத்துடன் நடக்கவும். புதுமையான பொருள் காணக்கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்களுக்காக அரசாங்க ஊழியார்களின் உதவியை நாடவேண்டியிருக்கும். இவ்வார இறுதியில் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் பொறுமை கைவிடாமல் செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து பல சாதனைகள் படைக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் மகிழ்ச்சி தரும். நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும். புதிய காரியங்களை உற்சாகத்துடன் தொடங்கக் கூடியதாயிருக்கும். ஆலய அனுஷ்டானங்களின் போது தூய்மையான ஆடைகளை அணியலாம். குடும்ப உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் சுற்றுலா பயணங்கள் சென்று வருவீர்கள். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளினால் வெற்றி அடைவார்கள். சில மனக் குழப்பங்கள், பயங்கள் வந்து நீங்கும். இவ்வார இறுதியில் நமது வாழ்க்கையில் முன்மாதியாக விளங்கும் மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு உயர் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படக்கூடும், பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடர்பான திட்டங்களை மேற்கொள்ளல். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளின் வருகையினால் அனுகூலம். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவதனால் நன்மைகள் உண்டாகும். இவ்வார இறுதியில் தீயவர்களின் பேச்சை கேட்டு அனாவசிய பிரச்சினைகளில் முன்னிற்காமல் இருப்பது நன்று.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

தனது கடமைகளை சரியாக செய்து நற்பெயரை பெற்றுக்கொள்ளும் மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் தொழில் சம்பந்தமான வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கலாம். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். அரசாங்க உத்தியோகத்தர்களின் அனுசரணைகள் கிடைக்கக்கூடும். பெண்களுக்கு புதிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கும். சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும். இதனால் உடலால் சில சிரமங்களை எதிர்நோக்க நேரிடும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். இவ்வார இறுதியில் வாழ்கையில் ஏற்படும் துன்பங்களை கண்டு சோர்வடையாமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது நன்று.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X