2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (25.12.2011 - 31.12.2011)

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (25.12.2011 - 31.12.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை சாதாரணமாக ஏற்றுகொள்ளும் மனோபலம் அதிக கொண்ட மேட ராசி அன்பர்களே...!

இந்த வாரம் ஆரம்பத்தில் புதிய வேலை தொடர்பான திட்டங்களுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும். சிலர் தமது கடின முயற்;சியினால் திறமையான பல சாதனைகளை முன்னெடுப்பார்கள். அறிமுகமற்ற நண்பர்களுடன் சேர்ந்து தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கக்கூடும். ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் சக ஊழியார்களுடனும் அதிகாரிகளிடமும் சுமூகமாக செயல்படவும். புதிய நண்பர்களின் அறிமுகம் மகிழ்ச்சி தரும். அழகிய ஆடை அணிகளன் சேர்க்கை உண்டாகும். இக்காலகட்டங்களில் நன்மையான காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுவதனால் கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 27

அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு

அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

   
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

முன்கோபம் அதிகம் கொண்ட மற்றவர்களை எளிதில் நம்பாத இடப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் ஆரம்பத்தில்  நீங்கள் நினைத்த காரியத்தை சாதித்து வெற்றி அடைவீர்கள். உற்சாகத்துடன் அன்றாட பணிகளை உடனுக்குடன் செய்து முடிக்கலாம். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும். தூய்மையான ஆடைகளை அணியலாம். மனபயங்கள் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தூரதேசங்களிருந்து வரும் செய்திகள் மனதுக்கு அமைதி தரும். புதிதாக தொடங்கும் வியாபாரங்;;களில் சில இடமாற்றங்கள் ஏற்படலாம். அரசாங்க அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கக்கூடும். விநோத விளையாட்டுகளில் ஈடுபடும் போது மிக கவனம் தேவை. இக்காலகட்டங்களில் எந்த காரியத்தையும் ஊக்கத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 29

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 

சந்திராஷ்டமம்

டிசம்பர் மாதம் 24ஆம் திகதி காலை 09.05 மணியிலிருந்து டிசம்பர் 26ஆம் திகதி 12.04 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பிறரின் துன்ப நேரங்களில் கருணை உள்ளத்தோடு கரம் கொடுக்கும் மிதுனம் ராசி அன்பர்களே...!

இந்த வாரம் ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு புதிய காரியங்களை செய்யலாம். குடும்பத்தில் சுபவிசேஷங்களின் போது பெண்களின் அன்பு அக்கரையும் அதிகரிக்கும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். செலவுகள் சற்று அதிகரிக்கும். உயர் உத்தியோகத்திரினால் ஆதாயம் உண்டு. நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்ககூடும். நல்ல உறக்கம் இனிதே கிடைக்கும். புதிய முயற்சிகளை முன்னெடுத்தல். பிறரின் பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதையும் வாதிடுவதையும் தவிர்க்கவும். இக்காலகட்டங்களில் முழு உள்ளத்தோடு இறைவனை தரிசித்து வழிபடுவதனால் வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 30

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி

அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்

சந்திராஷ்டமம்

டிசம்பர் மாதம் 26ஆம் திகதி பிற்பகல் 12.04 மணியிலிருந்து டிசம்பர் 28ஆம் திகதி   மாலை 05.53 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 


புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

சிறிய விஷயத்தையும் பெரிய அளவில் கற்பனை செய்யும் சுபாவமும் அமைதியாக செயல்படும் கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் ஆரம்பத்தில் குடும்பத்தில் சுபகாரியங்களின் போது சொந்தபந்தங்களின் அன்பு அக்கரை அதிகரிக்கும். வியாபார உத்தியோகத்தர்கள் தொழில் விரித்திற்க்காக பல புதிய நுட்பங்களை கையாளுதல். பிறரின் மூலம் தகவல் வந்து சேரும். ஆன்மீக தியானங்கள் யாத்திரைகளை மேற்கொள்ளும் போது மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும். பணப் பிரச்சினைகள் அலைச்சலையும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே பணம் சேமிப்பதில் கடின உழைப்பு அவசியம். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். ஒவ்வாத உணவினால் உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். நலனை பாதுகாக்கவும். இக்காலகட்டங்களில் நீண்ட நாள் தடைப்பட்டருந்த காரியங்களை விரைவாக செய்து முடிக்கலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்

டிசம்பர் மாதம் 28ஆம் திகதி  மாலை 05.53 மணியிலிருந்து டிசம்பர் 30ஆம் திகதி காலை 03.15 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 


மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தோற்றத்துக்கேற்ற இயல்பும் அதிக கர்வமும் சிந்தனையாற்றல் அதிகம் உள்ள சிம்ம ராசி அன்பர்களே...!

இந்த வாரம் ஆரம்பத்தில் புதிய தொழில் தொடர்பான திட்டங்களுக்கு உயர் அதிகாரிகளுடனும் சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் பெண்கள் அக்கரையுடன் நடந்துகொள்வதுடன் நன்மதிப்பை பெற்றுக்கொள்வார்கள். தாமதமான பணவரவுகள் வந்து சேரும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும். நல்ல செய்திகள் மனதுக்கு மகிழ்ச்சியை தரக்கூடும். நண்பர்களுடன் சுற்றுலா பயணங்கள் செல்லும் போது மிக கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் தமது ஆற்றலால் திறமையான சாதனைகளை முன்னெடுத்தல். பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை பாராது சுயசிந்தனையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 27

அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு

அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

சந்திராஷ்டமம்

டிசம்பர் மாதம் 30ஆம் திகதி காலை 03.15 மணியிலிருந்து ஜனவரி மாதம் 02ஆம் திகதி மாலை 03.23 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 


உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

யாரிடமும் எளிதில் பழகாத பழகியவர்களை எச்சந்தர்ப்பத்திலும் மறவாத  உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வாரம் ஆரம்பத்தில் வியாபாரத்தை மென்மேலும் வளர்ச்சியடைய பல அரிய நுட்பங்களை கையாண்டு வாடிக்கையாளர்கரளை கவர்வீர்கள். சிலரின் எதிர்பாராத உதவிகள் கிடைக்கக்கூடும். இசையில் நாட்டம் அதிகரிக்கும். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்கும். கேட்ப்பார் பேச்சை கேட்டு நடப்பதால் சில விதமான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். குடும்பத்தில் பெண்கள் நிதானமாகவும் அனுசரிப்புடன் செயல்படுவார்கள். திட்டமிட்டு செயல்படும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்துகொள்ளவும். இக்காலகட்டங்களில் பெரியோர்களின் உதவிகள் நல்வழி நடத்தலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 29

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்

அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

வாழ்க்கையில் யாருக்கும் இடையூறின்றி சுற்றி திரியும் பறவைகளை போல் சுகந்திமாக வாழ விரும்பும் துலாம் ராசி அன்பர்களே...! 

இந்த வாரம் ஆரம்பத்தில் உற்சாகத்துடன் புதிய காரியங்களில் ஈடுபடலாம். பகைவர்களினால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வார்த்தைகளில் நிதானம் தேவை. அஜீர்ணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் அனுகூலம். பிறரின் பேச்சை கேட்டு தேவையற்ற பிரச்சனைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதுடன் பல வாய்ப்புக்கள் பின்தள்ளபடக்கூடும். கடின உழைப்பினால் மட்டும் வெற்றி அடையலாம். இக்காலகட்டங்களில் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் கையாளவும்.

அதிர்ஷ்ட திகதி: 28

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்

அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
               


விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

எப்பொழுதும் வெகுளியாக பேசும் குணமும் யாரிடமும் எதையும் எதிர்பாராத தன்மை கொண்ட விருட்ச்சிக ராசி அன்பர்களே...!  

