Princiya Dixci / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தவறுகளைப் புரிபவர்களே அந்தரங்க வாழ்க்கையைத் தேடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையைச் சொல்லித் திரியத் தேவையில்லை.
சொல்ல வெட்கப்படும் சின்ன விடயங்களைக் கூட சொல்ல விரும்பாமல், மனதில் புதைத்து வைப்பவர்கள் அதனூடு துன்பங்களில் துவண்டு போவதுமுண்டு.
மனம் விட்டுப் பேசுவதில் ஒருசில நண்பர்களையாவது வைத்திருந்தால் நல்லது. திறந்த மனசுக்காரர் நிறைந்த வாழ்வு வாழுகின்றார்கள்.
அந்தரங்கம் இல்லா வாழ்வு ஆரோக்கியமானது. அந்தரங்கம் இல்லாத மனுஷர்கள் கொடுத்து வைத்தவர்கள். நெஞ்சில் வஞ்சகம் இல்லாதுவிடில் அச்சம்தான் ஏது?
சுந்திரப்புருஷர்கள் அல்லவே இவர்கள்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .