2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘காதலின் விளைச்சல்’

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல், அன்புப் பெருவெளிக்கு காதலரை இட்டுச் செல்கின்றது. இருவரின் நெஞ்சில் சுரக்கும் பிரவாகம், அணை திறக்கப்பட்டதும் பீறிட்டு ஓடும் நீரை விட மேலானது. பொய்மையான காதலர்களுக்கு இந்த மன இயல்பு கிடையாது. வியாபாரி பொருட்களைக் காசு கொடுத்து வாங்கும் முறை போலவே, காதல், திருமணம் ஆகியவை, பேரம் பேசப்படுவதைக் காண்கின்றோம். 

திருமணம் என்பது பெண் என்பவள், ஆணிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பு என்று, ஒருதலைப் பட்சமாகச் சொல்லி விடுகின்றார்கள். 

ஆனால், ஆண் தனது எல்லாத் தேவைகளை மட்டுமல்ல, தன்னை இயக்கும் சக்தியாகப் பெண்தான்  செயற்படுகின்றாள் என்பதை உணருகின்றானா? அவனால் தனித்து இருக்க முடியாது. ஆறுதல், தேறுதல், அளிக்கும் வீரம் சாந்தம் அளிக்கும்  சக்தியாக இருந்து, கணவனையும் பிள்ளைகளையும் பாதுகாப்பவள் இவளே. 

காதல் வாழ்வின் பயன் திருமணத்தின் பின்ன​ரே ஆரம்பமாகின்றது. காதலின் ஆரம்பம் களிப்பு. திருமணத்தின் பின்னர், களிப்புடன் பொறுப்பும் இணைந்து விடுகின்றது. காதலித்துத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. மணவாழ்க்கையின் பின்னர்தான், காதலின் விளைச்சலை முழுமையாக அனுபவிக்க முடியும். 

வாழ்வியல் தரிசனம் 23/10/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X