2024 மே 07, செவ்வாய்க்கிழமை

இந்தவார பலன்கள் (26.12.2010 - 01.01.2011)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (26.12.2010 - 01.01.2011)
 

 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அறிவுகூர்மையுடன் செயல்களில் ஈடுபட்டு பிறருக்கு முன்மாதிரியாக விளங்கும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தடைப்பட்ட வேலைத்திட்டங்களை வெற்றியடைய நண்பர்களின் ஒத்துழைப்புக்கள் பக்கபலமாக இருக்கும். குடும்ப உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள். பணவரவுகள் சிறிது தாமதத்தை ஏற்படுத்தக் கூடும். உயர் உத்தியோகத்தரை அனுசரித்து செல்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம். வியாபார பணிகளை திறமையாக செயல்படுத்துவதால் முன்னேற்றம் ஏற்படும். பொழுதுபோக்குகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். இசையில் நாட்டம் அதிகரிக்கும். இறைதியானங்கள், வழிபாடுகளில் ஈடுபடுவதால் மனஅழுத்தங்கள் நீங்கி உற்சாகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 31ஆம் திகதி மாலை 8.00 மணியிலிருந்து ஜனவரி 02ஆம் திகதி காலை 11.54 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு : இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கலையுணர்வுடன் திட்டங்களை ஆரய்ந்து வெற்றி பாதையை அடைய எண்ணும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் சுபகாரியங்களுக்காக அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த நண்பர்களின் நட்பு கிடைக்கக் கூடும். சிலர் ஆன்மீக யாத்திரைகள் செல்வதனால் நன்மைகள் ஏற்படும். தொழில் விருத்திக்கு அரச ஊழியர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்ககூடும். பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். புதிய பயணங்கள் செல்வதன் மூலம் ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும். தூய்மையான ஆடைகளை அணியலாம். பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படக்கூடும். இதனால் மனசங்கடங்கள் ஏற்படும். வார்த்தைகளில் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு வாழும் ஆக்கபூர்வமான சிந்தனைகளை கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்ப உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான திட்டங்களுக்காக பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு, இதனால் அதிக லாபம் கிடைக்கும். சுவையான உணவுகள் உண்ணலாம். பெண்களின் உதவிகள் மகிழ்ச்சியை தரகூடும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும் பணம் சேமிப்பதில் அதிக அக்கறை செலுத்தவும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். புதிய நண்பர்களின் நட்புக்கள் தேடி வருதல். அழகிய ஆடை, ஆபரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பார்வதி




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

செய்யும் வேலைகளை நுணுக்கமாகவும் மற்றவர்களை கவரும் வண்ணம் திருந்த செய்யும் கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சில காரியங்களில் முன்னேற்றம் பெற அதிக அலைச்சல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சுபவிசேடங்கள் மூலம் உறவினர்களின் வருகை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி செலவுகள் அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் பகைவர்களின் செயல்களினால் புதிய வாய்ப்புக்கள் பின்தள்ளபடும். வெளிபிரயாணங்களின் போது நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்ககூடும். இசையில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள். சாப்பாட்டில் வேண்டாவெறுப்பு தன்மை ஏற்படுதல். கேட்பார் பேச்சுக்களை கேட்டு நடப்பதை தவிர்க்கவும், இல்லாவிட்டால் மனசங்கடங்களை எதிர்நோக்க நேரிடும். நவீன திட்டங்களின் போது இடம்மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)




மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

ஆன்மீக விஷயங்களில் அதிக பற்றும் பகைவர்களுக்கு அஞ்சா உள்ளம் இயற்கையாக பெற்ற சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு மனதில் புதிய எண்ணங்கள் மேலோங்கும். சுற்றுலா பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். செலவுகள் சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் தடைகள் நீங்கி நவீன சாதனங்களை கொண்டு ஆதாயம் அடையலாம். தூய்மையான ஆடைகளை அணிதல். பெண்களுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளை நிதானத்துடன் பிரயோகிக்கவும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுவதனால் மனதில் சோர்வுகள் மறைந்து உற்சாகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்:
கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு:
பிரம்மா



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

சிரித்த முகத்தோடு அழகாக பேசும் திறனும் எதிலும் பொறுமையுடன் செயல்படும் குணமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பெரியார்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் பெண்களின் உதவிகள் கிடைக்க கூடும். சில திருட்டுக்களினால் மனதில் பயம் உணர்வுகள் தோன்றும். வியாபாரத்தை மேம்படுத்த அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் சில கஷ்டங்கள் வந்து நீங்கும். நிதானத்துடன் செயல்படவும். நண்பர்களிடமிருந்து புதிய செய்திகள் வந்து சேரும். ஒவ்வாத உணவினால் அஜீரண சம்பந்தமான நோய்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். நண்பர்களுடன் விநோதங்களில் ஈடுபடும்போது அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உரிய நேரத்தில் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
வழிபாடு: நவகிரகம்




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

பிறர் நிழலில் வாழ விரும்பாது கடின உழப்பினால் காரியங்களை சாதித்து வெற்றிபெறும் ஆற்றல் பெற்ற துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அதிக முயற்சியுடன் திட்டங்களை செயல்படுத்துவதனால் முன்னேற்றம் கிடைக்கும். தீய நண்பர்கள் சகவாசங்களை தவிர்க்கவும். வியாபார வளர்சிக்காக அரசாங்க உதவிகள், சேவைகள் கிடைக்க கூடும். சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறவினர்கள் மூலம் அழகிய ஆடை, உபகரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கும். பெண்களின் உபசரிப்புகள் மகிழ்ச்சியை தரகூடும். நட்பு வட்டம் விரிவடைதல். அறுசுவையான உணவுகள் உண்ணலாம். புதிய செய்திகள் திடீர் பயணங்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், மேலும் மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்





விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கவலைகள் மறந்து களிப்புமிகு முகத்துடன் கனிவாகப் பேசும், அதிக முன்யோசனையுடன் நடக்கும் விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபார சம்பந்தமான பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு, இதனால் மனதில் சிறு அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்யோன்யம் பலப்படும். புதுமையான பொருள் காணகிடைத்தல். இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். தொடங்கும் புதிய திட்டங்களை அலசி ஆராய்ந்து செயல்படவும். பணபிரச்சினைகளின்போது பிறரின் உதவிகள் நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் தேவை. பெண்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். சில பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இறை வழிபாடுகளில் நாட்டம் செலுத்துவதால் மனஆறுதல் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

உறுதிமிக்க எண்ணமும் கம்பீரமான தோற்றமும் மனதில் பட்டதை செய்யும் துணிவும் கொண்ட தனசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தடைபட்டிருந்த வேலைதிட்டங்களை உடனுக்குடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த புதிய செய்திகளை கேள்விபடுவீர்கள். தீய நண்பர்களுடன் அனாவசிய கருத்து வேற்றுமைகளுக்கு இடமுண்டு, நாவடக்கம் அவசியம். தொழிலில் சக ஊழியர்களின் அனுசரணைகள் கிடைக்கும். அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்படலாம், இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். மனதில் சலனங்கள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை தினசரி வாழ்க்கையில் பின்பற்றும் கொள்கை கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும். பிறர் மூலம் சில உதவிகள் கிடைக்க கூடும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகையினால் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும். பகைவர்களின் செயல்கள் மனகசப்புக்களை ஏற்படுத்தும், நிதானமான செயல்படவும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்களை கையாளுவதால் வெற்றி கிடைக்கும். உயர் உத்தியோகத்தரை அனுசரித்து செயல்படுவதனால் வீண் பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம். பொருள்வரவு ஏற்படக்கூடும். குலதெய்வ வழிபாடுகளில் அதிக அக்கறை செலுத்துவதால் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 25ஆம் திகதி காலை 10.29 மணியிலிருந்து டிசெம்பர் 27ஆம் திகதி மாலை 12.48 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

யதார்த்தத்தை புரிந்து எதார்த்தமாக பேசும் குணமும் ஆழ்ந்த சிந்தனைகளை கொண்டு செயல்படும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு உல்லாச பயணங்களில் ஈடுபடுவதால் புதிய அனுபவத்தை பெற்றுக்கொள்ளலாம். அன்றாட வேலை பணிகளை உற்சாகத்துடன் தொடங்குவீர்கள். தொழில் முயற்சிகளுக்காக சில இடமாற்றங்கள் லாபகரமாக இருக்கும். தூய்மையான ஆடைகளை அணிதல். பொன், பொருள் பரிசாக கிடைக்ககூடும். பணவரவுகளுக்காக அதிக அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் விட்டுக்கொடுத்து செயல்படுதல். நீண்ட தூரத்திலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. அரசாங்க வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 27ஆம் திகதி மாலை 12.48 மணியிலிருந்து டிசெம்பர் 29ஆம் திகதி மாலை 3.47 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு : இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

                   

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

கருத்தாழம் மிக்க எழுத்து திறமையும் பிறரை நம்பி எந்த காரியத்திலும் இறங்காத மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய காரியங்களில் சிறப்பாக பணியாற்றி முன்னேற்ற பலன்களை அடைவீர்கள். உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும், வார்த்தைகளில் நிதானம் தேவை. தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. ஆன்மீக அனுஷ்டானங்களில் ஈடுபடுதல். இசையில் அதிக நாட்டம் காட்டுவதால் மனஅமைதி கிடைக்கும். அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபார முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். சில சரும நோய்கள் வந்து நீங்கும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். திடீர் பயணங்கள் செல்வதன் மூலம் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.  

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 29ஆம் திகதி மாலை 03.47 மணியிலிருந்து டிசெம்பர் 31ஆம் திகதி மாலை 08.00 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு : இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X