இந்த வாரம் ஆரம்பத்தில் நல்ல செய்திகள் உடனுக்குடன் வந்து சேரும். விநோத விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். நண்பர்களுடன் சேர்ந்து புதிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ளலாம். பெண்களுக்கு அழகிய ஆடை அணிகளன்கள் சேர்க்கை உண்டாகும். அரசாங்க ஊழியர்களின் மூலம் புதிய வாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் அமையக்கூடும். குடும்பத்தாருடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதனால் நன்மை உண்டாகும். இக்காலகட்டங்களில் எந்த காரியத்தையும் தனித்து நின்று செயல்படுவதனால் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 29

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பள்

அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)

 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எல்லோரிடமும் பண்பாக பேசும் குணமும் பிறரை அனுசரித்து நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே...! 

இந்த வாரம் ஆரம்பத்தில் புதிய காரியங்களை தொடங்கக் கூடியதாயிருக்கும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நவீன சாதனங்களை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். மனபயங்கள் சங்கடங்கள் வந்து நீங்கும். எதிர்பாராத புதிய செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்தக்கூடும். சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படும். இதனால் உடல் நலன் பாதிப்படைதல். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். தீய நண்பர்களிடமிருந்து விலகி செயல்படுவது நன்மைக்கே. இக்காலகட்டங்களில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று நம்பிக்கையுடன் பிராத்தனைகளில் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 

       

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கவலைகளை மறந்து களிப்புமிகு முகத்துடன் கனிவாகப் பேசும் மகர ராசி அன்பர்களே...!

இந்த வாரம் ஆரம்பத்தில் குடும்பத்தாருடன் பிரார்த்தனை பூஜைகளில் ஈடுபடுவதால் சங்கடங்கள் கவலைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். இன்பமான உறக்கம் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகளுக்காக வெளிதேச பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். சிக்கனமற்ற செலவுகளினால் பணத்தட்டுபாடுகள் ஏற்படும், பணம் சேமிப்பதில் கடின உழைப்பு தேவை. அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களினால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இக்காலகட்டங்களில் நமக்கு முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதத்தை பெற்றுகொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஊறுமிக்க எண்ணங்களும் கம்பீரமான தோற்றமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் ஆரம்பத்தில் புதிய காரியங்களில் சிறு தடைகள் தோல்விகள் வந்து நீங்கும் சிந்தித்து செயல்படவும். வேண்டாத பிரச்சினைகளில் முன்னிற்பதால் அது நமக்கே பகையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரத்தில் மேல் அதிகாரிகளினால் சில மறைமுக போட்டிகள் அதிகரிக்கும். அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள். பெண்களுடன் அதிக பேச்சுக்களை வார்த்தைகளை தவிர்க்கவும். நல்ல நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இக்காலகட்டங்களில் தீயவர்களை கண்டு பயம் கொள்ளாது துணிந்து செயல்படவும்.            

அதிர்ஷ்ட திகதி: 27

அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு

அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

எதிலும் கலைநுணுக்கத்துடன் காரியங்களை செய்யும் மீனம் ராசி அன்பர்களே...!                   

இந்த வாரம் உங்களுக்கு நீண்ட தூரபயணங்கள் செல்வதால் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். உயர் அதிகாரிகளின் அனுசரணை புதிய வாய்ப்புக்களுக்கு வழிவகுக்கும். எதிர்பார்த்த தனலாபம் கிட்டும். பொழுது போக்குக்காக அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் பல நவீன சாதனங்களை பயன்படுத்தி இலாபம் அடைவீர்கள். இசையில் அதிக ஆர்வம் காட்டுதல் இதனால் மனஅமைதி கிடைக்ககும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களுடன் இணைந்து புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பொருள் சேர்க்கை ஏற்படும். இக்காலகட்டங்களில் பல புதிய காரியங்களை தொடங்கக்கூடியதாயிருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 26

அதிர்ஷ்ட நிறம்: சாம்பள், நீலம்

அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X