2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச எலும்புருக்கி நோய் ஒழிப்பு தினம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று உலக எலும்புருக்கி நோய் ஒழிப்பு தினமாகும். எலும்பின் அடர்த்தியை பாதுகாத்துக்கொள்வதற்கும் எலும்புருக்கி நோய் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவதக்குமாகவே, இந்நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

எமது உடலை சரியான முறையில் இயங்கவைப்பதற்கு எலும்பு அத்தியாவசியமானதாகும். உடம்பிலுள்ள ஒரு எலும்பின் அடர்த்தி மிக வேகமாக குறையும் போது, எலும்பு முறிவுகள் மற்றும் பிற எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

ஹோர்மோன் மாற்றங்கள் ஏற்படும் போது, வயதான தோற்றம் ஏற்படுவதை போன்றே, வயதாகும் போது எலும்புருக்கி நோய் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். எனினும் இவற்றை முடிந்தவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளும் அன்றாட உடற்பயிற்சியும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

யோகா மற்றும் இலகுவான உடற்பயிற்சிகள் உடலிலுள்ள எலும்பை அடர்த்தியாக வைத்திருக்க உதவும். இதேவேளை, சிறுவயதிலிருந்தே நாம் உட்கொண்டு வரும் உணவுகள் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் எலும்புருக்கி நோயை ஏற்பட விடாது தடுக்கும். அதற்கு சிறுவயதில் நாம் உட்கொள்ளும் உணவுகளை மிகவும் ஊட்டச்சத்து மிகுந்தாக உட்கொள்வதன் மூலம், வளரும் எலும்புகளை மிகவும் உறுதியானதாக பேணி பாதுகாக்கமுடியும்.

கல்சியம், விட்டமீன் டி, விட்டமீன் சி, விட்டமீன் கே, ஸ்டிரோண்டியம், போரான், மக்னீசியம், பொசுபரசு மற்றும் கொலாஜன் போன்றவை அடங்கிய உணவுகள், உடலை கட்டுக்கோப்பாக பேணுவதற்கு உதவும். இதேவேளை, மிகவும் அமிலத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் குடிபானங்கள், அதிகளவான சீனி, சோடா மற்றும் அதிகளவான இறைச்சி வகையை சரியான அளவில் உட்கொள்வதன் மூலம் எலும்புருக்கி நோயை மாத்திரமல்லாது உடலில் ஏற்படும் பாரிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.

எனினும், இந்த எலும்புருக்கி நோயானது இறைச்சி உண்போரை விட மரக்கறி வகைகளை உண்போருக்கு அதிகளவில் ஏற்படுவதாக புதிய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. விலங்குகளிடமிலுள்ள புரதங்களை விட மரக்கறிகளில் உள்ள கனிம ஏற்றத்தாழ்வுகளின் அமிலத்தன்மை அதிகம் என்பது இதற்கு மறைமுகமான காரணியாக அமைந்துள்ளது.

மேலும் மருந்துகளை அதிகம் உட்கொள்வதாலோ, சிகரெட், மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ளவதாலோ எலும்புருக்கி நோய் ஏற்படுகின்றது என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எலும்புகள் வளர்ச்சியடைவதற்கென்று மருந்துகள் எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில், அதற்கு ஈடான ஊட்டச்சத்துள்ள உணவுகளை அன்றாடம் உண்ண வேண்டியது இன்றியமையாததாகும்.

இன்றைய காலகட்டத்தில் முதியவர்களுக்கு எலும்புருக்கி நோய் ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். எனினும் ஒரு சுகாதாரமான உணவு முறையையும் உடற்பயிற்சிகளையும் அன்றாடம் மேற்கொள்வதற்கும் மூலமோ அல்லது கிழமைக்கு 4 நாட்களுக்கு செய்வதன் மூலமோ எலும்புருக்கி நோய் ஏற்படுவதை முடிந்தளவு கட்டுப்படுத்த முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .