2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சந்திப்புக்கள் சுவாரஸ்யமானவை

Princiya Dixci   / 2016 ஜூன் 15 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்ல சந்திப்புக்கள் சுவாரஸ்யமானவை. சிலரைக் கண்டாலே, அவரை ஏன் சந்தித்தோம் எனக் கூறுபவர்களும் உண்டு.

சந்திப்புக்களில் பலவகையுண்டு. எங்களால் விரும்பப்பட்ட, ஏற்கெனவே கண்ட சந்திப்பு, பொது நிகழ்ச்சிகளின் போது கிடைத்த நட்பு, பயணங்களின் போது என்றுமே தெரிந்திராதவர்களினூடான தொடர்பு, ஊடகங்களினூடாக ஏற்படும் நல்ல நட்பு, பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் வாரியாக ஏற்படும் தொடர்புகள் எனப் பலவாகும்.

இவைகள் எல்லாமே, எங்கள் மனதில் நீங்காத சந்திப்புக்களாக இருக்கலாம். ஒருமித்த கருத்துக்களுடன் மனதையொருவர் தொட்டுவிட்டால், அது நல்ல சந்திப்புத்தான்.

பல கோடி மக்களைக் கொண்ட உலகில், நல்ல ஒரு சிலரையாவது இணைக்கும் சந்தர்ப்பங்களைக் கைவிட வேண்டாம்.

வாழ்வியல் தரிசனம் 15/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .