2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘திருந்தியோரை மன்னிக்கவும்’

Editorial   / 2017 டிசெம்பர் 01 , பி.ப. 06:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

ஒருவர் சில பொய்களைச் சொல்லி, அவை ஏனையவர்களால் நிரூபிக்கப்பட்டால், அவர் நம்பிக்கையற்ற, ஏமாற்றுப் பேர்வழி எனப் பிரகடனப்படுத்தப்படுபவர் ஆகின்றார். 

இதனால் ஒதுக்கி வைக்கப்பட்ட நபராகவும் கருதப்பட இடமுண்டு. இத்தகையவர்களால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் அவர்களின் குடும்பத்தினரேயாவர். 

பொய்மையாளரிடம் பொறுப்புகளைக் கையளிக்க எவர் விரும்பப் போகின்றார்கள்? வாய்மை உள்ளவர்கள் ஏழ்மை நிலையில் வாழ்ந்தாலும் போற்றப்படுவார்கள். 

எனினும், தங்களுக்கு உண்டான கெட்ட பெயரை, நீக்கிக் கொள்ள பிராயச் சித்தமாகச் சமூக நலன் சார்ந்த விடயங்களில் புலனைச் செலுத்தித் தங்களைத் தூய்மைப்படுத்துதலே அதி சிறந்த நன்மார்க்கமாகும். திருந்தியோரை மன்னித்து, நிரந்தர நல்லோராக மாற்றுக.  

     வாழ்வியல் தரிசனம் 10/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 1

  • siva Sunday, 03 December 2017 04:40 PM

    golden words

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X