2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 06/11/2015

Princiya Dixci   / 2015 நவம்பர் 06 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னப் பிள்ளைகளின் கேள்விகள் பல சிந்தனையைத் தூண்டுவனவாக அமையலாம். அவர்களின் கேள்விக்கணை எமது அறிவின் திறனைக் கூட அளக்க வல்லது.

சிறுவன் ஒருவன் தனது தந்தையாரிடம் நல்லது எது கெட்டது எதுவெனக் கேட்டான். நற்காரியங்களைச் செய்வது நல்லவை, துஷ்ட காரியங்களைச் செய்வது கெட்டவை என்றார்.

அப்படியான நல்லதை விடுத்து ஏன் கெட்டவைகளைச் செய்யவேண்டும் எனத் திருப்பிக் கேட்டான். தந்தையாரும் அவனது பராயத்துக்கேற்ப பொறுமையுடன் இது பற்றி விவரிக்கலானார்.

சின்னச்சிறுசுகளுக்குத் தெரியும் நியாயங்களை, ஒழுக்கங்களை நாங்கள் அவர்களிடம் இருந்தும் கற்க வெட்கப்படத் தேவையில்லை.

நல் உணர்வோடு பேசும் சிறார்களை உள்ளத்தில் நிறுத்துங்கள்‚

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .