Princiya Dixci / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாவம் செய்யும் கருவியாக முதற்கண் தலைமை வகிப்பது நாக்குத்தான்‚
நாக்கு நோக்கம் அறியாது புலம்பும், அலற்றும் எங்கள் பேச்சு மூளையில் இருந்து மட்டுமல்ல, நல் இதயத்தினூடாகத் தெளிந்த பன்னீர் போல் தூவப்படல் வேண்டும்.
அழகும், ஆற்றலும், கல்வியறிவும் இருந்தாலும் கூட நாக்கு சுத்தம் இன்றேல் அவர்களின் கௌரவம் களங்கமாகிவிடும்.
கலவரங்களை ஏற்படுத்தும் போராயுதமாக நாக்கைத்தான் அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றனர். இதன் ஓசை கொடூரமான
பீரங்கிகளை, ஏவுகணைகளை விட வீச்சுக் கூடியது. வம்பாக உரையாடுவதை விட அன்பாகப் பேசுவதே சுயமானதும் இனிமையானதுமாகும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .